16.05.2020 மகான் கருவூர்தேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் #கருவூர்தேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
16.05.2020, சனிக்கிழமை

யோகசித்தே ஆறுமுக #அரங்கா
உலகை #மாற்ற மாதவசியாக வந்த
யுகத்தின் ஞானியே தேசிகனே
உலகில் உன் #தவபலம் மெச்சி

மெச்சியே #தவபிரசன்ன ஆசி
மொழிகுவேன் #சார்வரி #விடை திங்கள்
அச்சமற #சூலதிகதி காரி வாரம்
(சார்வரி வருடம் #வைகாசி மாதம் 3ம் நாள், 16.05.2020 சனிக்கிழமை)
அருளுவேன் கருவூர்தேவர் யானும்

யானும் உலக நலமுற உரைப்பேன்
#உயர்வான அரங்க ஞானி காட்டும்
ஞானவழிகளை ஏற்று வருக
ஞாலமதில் சர்வபலமும் கிட்டும்

கிட்டவே #கலியுகம் கண்ட
குறைகள் யாவும் விலகும்
கட்டமான #பொருளாதார குறை
கலியின் துன்பம் யாவும் அகலும்

அகலவே #ஆறுமுகப் பெருமான்
#அறமாக இறங்கி அருள
மகத்துவமிக்க #பிரணவக் குடிலை
மக்களெல்லாம் #வணங்கி வர

வருகவே உலகோர்க்கு #தேவைகள்
#வரமென பூர்த்தி ஆகும்
#முருகா எனும் செபதபங்கள்
மண்ணுலகம் எங்கிலும் முழங்க

முழங்கவே #ஞானயுக மாற்றம்
முழுமைபட சடுதி கண்டடையும்
கலங்கமற வெற்றியும் உயர்வும்
கவலையில்லா வாழ்வு வளம் பெறும்

வளம் தரும் மனோ பலம் தரும்
#வடிவேலன் சக்தியாக வரும்
நலம் தரும் #சடாட்சர தீட்சை
ஞானியரை அனுகி ஏற்று

ஏற்றுமே #தருமவழி தொடர்ந்து
#எல்லா வகையும் அரங்கஞானி
#ஆற்றல்மிக்க குடிலின் அமுதை
அன்பர்கள் #உண்டு ஆசிபெற

ஆசிபெற #சக்தி பெருக்கமுடன்
#ஆயுள் கீர்த்தி வளம் கிட்டும்
#வாசி வசமும் அரங்கன் ஞானவழி
வருகவே எளிதில் இலகுவாகும்

ஆகவே #ஞானிகள் காட்டும்
அறமிக்க #தருமநெறி வழிகளை
#மிகைபட ஏற்க #உலகமாற்றம் பெறும்
மொழிந்திட்ட #தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் கருவூர்தேவர் அருளிய #தவசூட்சும நூலின் சாரம்:

யோக ஞான #சித்தனே ஆறுமுக அரங்கமகானே இந்த உலகினை மாற்றி ஞான #யுகமாக ஆக்கிட #மகாதவசியாக வந்துதித்து #யுகமாற்ற ஞானியாய் விளங்கிநிற்கும் #அரங்கமகா தேசிகனே உமது தவ பலத்தினை மெச்சி சார்வரி வருடம் வைகாசி மாதம் 3ம் நாள், 16.05.2020 சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே #கருவூர் தேவர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கருவூர் தேவர். ஆறுமுக அரங்கமகா #தேசிகர் காட்டும் உயர்வான ஞானநெறிகளை ஏற்று மக்கள் #கடைபிடித்திட உலகிற்கு #சர்வபலம் கிடைத்திடும். கலியுகத்தினில் உண்டான #குறைபாடுகள் யாவும் #விலகிடும். இடர்பாடான #பொருளாதார குறைகளும் விலகிடும் கலியுகத் துன்பம் எல்லாம் விலகிடும்.

#முருகப்பெருமானே அறமாக இவ்வுலகினில் #இறங்கி அருள் செய்து வர அப்படிப்பட்ட எல்லையில்லாது #அறசக்தி மிக்க ஆறுமுகப் பெருமானின் ஆற்றல் மிக்க #துறையூர் ஓங்காரக்குடிலை உலகமக்களெல்லாம் #வணங்கி வர உலகமக்களின் #தேவைகளெல்லாம் வரங்களாக கிடைக்கப்பெற்று தானே #பூர்த்தியாகும் உலகமெங்கும் #முருகா என்கிற ஜெபதபங்கள் #ஓங்கி முழங்க ஞானயுகமாற்றமானது முழுமையாக விரைந்து நடந்திடும். #குற்றமற்ற வெற்றியும் மேல்நிலையும் #கவலையற்ற வாழ்வும் மக்கள் பெற்று #வளமிக்க பூமியாக மாறும்.

எல்லா வளங்களையும் மனோபலத்தையும் #தருகின்ற முருகப்பெருமானின் சக்தியாக #அரங்கர் மூலம் வெளிப்படுகின்ற சடாச்சர தீட்சையினை அரங்கரை அனுகிப் #பெற்று ஆங்கே ஞானிகள் அருளாசிகளால் சமைக்கப்படுகின்ற #அருளமுதாம் குடில் உணவை உண்டு அரங்கரிடத்து ஆசி பெற்று வர, அவர்கட்கெல்லாம் #சக்திகள் பெருகி #நீடிய ஆயுளும் வளமிக்க #வாழ்வையும் பெற்று சிறப்பார்கள். அவர்களுக்கு #வசப்படாத வாசியும் அரங்கர் ஞானவழியில் அவர்கள் வந்திட்டால் வாசி வசப்படுதலும் எளிதாகும்.

ஞானிகள் #காட்டும் அறம் மிக்க தரும நெறிகளை உலக மக்கள் அதிகளவு ஏற்றுக் கொண்டு #தர்மம் செய்து வர இந்த உலகம் மாற்றம் அடையும் எனக் கூறுகிறார் மகான் கருவூர் தேவர்.
– சுபம் –
https://youtu.be/xmSOOwHHJ80

16.05.2020 மகான் கருவூர்தேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *