16.06.2021 மகான் பெரியாழ்வார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் பெரியாழ்வார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் 

(பெரியாழ்வார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் | பெரியாழ்வார் பாடிய நூல்கள் | பெரியாழ்வார் பாசுரம் விளக்கம் பெரியாழ்வார் பாடிய பக்திப் பாசுரங்கள் எவை  periyalvar thirumozhi in tamil periyalwar pasuram)

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. 
16.06.2021 , புதன்கிழமை 

1 தருமனே கலியின் காவலனே 
தவசியாக வந்த அரங்கனே 
பெருமை மிக்க ஞான உலகம் படைக்க 
பேராசானாக வந்த தேசிகனே 

2. தேசிகனே உன் பெருமை கூறி 
தெரிவிப்பேன் யோகபிரசன்ன ஆசி 
ஆசிபட பிலவ மிதுன திங்கள் 
அறிவிப்பேன் உபயதிகதி புந்தி வாரம் 
( பிலவ வருடம் ஆனி மாதம் 2 ம் நாள் , 16.06.2021 , புதன்கிழமை ) 

3. வாரமதில் பெரியாழ்வார் யானும் 
வழங்குவேன் உலகோர் நலம்பெற 
சோரமான மக்கள் சமூகமும் 
சோடை நீங்கி மாற்றம் காண 

4. காணவே ஞான வேலியிட்டு 
கந்தப் பெருமான் சக்தியை 
ஞானமாக மக்களுக்கு அருளிவர 
நம்பிக்கை வைத்து வணங்கி 

5 . வணங்கி அரங்கன் திருவடியை 
வழிமொழிந்து பணிந்து தீட்சையை 
இணங்கி பாதுகாப்பு வேண்டி 
ஏற்று ஏழாம்படை வீட்டில் தங்கி 

6. தங்கி தவதியானம் செய்து 
தருமமாம் அரங்கன் சக்தியில் 
ஓங்காரம்பட முழங்கி சேவை 
உயர்வாக செய்து கொண்டு 

7. கொண்டுமே ஞான வழியை 
குறைபடா தொடர்ந்து வர 
தொண்டுடன் சேவை ஆற்றி 
தேசிகன் தயவுக்கு வர 

8. வருகவே மாற்றம் உண்டு 
வளர்ச்சி கண்டு உலகமக்கள் 
முருகப்பெருமானை வழிபடவே 
முழுமை ஞானம் கண்டு தேறுவர் 

9. தேறுவர் உலகை மாற்றும் 
தேசிகன் வழி ஞானிகள் ஆக 
மாறுவர் மரணம் வெல்லும் 
மகா சக்தி உள்ளவர்கள் ஆகி 

10. ஆகியே கலியுக மாற்றமும் 
அரங்கன் வழியில் நிகழும் 
அகிலம் வெல்லும் ஞானியே 
ஆறுமுகனாய் வந்த தவசியே 

11. தவசியே உன் தருமம் பெருகிட 
தனித்துவமும் பெரும் மாற்றமும் 
அவனி இலகுவாய் அடையும் 
அறிவித்த யோகபிரசன்ன ஆசி முற்றே 

சுபம்

What are the devotional hymns sung by Periyarvar periyalvar thirumozhi in tamil periyalwar pasuram

பெரியாழ்வார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் பெரியாழ்வார் பாடிய நூல்கள் பெரியாழ்வார் பாசுரம் விளக்கம் பெரியாழ்வார் பாடிய பக்திப் பாசுரங்கள் எவை periyalvar thirumozhi in tamil periyalwar pasuram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *