17.05.2020 முதல் 24.05.2020 இந்த வார நிகழ்வு மகான் அகத்தியரின் வார ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை
#அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
#தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை
கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

சார்வரி வருடம் வைகாசி மாதம் 04ம் திகதி முதல் சார்வரி வைகாசி மாதம் 11ம் திகதி வரை
(17.05.2020 ஞாயிறு முதல் 24.05.2020 ஞாயிறு வரை )
சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன், M.A.,B.Ed.

அழிவை நோக்கிச் செல்லும் மானிடா
#ஆராய்ச்சி என்று கூறி பலவகை
#இழிவான செயல்கள் பலசெய்து
இதுகாலம் மனிதனே மனிதனை #அழிக்கும்

அழிக்கும் இயற்கைக்கு #எதிராக
#ஆற்றல் எனக்கூறி அழிவை
#பழி நோக்கில் கொண்ட மனிதா
பாருலகில் இயற்கையை #மறந்த குற்றம்

குற்றமே #வினையாகி பரவிவர
கூறிடுவேன் இந்தியா தமிழகத்தில்
உற்றதொரு #சார்வரி விடை திங்கள்
உயர்வான சதுர்திகதி மேல் லாப திகதி வரை நடக்கும்

நடக்கும் #வார நிகழ்வாக எதிர்கால பலனை
ஞான #தேசிகன் கேட்க #அகத்தியனும்
தடையற வார ஆசியாக உரைப்பேன்
தமிழகம் புண்ணிய பூமியாக இருந்தும்

இருந்தும் #இக்கட்டான இந்தநிலையில்
இடர்களை #களையும் தன்மையில்லா
#வருந்த மக்கள் #மதி கெடுக்கின்ற
#வதைக்கின்ற செயலை #மதுவழிசெய்தது

செய்தது அரச #வரவு என்றாலும்
செய்கைவழி #அழிவின் தன்மை
அய்யமுற #மிகுதியாகி சிக்கல்
அழிவுமாகி #செலவுமாகி கூடும்

கூடவே #கட்டுப்பாட்டை விதைக்கா
குவலயத்தில் #மதுவழி செயல்பாடு
நடந்தால் #பலகுடி கெடுவதுடன்
#நச்சுக்கிருமி தாக்கம் #வளர்ந்து பரந்து

பரந்து #தமிழகம் இந்தியாவில்
#பாதிப்பு மிகுதி காணக் கூடும்
பரந்த #இந்தியா தமிழகத்தில்
பாதிப்பை நீக்கும் தெய்வ பலமிருக்க

இருக்கவே ஆனாலும் #மதுவழிபலகேடான
இயற்கைக்கு #எதிர்மறையான செயலாக
வருத்தமுற #குற்றமும் களவும்
#வலுக்க இருக்க அவசியம் ஆளுமை

#ஆளுமை ஞானிகளை இயற்கையை
#ஆண்டவனை நம்பி செயல்பட
வலுவான #தருமவான்கள் ஞானிகள்
வல்லமையான #ஆசிகள் கிட்டி

கிட்டியே இந்தியா தமிழகத்தில்
கிருமி வழி #துன்பங்கள் விடுபட்டு
கட்டமிலா #வளர்ச்சிநிலை காணும்
கட்டாயம் ஆறுமுக #ஞானி அரங்கன்

#அரங்கன் சுத்தநெறிக் #கொள்கை
#அறம்வழியில் ஆளுமை வருக
வரங்களாக சகல வகை #உதவி
வளர்ச்சியுடன் பாதுகாப்பும் #பெருகி சிறக்கும்
வார ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் #அகத்தியமகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :

சார்வரி வருடம் #வைகாசி மாதம் 04ம் நாள் 17.05.2020 #ஞாயிற்றுக்கிழமை முதல் சார்வரி வருடம் வைகாசி மாதம் 11ம் நாள் 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகள் :

அழிவை நோக்கி செல்லுகின்ற #மனித வர்கமே ஆராய்ச்சி என்ற பெயரில் பல வகையான இழிவான செயல்களை செய்து #மனிதனே மனிதனை அழிக்கின்ற வகையிலே #பலவிதமான அழிவுகளை உண்டாக்கி அதுமட்டுமல்லாமல் #இயற்கைக்கு எதிராக தனது ஆற்றல் என தன்னை #வியந்து அழிவை #நோக்கி சென்று பழிவாங்கும் நோக்கிலே அழிவுகளை உண்டாக்கும் பல கொடும் #செயல்களை செய்கின்ற மனித வர்கமே உன்னை #தோற்றுவித்த இயற்கையை நீ #மறந்து இயற்கைக்கு #எதிராக செயல்பட்ட குற்றத்தினால் அந்த குற்றங்களெல்லாம் #பாவ வினைகளாக மாறி உலகமெங்கும் நச்சுக்கிருமி வடிவிலே பரவிவருகின்றது. இந்த சூழ்நிலையிலே இந்தியாவிலும் தமிழகத்திலும் சார்வரி வருடம் வைகாசி மாதம் 04ம் நாள் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை முதல் சார்வரி வருடம் வைகாசி மாதம் 11ம் நாள் 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை எதிர்கால பலன்களாக வார ஆசி நூலாக அகத்திய மகரிஷியானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய #மகரிஷி.

தமிழகம் #புண்ணிய பூமியாக இருந்த பொழுதும் #இக்கட்டான இந்த #சூழ்நிலையிலே நாட்டினில் உண்டான துன்பங்களை களைந்து #காக்கும் தன்மை இல்லாது போய், #வருத்தமான சூழ்நிலை நிலவிவருகிறது. #மக்கள் மதியை கெடுக்கும் #மதுவழி சென்று மயங்கி நிற்பது ஆட்சியாளர்களுக்கு #வருவாய் என்றாலும் அந்த செய்கையானது மக்களை #அழிக்கும் தன்மை உடையது ஆதலால் அழிவின் #தன்மை #சந்தேகம் இன்றி நாட்டில் மிகுதியாகி சிக்கல்கள் உண்டாகி மக்கள் #அழிவு அதிகமாகி அரசுக்கு #பொருளாதார சுமையும் அதிகமாகக்கூடும்.

ஆதலினாலே #மக்களிடையே #தனிமைபடுத்துகின்ற #கட்டுப்பாட்டினை அரசு #விதிக்காமல் வருவாய்க்காக #மது வழி சென்று செயல்படுமே #ஆனால் மக்களின் #குடும்பங்கள் வீணாவதுடன் தற்சமயம் உலகை அச்சுறுத்தி வரும் நச்சுக்கிருமியின் #தாக்கம் பெருகி #பரவி தமிழகத்திலும் இந்தியாவிலும் #பாதிப்பு மிகுதியாக இருக்கும். ஆதலினாலே நமது தேசத்திலே பாதிப்பை #நீக்கும் வல்லமைமிக்க #தெய்வபலம் இருக்கின்றது #அதைவிடுத்து சரி செய்கிறோம் என்று கூறி #மதுவழி செல்வது மக்களின் #அறிவை மயக்கி அது இயற்கைக்கு எதிர்மறையான பல #தீயசெயல்களாக உருவாகி பலவிதமான #குற்றங்களை செய்து, #களவும் நாட்டினில் இனிவரும் காலம் #அதிகமாக இருப்பதினாலே #அவசியம் நாட்டை #ஆட்சி செய்வோர் ஞானிகளை #வணங்கி செயல்படுங்கள். இயற்கையின் போக்கிற்கு #அனுசரித்து இயற்கையோடு #இணைந்து செயல்படுங்கள். நமக்குமேல் #கடவுள் ஒருவர் உண்டு என்பதை நம்பி #பாவபுண்ணியங்களுக்கு பயந்து செயல்பட தர்மவான்களின் #ஒத்துழைப்பும் ஞானிகளின் #துணையும் ஆசியும் கிட்டி, இந்தியாவும் தமிழகமும் #கிருமியினால் உண்டாகின்ற துன்பங்களில் இருந்து #விடுபட்டு தடையற்ற #வளர்ச்சி நிலையை நாடு அடையும். ஆறுமுக அரங்கமகா #தேசிகரின் #சுத்த நெறிக் கொள்கையை ஏற்று தர்மத்தின் வழியில் ஆட்சியாளர்கள் வர அவர்களுக்கு சகல விதங்களான உதவிகளும் ஞானிகளின் துணையும் அருள் பாதுகாப்பும் பெருகி நாடு சிறப்படையும் என்கிறான் மகான் அகத்திய மகரிஷி.
– சுபம் –

https://youtu.be/kimAdn9SsTc


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *