16.10.2012 | மகான் ஆண்டாள் அம்மையார் | அருளிய ஆசி நூல் | சித்தர்கள் செய்திகள் | ஓலைச்சுவடி தகவல்கள்

Facebook: https://www.facebook.com/Arangarkudil

Twitter: https://twitter.com/vaalaidevi

Blogger: http://tamillifedictionary.blogspot.in

Youtube full videos: https://www.youtube.com/arangartv

Ongarakudil Olai chuvadi: https://www.ongarakudil.in

To read Ongarakudil Books: https://www.ongarakudil.org

Whatsapp: https://wa.me/919444175629

மகான் #ஆண்டாள் அம்மையார் அருளிய ஆசி நூல்

 
16-10-12 #சித்தர்கள் #ஓலைச்சுவடி செய்திகள் தகவல்கள்

#அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

நித்ய ஆசி நூல்

வேண்டுபவர்க்கு வேண்டுவது அருளும் மகான் ஆண்டாள் அம்மையார் அருளிய ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,

ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,

டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837 16.10.2012

1.ஞானத்தின் ஆசானே அரங்கா 
#ஞானிகள் வழிநடக்கும் தவராசா 
ஞான #சன்மார்க்கம் வித்திட்டு 
ஞாலமதை கடைத்தேற்ற வந்த தேசிகா 
2. தேசிகனுன் பிரணவக் குடிலுக்கு (ஓங்காரக்குடில்) 
தெரிவிப்பேன் ஆண்டாள் யானும் 
நேசமுள நந்தன நங்கை திங்கள் 
நிலமதனில் முப்பான் திகதியதும் 
(நந்தன வருடம் புரட்டாசி மாதம் 30ம் நாள்) 

3. திகதியதும் நித்ய ஆசியுரைப்பேன் 
தெரிவிப்பேன் பிரணவக் குடிலை 
வகைபட இன்று தரிசிப்பார் 
வலம் வந்து அமுதுண்டு (உணவு உண்டு) சேவை செய்வார் (தொண்டு செய்பவர்)
4. செய்பவரெல்லாம் ஞான வளம்
சிறப்பறிவும் கண்டு உயர்வர் 
மெய்பட குருபக்தியில் மூழ்கி 
மேலான செபதபம் புரிபவர் 

5. புரிபவர்கள் ஆற்றல் கூடி 
புண்ணியகதி உயர் சக்தி அடைவர் 
தெரிவிப்பேன் ஞானி அரங்கரை 
தொட்டு வணங்கி பூஜிப்பவர் 

6. பூஜிப்பவர் பிறவிப் பயனை 
பூவுலகில் அடைந்து உயர்வர் 
நேசமுடன் மங்கள வாரமதில் (செவ்வாய்க்கிழமை) 
நங்கையர்கள் (பெண்கள்) ஆசானை அணுகி 

7. அணுகியே #மாங்கல்ய_தீட்சை 
அதனுடன் #திருவிளக்கு தீட்சை 
ஞானம் பெற அடைபவர்கள் 
நற்கதி யோக வாழ்வு பெறுவர் 

8. பெறுவரே அருள் பொருள் வளம் 
பேராசான் அரங்கனிடத்தில் உறுதிபட 
அவல் #தவநூல் தீட்சை 
உயர்வாக நாடி அடைபவர் (நோய் நீங்கி) 

9. அடைபவர்கள் தேக #சோடை மாறி 
ஆற்றல் கூடி ஞான வாழ்வில் 
சோடை போகா (வீண் போகாத) நடை போடுவர் 
சுப்ரமணியரும் இன்று ஆசான்வழி அருள 

10. அருளவே #ஞானம் கருதி நிற்போர் 
ஆசானை கட்டாயம் இன்று 
இருள் சேராதிருக்கக் கண்டுமே 
இனிதே தீட்சை வழிபாடு காண 

11. காணவே சகல சித்தி காரிய 
சித்தி யோக சித்தி பேணவே 
படிப்படியாய் கண்டு பேராசான் அருளால் 
புகழ் பெறுவர் நித்ய ஆசி முற்றே.

செவ்வாய்க்கிழமையான இன்று குடிலாசானை தரிசித்து பெண்கள் தங்கள் திருமணத் தடை நீங்க மாங்கல்ய தீட்சையும், திருவிளக்கு தீட்சையும் பெற்றால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் உயர்வதற்கும், தீர்க்க மாங்கல்ய பலம் பெறுவதற்கும், மாங்கல்ய தீட்சையும், திருவிளக்கு தீட்சையும் பெறலாம். திருவிளக்கு தீட்சை பெற்று அத்திருவிளக்கை தீபமேற்றி வீட்டில் தொடர்ந்து பூஜை செய்து வந்தால், விஷஜந்துக்களால் இடையூறு வராது, கள்வர்களால் தொந்தரவு வராது, தீயசக்திகளின் இடையூறு இருக்காது, மற்றவர்களால் செய்யப்படும் ஏவல்களால் எந்த பாதிப்பும் வராது. நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களது கொடுமைகள் நம்மை வந்து தாக்காது.

-சுபம்-

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *