17.04.2020 மகான் பீமசேனன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் பீமசேனன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
17.04.2020, வெள்ளிக்கிழமை

ஞான #சித்தே ஆறுமுக அரங்கா
#ஞானயுகம் படைக்க வேண்டி
தானதருமமுடன் #சைவ நெறியை
#தவமாக அருளும் ஞான தேசிகனே

தேசிகனே உன் #பெருமை கூறி
தெரிவிப்பேன் #அருள்பிரசன்ன ஆசி
ஆசிபட #சார்வரி தகரின் திங்கள்
அறிவிக்க சதுர்திகதி புகர் வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 4ம் நாள், 17.04.2020 வெள்ளிக்கிழமை)

வாரமதில் பீமசேனனும் அருள்வேன்
#வல்லமைபட #அரங்கன் தருமம்
பாரதனை #காக்கும் சக்தியாக
#பலமாக உலகில் இருந்து வர

வருகவே #அன்னதானம் எனும்
#வள்ளல் நெறியை அகிலமெங்கிலும்
தருமமாக #செய்து வருக
தரணியோர் #பின்பற்றி வருதலுற

வருதலுற #வையகம் எங்கும்
#வடிவேலனாரின் வழிபாடுதன்னை
பெருமளவில் #உலகோர் செய்து
#பிரணவம் ஓதி வருதல் காண

காணவே மக்களிடை தெளிவும்
கண்டுரைக்க #திருவருள் பலமும்
ஞானமுமாக #கூடி சிறக்கும்
நடைமுறையில் #கலித்துன்பமாக உள்ள

உள்ளான #நச்சுக்கிருமி வழி
#உயிர்பலி கஷ்டங்கள் விலகி
வல்லமையான #பாதுகாப்பு பெற
வரமென அரங்கஞானி தருகின்ற

தருகின்ற #அருளமுது உண்டு
தக்க மகாமந்திர #தீட்சை ஏற்று
முருகாஎன #செபதபம் செய்து
முழுமனதாய் #சரவணசோதி ஏற்றி வழிபாடு

#வழிபாடு தொடர்ந்து செய்துமே
வணங்கி அரங்க மகானின்
#அழியாமை தரும் ஞான #வழிமுறையை
#அகலா ஏற்று தொடர்ந்து வருக

வருகவே சர்வ பலம் பெறுவதுடன்
#வாழும் காலமே எந்தவித இன்னலும்
கிருமிவழி #மரணம் அண்டாதபடி
காப்பும் ஆயுள் பலமும் கீர்த்தியும்

#கீர்த்தியும் தேட்டு தனவளமும்
குறைவின்றி அதிவளமும் காண்பர்
#நேர்த்தியாக அரங்கன் வழிவர
நிலபுலகே அமைதியும் மேன்மையும் காணும்
அருள்பிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் #பீமசேனர் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

ஞானத்தில் #வெற்றிகண்டு மகா ஞானியாக #கலியுகம் வாழும் ஞானியாக வந்துதித்த #ஞானசித்தனே ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமாய் இவ்வுலகினில் ஞானயுகத்தினை #படைத்திட வேண்டியே உலக மக்களுக்கு #தானதருமந்தனை செய்திடச் செய்து #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த சைவ உணவினை மேற்கொள்கிறதாகிய சைவ #நெறியை போதித்து மக்கள் தான தருமங்களை செய்வதையும் சைவ நெறியையும் தளராது #தவமாக செய்திட செய்து அவர்களுக்கு நெறியில் #தளராது செல்ல #அருள் செய்து வழிநடத்தும் ஞானகுருவே ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 4ம் நாள் 17.04.2020 வெள்ளிக் கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல் தனையே பீமசேனர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் பீமசேனர்.

ஆறுமுக அரங்கமகான் செய்கின்ற #அளவிலாத தர்மங்கள் இவ்வுலகையே காக்கும் மகா சக்தியாக விளங்கி இவ்வுலகையே காத்து வருகின்றதப்பா ஆதலினாலே உலகமக்களே #வல்லமைமிக்க_அன்னதானங்களை உலகமெங்கும் மக்கள் எல்லாம் ஏற்று உலகமெங்கும் செய்து வரவேண்டும். ஞானத்தலைவன் முருகப்பெருமானின் வழிபாடுகளை தவறாமல் முருகப்பெருமானின் #திருநாமங்களை ஜெபித்து உருஏற்றி வரவர முருகப் பெருமானின் திருவருளால், தயவினால், கருணையால் மக்களிடையே #தெளிவு உண்டாகி ஞானமும் பெற்று சிறப்படைவார்கள்.

#தற்காலம் உலகிற்கு துன்பமும் உயிர்பலியும் உண்டாக்கி வருகின்ற நச்சுக் கிருமிகளால் உண்டான #துன்பங்கள் எல்லாம் விலகி உலகம் வல்லமைமிக்க பாதுகாப்பை பெற்று சிறப்படைய வேண்டுமாயின் #வரங்களாக ஆறுமுக அரங்கமகா தேசிகனார் #தருகின்ற அருள் #உணவாகிய குடில் உணவினை உண்டு உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகாதேசிகனாரிடத்து #தீட்சை உபதேசம் பெற்று முருகா முருகா என தினம் தினம் மறவாமல் ஜெப தபங்களை உபதேசிக்கும் அழிவிலாத #நிலையை அருளும் ஞான வழிமுறைகளை ஏற்று வாழ்வினில் கடைபிடித்து வர வர #வருகின்ற மக்கள் எல்லாம் எல்லாவிதமான பலத்தினையும் பெற்று சிறப்பதுடன் அவர்கள் வாழும் #இந்_ஜென்மத்திலேயே எந்தவிதமான துன்பமும் இல்லாமல், கிருமிகளால் மரணம் உண்டாகாமல் அருள் பாதுகாப்பையும், நீடிய ஆயுளையும் பெருமையான நிலைகளையும் அடைந்து சிறப்படைவார்கள் நல்ல #வருவாய் உண்டாகும் சகல வளங்களும் பெற்று சிறப்படைவர்.

ஆறுமுக அரங்க மகானின் தூய ஞான நெறியினை ஏற்று #கடைபிடித்த இவ்வுலகமே அமைதியும் மேன்மையும் அடையும் எனக் கூறுகிறார் மகான் பீமசேனர்.
– சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *