17.05.2020 மகான் கல்லுளிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான் #கல்லுளிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
17.05.2020, ஞாயிற்றுக்கிழமை

#ஞானபலம் கொண்ட தவசியே
#ஞானயுகம் படைக்க வேண்டி
#வானவர்கள் துணைபட அரங்கன்
வல்லமைபட அமைத்த #பிரணவக் குடிலை

குடிலை ஞானிகள் #கூட்டமுடன்
#குருபரன் கந்தவேலனும் இறங்கி
குடிலை #நாடிவரும் மக்களை
குறையிலா #அருளாசி தந்து வர

வருகவே #வையகம் மாறுமெனக்கூறி
வழங்குவேன் #தவபிரசன்ன ஆசி
பெருமைபட #சார்வரி விடை திங்கள்
புகலுவேன் சதுர் திகதி கதிர் வாரம்
(சார்வரி வருடம் வைகாசி மாதம் 4ம் நாள், 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை)

வாரமதில் கல்லுளிச் சித்தர் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
பாரதனில் தரும ஞானமுடன்
#பரோபகாரம்பட உலக மக்கள்

மக்களெல்லாம் #அரங்கன் வழியை
#மனமுவந்து ஏற்று வருக
ஆக்கமுடன் #முருகப் பெருமானின்
ஆற்றல் தரும் #வழிபாடு தன்னை

தன்னையே மக்கள் பின்பற்றி
தவறாது பூசைமுறை தொடர
#அன்னதான வழி முறைகளை
#அகிலமெங்கும் நடந்திட பின்பற்றிட செய்து

செய்துமே #தருமபலம் பெருக்கிட
செப்பிடுவேன் #கலியுகம் தானும்
#மெய்ஞான பலம் பெருகியே
#மேன்மைதரும் ஞானயுகமாக மாறும்

#மாறுதலை செய்யவந்த ஞானி
மாதவசியின் #கரம்பட உலகோர்
மாறுதல் தரும் #தீட்சை ஏற்று
மக்களெல்லாம் தொடர்ந்து வருக

வருகவே #குருவருள் பலமும்
வல்லமையான #தீட்சை பலமும்
முருகப்பெருமான் #அருளும் துணையும்
முழுமைஞானமும் #கீர்த்தியும் பெற்று

பெற்றுமே அரங்க ஞானியரின்
#பேராற்றலான வழிகாட்டல்தனில்
#மாற்றம் இந்த உலகம் அடையும்
#மண்ணுலகே ஞானமிகு உலகமாகும்

ஆகவே #அரங்கன் மூலமாக
ஆறுமுகனே #நடத்தி வருகின்ற
மிகையான #உலகமாற்ற சேவையில்
மக்களெல்லாம் இணைந்துவர சடுதி மாற்றம்காண
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் கல்லுளிச் #சித்தர் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்:

ஞானபலத்தினை #அளவிலாது பெற்றிட்ட மகா தவசியே உலகினில் #ஞானயுகம் படைக்கவேண்டி #ஞானிகள் துணையுடன் #வல்லமைமிக்க ஏழாம்படைவீடாய் துறையூர் ஓங்காரக்குடிலை அமைத்திட்ட அரங்கமகாதேசிகரே உமது ஓங்காரக்குடிலை நோக்கி ஞானிகள் கூட்டமும் #குருபரன் கந்தவேலனும் ஓங்காரக்குடிலை #சார்ந்து #ஓங்காரக்குடில் நாடி வரும் #மக்களுக்கு நிறைவுடன் அருளாசிகளை வழங்கிவருகின்றனர். #உலகமக்களெல்லாம் ஓங்காரக்குடிலை நாடி வந்து #அரங்கர் ஆசி பெற இந்த உலகம் மாறும் எனக் கூறியே அரங்கமகானுக்கு தவபிரசன்ன ஆசி நூல்தனையே சார்வரி வருடம் #வைகாசி மாதம் 4ம் நாள் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே கல்லுளிச்சித்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கல்லுளிச் சித்தர்.

உலக #மக்கள் தர்மத்துடனும் ஞானத்துடனும் நடந்து #பரோபகாரம் மிக்கவராய் மாறி முருகப்பெருமானின் #ஆற்றலை அளவிலாது #தருகின்ற வழிபாடாம் #சரவணஜோதி வழிபாடினை #மக்கள் ஏற்று தினம் #தினம் தவறாமல் மக்கள் #வழிபாடுகள் செய்து வருவதுடன், தர்மங்களை செய்தும், தர்மபலன் பெருக்கி வரவர இந்த கலியுகத்தில் #மெய்ஞானபலம் பெருகி மேன்மைமிக்க ஞானயுகமாக இந்த கலியுகம் மாறும்.

மாபெரும் #உலகப்பெருமாற்றத்தை செய்ய வந்த உலக மகா ஞானி மகா தவசி ஆறுமுக அரங்கமகா தேசிகரின் சக்திமிக்க #தீட்சை #உபதேசங்களை ஏற்று மக்கள் உபதேச வழி நடந்து வர குருவருள் பலம் பெருகிடும் வல்லமைமிக்க #தீட்சை பலமும் அவர்களுக்கு கிடைத்து முருகப்பெருமானின் அருளையும் துணையையும் முழுமை ஞானமும் பெருமைமிக்க #புகழையும் பெற்று அரங்கமகானின் வழிகாட்டலில் இந்த #உலகம் மாற்றமடையும். இந்த உலகமே ஞான உலகமாக #மாறிடும்.

ஆதலினாலே உலகமக்களே #அரங்கர் மூலமாக ஆறுமுகப் பெருமான் நடத்தி வருகின்ற பெருமைமிக்க உலகப்பெருமாற்ற தொண்டிலே நீங்களெல்லாம் இணைந்து #தொண்டாற்ற உலக மாற்றம் விரைந்து உண்டாகிடும் எனக் கூறுகிறார் #மகான் கல்லுளிச் சித்தர்.
– சுபம் –

https://youtu.be/TMxXdS5nf5E


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *