18.04.2020 மகான் நகுலன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் நகுலன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
18.04.2020, சனிக்கிழமை

#காத்து அருளும் கலியுக ஞானியே
கந்தவேலனாய் வந்த #தவசியே
#சித்தர் கூட்டம் அரணாய் வாய்த்த
சிறப்புதரும் ஏழாம்படைவீட்டு #குருராசனே

#அரசனே அரங்கனே உன் பெருமைகூறி
அருளுவேன் #நகுலன் யானும்
தரணியில் #சார்வரி தகர்திங்கள்
தக்க பஞ்ச திகதி #காரி வாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 5ம் நாள், 18.04.2020 சனிக்கிழமை)

வாரமதில் #அருள்பிரசன்ன ஆசி
வழங்குவேன் உலகோர் #நலம்பெற
சோரமில்லா ஞானயுகம் படைக்க
சுப்பிரமண்யர் தயவாக வந்த தேசிகன்

தேசிகன் #துணை கண்டு வர
தேசமெல்லாம் #அறம் பெருக
#ஆசி தீட்சை அரங்கமகானிடம்
அடைந்து அன்னதானம் செய்துவர

வருகவே உலக மக்களுக்கு
வரமென #வல்லமை கூடும்
#முருகப்பெருமான் வழிபாட்டு முறையை
முழுமைபட #வணங்கி உலகோர்வர

வருகவே எங்கும் மக்களிடை
வந்தடையும் உயர்குணம் #மனபலம்
தரும சிந்தைகளும் பெருகியே
#தன்னார்வ தொண்டு மிக்கவர்களாகி

ஆகியே உலகோர் #சிறப்பர்
அரங்க ஞானி #காட்டுகின்ற
#அகிலம் வியக்கும் சன்மார்க்க வழி
#அறநெறியை ஏற்று மக்கள் பரப்பிவர

வருகவே கலித்துன்பமாக வந்த
வதையான #நச்சுக்கிருமி துன்பம்
தருமபலம் பெருகவே #தானா விலகும்
தரணியோர் சுய #கட்டுப்பாடு கொண்டு

கொண்டு #உண்மை நெறியை
குறையிலா #பின்பற்றி வருகவே
உண்டான சிக்கல் விலகும்
உலகில் மனிதன் தன்னை #பலமென எண்ணி

எண்ணி #இயற்கை விதி மீறி
இறைவனை மறந்து துவேசித்து
எண்ணம் வழி மிருகநிலை கொண்டு
இடராக உயிர்கொலை செய்துவர

வருகவே துன்பம் பேரிடராக
வலம்வரும் கட்டுக்குள் அடங்கா
தருமமோடு #முருகா எனும் சரணடைவு
தரணியோர் காணவே பாதுகாப்பாக மாறும்
அருள்பிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –
முருகப்பெருமாம் துணை
மகான் நகுலன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

அளவிலாது செய்திட்ட தர்மத்தினாலும் #பலஜென்மங்களாக செய்த தவத்தின் பலத்தினாலும் இவ்வுலகை காத்து அருள் செய்கின்ற #யுகமாற்ற கலியுகஞானியே முருகப்பெருமானாய் வந்து உதித்த மகா தவசியே #சித்தர் கூட்டத்தையே பாதுகாப்பாய் அரணாய் அமைத்துக்கொண்ட ஏழாம்படைவீட்டின் #நாயகனே உலகின் ஒப்பற்ற சற்குருவே #குருவிற்கெல்லாம் குருவாய் விளங்கும் குருராசனே ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது பெறுமைகளை #உலகமெலாம் கூறியே உலக நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் 18.04.2020 சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே நகுலன் யானும் அருள்பிரசன்ன ஆசி நூல்தனையே உரைக்கின்றேன் என்கிறார் மாகன் நகுலன்.

குற்றமற்ற ஞானயுகத்தினை இவ்வுலகினில் #படைத்திட வேண்டி #ஞானப்பண்டிதன் முருகப்பெருமானின் #அவதாரமாக வந்துதித்திட்ட ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #வலிமைமிக்க துணையினை பெரும்விதமாய் உலகோர் அரங்கனை குருவாய் ஏற்று அரங்கமகானிடத்து #தீட்சை உபதேசங்களை அடைந்து அரங்கரின் தர்மநெறிகளை ஏற்று உலகமெலாம் அன்னதானம் செய்து வரவர உலகமக்களுக்கு வல்லமைகள் ஞானிகளின் அருளால் #வரங்களாக கிடைக்கப்பெற்று உயர்வடைவார்கள். #உண்மை ஆன்மீக வழிபாட்டு முறையாகிய #ஜோதி வழிபாட்டு முறையான முருகப்பெருமானின் #சரவண_ஜோதி வழிபாட்டினை உலக மக்கள் நம்பிக்கையோடு செய்து வரவர உலகமெங்கும் மக்களிடையே உள்ள #தீமையான குணங்கள் மாற்றமடைந்து #உயர்வான குணங்கள் அதிகமாகும் மக்கள் #மனோபலம் பெறுவர். அவர்களது #சுயநலம் மறந்து தன்னார்வ #தொண்டு உள்ளம் மிக்கவர்களாய் ஆகி சிறப்படைவார்கள்.

உலகமே #வியந்து போற்றும் உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகாதேசிகன் காட்டுகின்ற வல்லமைமிக்க #சன்மார்க்க நெறியை உலகோர் #வருகை தந்து அரங்கன் கூறும் #அற நெறியினை #முழுமனதோடு ஏற்று வாழ்வினில் #கடைப்பிடித்து வர கலியுகத்துன்பமாக இவ்வுலகிற்கு வந்துள்ள #நச்சுக்கிருமி வழியினாலான துன்பங்களெல்லாம் மக்கள் செய்யும் #தர்மபலம் பெருக பெருக தானாகவே விலகிவிடும். உலக மக்களெல்லாம் அவரவரும் உண்மையாக #சுயகட்டுப்பாடு கொண்டு நடந்து வருவதுடன் #அரங்கன் கூறும் உண்மை ஞான நெறியை ஏற்று #தளறாது பின்பற்றி வர அவரவர்க்கு உண்டான சிக்கல்கள் எல்லாம் தானே விலகும்.

உலகினில் #மனிதன் தன்னைத்தானே வியந்து #தான் பலம் மிக்கவன் என்று எண்ணி இயற்கையின் விதிகளை மீறி #இறைவனை மறந்து #துவேசித்து வாழ்வதோடு எண்ணத்திலே தூய்மையில்லாமல் #மிருகத்தின் நிலையை மனதில் அடைந்து உயிர்கொலை செய்து #புலால் உண்டுவருவதனாலே உலகினில் உயிர்கொலை பாதம் மிகுந்து மக்களுக்கு வருகின்ற இடர்களெல்லாம் #பேரிடராக மாறி உலகை #வலம் வந்து #அச்சுறுத்தும். #கட்டுக்கு அடங்காமல் மக்களை வதைக்கும். இத்தகைய நிலையிலிருந்து #விடுபட தர்மங்களை தாராளமாய் செய்து #முருகா எனும் நாமத்தினை மனமுருக செபித்து முருகப்பெருமானின் திருவடிகளிலே #சரணடைவு கண்டு தினம்தினம் தவறாமல் #பூஜைகள் செய்து வர உலகமே ஞானிகளின் அருள்பாதுகாப்பை பெறும் எனக் கூறுகிறார் மகான் நகுலன்.

– சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *