18.07.2021 ஞாயிறு முதல் 25.07.2021 ஞாயிறு வரை ) எதிர்காலம் குறித்த இந்தியா , தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணை 

அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !! 
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !! 
ஆன்மீகத்தில் அரசியலையும் , அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் 

எதிர்காலம் குறித்த 
இந்தியா , தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த 
மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல் (ஜீவநாடி)

(பிலவ வருடம் ஆடி மாதம் 2 ம் திகதி முதல் ஆடி மாதம் 9 ம் திகதி வரை  18.07.2021 ஞாயிறு முதல் 25.07.2021 ஞாயிறு வரை ) 
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed . 
1. தவராசனே அரங்கா வாழ்க 
தனிப்பெருங் கருணை வடிவாக 
அவனியில் அவதாரம் புரிந்த ஞானி 
அரங்கனுன் பெருமை கூறி அகத்தியன் யானும் 
2. யானும் இந்தியா தமிழகம் தன்னில் 
இயம்பிடுவேன் பிலவ நள்ளி திங்கள் 
ஞானமுள உபயதிகதிமேல் நவதிகதி வரை 
நடக்கும் நிகழ்வாக எதிர்காலபலன் குறித்த வார ஆசி 
3. ஆசியை இனிதே உரைப்பேன் 
அகத்தியன் கட்டளையாக எண்ணி 
நேசம்பட இந்திய தமிழக ஆளுமை 
நீதி வழுவா கருணைபட நடந்திட 
4. நடந்திட மக்களை வதைக்கின்ற 
நச்சுக்கிருமி அல்லலும் விலகியே 
இடரில்லாத பெரும் பாதுகாப்பை 
இந்தியா தமிழகம் தானாக அடையும் 
5. அடையவே வரிச்சுமைகளை கூட்டா 
ஆதரவுபட நடுவண் தயவு காட்டி 
தடையற மாநில உறவுகளை வளர்க்க 
தனித்துவம் பெற்று தலைமை சிறக்கும் 
6 , சிறக்கவே தமிழகத்தின் பெருமை அறியா 
சிறுமைகள் இனியும் தொடர்ந்தால் 
அறத்தின் பலமிலா பின்னடைவு 
அடைந்துமே வளர்ச்சிகளிலா பின்தங்கும் 
7. தங்கு தடையின்றி தமிழகமும் 
தக்க ஞானவான்கள் மேதைகள் 
ஓங்கும்படி ஆலோசனைபடவே 
உயர்ஞான ஆளுமை நடத்த 
8. நடத்தவே தமிழகம் தானும் 
நம்பிக்கைதனை நடுவணுக்கே 
தடையின்றி தரும் வழிகாட்டும் 
தருமஞான ஆளுமையாக உயரும் 
9 , உயரவே பிற மாநிலங்களும்
உயர்வாய் பின்பற்றி சிறந்து 
தயவான பாரதமும் தலைநிமிரும் 
தரணியே வியக்க வளர்ச்சி தேசமாக 
10. ஆகவே இந்த அற்புதம் நடக்க 
ஆன்மீக ஞான வழிகாட்டும் 
மகான்கள் தீர்க்கதரிசிகள் அருள்பெற 
மாற்றமும் நல்ல தேற்றமும் காணும் வார ஆசி முற்றே
-சுபம் 

            முருகப்பெருமான் துணை

மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் : 

    பிலவ வருடம் ஆடி மாதம் 2 ம் நாள் 18.07.2021 ஞாயிற்றுக் கிழமை முதல் ஆடி மாதம் 9 ம் நாள் 25.07.2021 ஞாயிற்றுக் கிழமை முடிய உள்ள காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் : எல்லையில்லா தவங்களை செய்து வெற்றி கண்டிட்ட தவராசனே ஆறுமுக அரங்கமகா தேசிகரே கருணையே வடிவாக இந்த உலகை காக்க அவதாரம் புரிந்திட்ட மகாஞானியே ஆறுமுக அரங்க மகானே உமது அற்புதமான பெருமைகளை உலகறியக்கூறியே அகத்திய மகரிஷி யானும் பிலவ வருடம் ஆடி மாதம் 2 ம் நாள் 18.07.2021 ஞாயிற்றுக் கிழமை முதல் ஆடி மாதம் 9 ம் நாள் 25.07.2021 ஞாயிற்றுக் கிழமை முடிய உள்ள காலத்தில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி . 
    அகத்திய மகரிஷி எமது அறிவுரைப்படி இந்திய தமிழக ஆட்சியாளர்கள் எமது வார்த்தைகளை கட்டளையாக ஏற்று நீதிநெறி வழுவாது கருணையோடு ஆட்சி செய்திட மக்களை வாட்டி வதைத்து உயிர்பலியாக்கும் கொடிய நச்சுக் கிருமி தாக்குதல்களும் நாட்டில் குறைந்து விலகிடும் . துன்பமற்ற நல்ல பாதுகாப்பை தேசம் விரைந்து அடையும் . 

    மத்திய அரசு , மாநில அரசுகள் மீதும் மக்கள் மீதும் தயவுடன் நடந்து மக்கள் மீது உண்டான வரிச்சுமைகளை அதிகரிக்காமல் தயவுடன் நடந்து மத்திய மாநில அரசுகளிடையே உண்டான நட்புறவை வளர்த்து வர தலைமைகள் எல்லாம் தனித்துவம் பெற்று சிறப்படையும் . தமிழகத்தின் பெருமைகளை அறியாமல் தமிழக அரசின் மீதான சிறுமையான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் மத்திய அரசிற்கு அறத்தின் , தர்மத்தின் பலம் குறைந்து வளர்ச்சியில்லாமல் நாடு பின்னடைவை சந்திக்கும் . 

    தமிழக அரசு ஞானம் மிகுந்த ஞானவான்களை மேதைகளை மதித்து அவர்களை அழைத்து ஆலோசனைகளை செய்து உயர்வான ஞானம் மிக்க அறிவார்ந்த ஆட்சியை நடத்தினால் தமிழகமும் நம்பிக்கையுள்ள நல்தேசமாக மாறி மத்திய அரசிற்கே இந்திய தேசத்திற்கே முன்னோடியான மாநிலமாக விளங்கி மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் வழி காட்டும் மாநிலமாக மாறி தரும ஞான ஆட்சியுடைய மாநிலமாக விளங்கிடும் நிலை உயரும் . மற்ற மாநிலங்களும் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடந்து சிறப்படைந்து பாரத தேசமே தலைநிமிரும் உலகமே வியக்குமாறு அற்புத வளர்ச்சி நிலையை பாரத தேசம் அடைந்திடும் . 

    இந்தவித அற்புதங்கள் நிகழ்ந்திட வேண்டினால் ஞானவழி காட்டும் ஞானகுருக்கள் , மகான்கள் , தீர்க்கதரிசிகளின் ஆசியை அருளை பெற்றிட நல்ல மாற்றங்களை , பலவிதமான முன்னேற்றங்களையும் கண்டு மேன்மையடையும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.

-சுபம்
ஜீவநாடி நாட்டு மக்களுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *