17.09.2020 மகான் கழறிற்றறிவார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

 முருகப்பெருமான் துணை

மகான் கழறிற்றறிவார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர்T . ராஜேந்திரன், M.A., B.Ed., 17.09.2020, வியாழக்கிழமை 1.சித்தர்கள் சூழ்ந்த ஞானக்குடில் சோதி வழிபாட்டின் பிரணவக்குடில் சத்திய நெறியை வேதமாக்கியே சற்குருவாக அரங்க ஞானி அருளும் 2. அருளும் ஆறுமுகனார் ஆளும் அகிலத்தின் ஏழாம் படை வீடு அருளைத் தேடி உலக மக்கள் வர அழிவிலாத் தன்மை அடைவரெனக் கூறி 3.கூறியே தவபிரசன்ன ஆசி குறைவிலா சார்வரி நங்கை திங்கள் தெரிவிக்க முதல் திகதி குருவாரம் (சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 1ம் நாள், 17.09.2020 வியாழக்கிழமை) தேசிகனுக்கு கழறிற்றறிவார் நாயனார் யானும் 4.யானும் உலக நலம் வேண்டியுரைப்பேன் உயர் சபை அரங்கன் சபை ஞானவான்களை படைக்கும் சபை ஞாலமதில் ஞானிகளை தேர்வு செய்யும் 5. செய்யும் வேலவன் சக்தி நிரம்பியிருக்கு சேவையென தொடர்ந்து வந்து அய்யன் முருகனை வணங்கி அரங்க ஞானியிடம் சரணடைய 6.சரணடைய சர்வ சூட்சுமம் பெற்று சக்தி மிக்கவர்களாகி உலகோர் பிரணவக்குடில் அருளமுதுண்டு பேராசான் பேரில் செபதபம் காண 7. காணவே உயர்த்தன்மை அடைந்து கருணை கூடி தயவு தெளிவு திடம் ஞானமாக அடைந்து உயர்வர் ஞானியரின் தரும சேவையை தொடர 8. தொடரவே கலியுகம் தன்னில் தொடர்ந்து வருகின்ற மக்கள் இடரிலா ஞானவான்கள் ஆகி இணையிலா தருமவான்களுமாகி 9.ஆகியே அரங்க ஞானி தேடும் ஆற்றல் மிக்க ஞானியர்களுள் அகிலத்தார் தேர்வாளர்களாகி அனைவரும் கலியுகம் மாற்றும் 10. மாற்றும் முருகப்பெருமான் துணை மகத்துவம் பெற்றவர்களாகி ஆற்றல்பட ஞானயுகமாற்றமும் ஆறுமுகன் ஆளுமையும் கண்டடைவர் 11.அடையவே அரங்கன் குடிலை அடைந்துவர உலகம் தானும் பீடை சோடை இன்றி உயர்வு பெறும் புகன்றிவந்த தவபிரசன்ன ஆசி முற்றே -சுபம்- https://youtu.be/dhOGi422_kMLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *