16.04.2020 மகான் அர்ச்சுனன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் அர்ச்சுனன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
16.04.2020, வியாழக்கிழமை

மானுடம் காக்க #மண்ணுலகில்
#மாதரும #புரட்சி செய்துமே
#ஞானமருளும் ஆறுமுக அரங்கனே
ஞானியே உன் #பெருமை கூறியே

கூறியே அருள் பிரசன்ன ஆசி
குறையிலா #சார்வரி தகரின் திங்கள்
#குருவாரம் சூலதிகதி தன்னில்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 3ம் நாள், 16.04.2020 #வியாழக்கிழமை)
#குருராசன் கேட்க #அர்ச்சுனன் யானும் அருள்வேன்

அருளவே பிரணவக் குடிலை
#அணுகி வணங்கி தொடருபவர்க்கு
இருளெனும் #மாயை விலகும்
#எதார்த்தமும் வெற்றியும் காண்கும்

காண்கவே அரங்க ஞானியை #நாடி
#கந்தவேலன் பலமான #சடாட்சர தீட்சை
#உண்மைபட பணிந்து ஏற்று
உருதனை #நித்தம் நித்தம் செய்பவர்க்கு

செய்பவர்க்கு தேக மனோபலமும்
#சேவை வழி நாட்டமும் செயல்பாடும்
#மெய் ஞானமும் முழுமையான நிலையும்
முழுவதுமான பாதுகாப்பும் பலமும் கிட்டும்

கிட்டவே ஞானியரின் #தீட்சை
#கேட்காமலே வரம்பலவாக மாறும்
தட்டாது தேட்டு தன வழியில்
தன்னிகரில்லா நிலை உயர்த்தும்

உயர்வான #பொருளாதார பலமுடன்
#ஊழ்வினை அறுக்கும் சக்தியும்
தயவுமிக்க தருமவான்களுமாகி
#தரணியோர் அரங்கமகான் வழிகாட்டலில்

#வழிகாட்டலில் உலக மாற்றமாக
வையகமே தரும்பலம் பெறும்
அழியாமை எனும் நிலை பெருகி
அகிலத்தை விட்டு மரணத்துன்பம் விலகும்

விலகுமே நடப்பில் உள்ள
#வைரசு எனும் நச்சுக்கிருமியின்
மூலமான #உயிர்ப்பலி துன்பம்
முருகப்பெருமான் வழிபாட்டால் விலகும்

விலகியே மாதவசி தருகின்ற
வினைவெல்லும் #அறம் வழி
மக்கள் உலகம் எங்கும் ஏற்று வர
உடனே #மரணம் அல்லல் விலகி

விலகியே பாரதம் தொட்டு அகிலமே
#விரைந்து மாற்றமும் பாதுகாப்பும் பெறும்
#காலமதில் பிரணவ #நாதம் ஓங்கவே
கலியின் கஷ்டமெல்லாம் விலகும் அருள் பிரசன்ன ஆசி முற்றே.
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் #அர்ச்சுனர் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

மனிதகுலத்தினை காத்திட மனிதநேயத்தினை காத்திட வேண்டி உலகினில் #அளவிலாது தர்மங்களைச் செய்து மாதருமப் #புரட்சியை செய்து மக்களுக்கு தருமத்தின் மூலமாக ஞானத்தை அருளி மக்களை #ஞானவழி செலுத்தி காக்கின்ற முருகப்பெருமானின் அவதார மகா ஞானியே ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை 3ம் நாள் 16.04.2020, வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே #அர்ச்சுனன் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அர்ச்சுனர்.

உலகை காக்கவே அமைக்கப்பட்ட #ஏழாம்படைவீடாம் #துறையூர் ஓங்காரக்குடிலினை உலகோர் அணுகி வணங்கி நெறிகளை #ஏற்று பின்தொடர்ந்து வருகின்றவர்களுக்கு #இருளாகிய மாயை அவர்களை விட்டு விலகிடும் எதார்த்த நிலையை உண்டாக்கி நாடி வந்தவர்களுக்கு #வெற்றிகளை உண்டாக்கிடும் உத்தம மகா ஞானி அரங்க மகானை பயபக்தியுடன் பணிந்து வணங்கி #அண்ணல் அரங்கரிடத்து முருகப்பெருமானின் அருளாசிகளை பெற்று #அரங்கர் உபதேசிக்கும் மந்திரத்தினை பயபக்தியுடன் ஜெபித்து #உருவேற்றி தினம் தினம் மறவாமல் பூஜைகளை செய்து வரவேண்டும்.

தினம் தினம் தவறாமல் பூஜை செய்கின்ற மக்களுக்கு தேகபலமும் மனோ பலமும் உண்டாகும் தொண்டு செய்வதில் #தன்னார்வம் உண்டாகி மக்களுக்கு சேவைகளை செய்து புண்ணியபலம் பெருக்கி #மெய்ஞானம் உண்டாகி முழுமை பெற்ற நிலையை அடையும் #தகுதியையும் பெற்று சிறப்படைவார்கள் அவர்கள் முருகப்பெருமானின் முழுமையான அருள் பாதுகாப்பை பெற்று சிறப்படைவார்கள் உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்க மகா தேசிகரிடத்து பெறுகின்ற தீட்சைகளின் #வல்லமையினாலே தீட்சை பெறுகின்றவர்கள் கேட்காமலேயே #தானாக அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் கேட்காமலேயே வரங்களாக கிடைத்திடுமப்பா, வருவாய் பெருக்கமும் செல்வ சேர்க்கையும் உண்டாகி மக்களின் நிலையை உயர்த்தும் பொருளாதார பலம் பெருகும் நிலையை உயர்த்தும். பொருளாதார பலம் பெருகும் ஊழ்வினையினை அறுக்கும் வல்லமைகளை தந்தருளும். அவர்கள் எல்லாம் தர்மங்களை செய்து தர்மவான்களாகி சிறப்படைந்து ஆறுமுக அரங்க மகானின் சிறப்பான வழிகாட்டலில் உயர்வான நிலையை அடைவார்கள்.

ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் சீரிய வழிகாட்டுதலினால் உலகமக்கள் தர்மங்களை செய்திட செய்திட இந்த உலகமே மாற்றம் பெற்று தரும உலகமாக மாறிடும் உலகினில் உண்டாகும் அழிவுகள் எல்லாம் குறைந்து உலகினைப் பற்றியுள்ள #மரணத் துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். நடப்பில் உலக மக்களை துன்பப்படுத்தி மரணம் விளைவிக்கும் நச்சுக்கிருமிகளால் உண்டாகியுள்ள மரணத் துன்பம் எல்லாம் முருகப்பெருமானின் #வழிபாடுகளை உலகோர் செய்ய செய்ய முருகன் அருளால் விலகிடும். மகா தவசி ஆறுமுக அரங்கமகா தேசிகனார் கூறும் தர்மத்தின் #வழியில் உலகோர் சென்று தர்மங்களை தாராளமாய் செய்துவர வர உலகினைப் பற்றிய மரண துன்பம் பாரத தேசத்தினின்று விலகிடும் படிப்படியாக உலகமெங்கும் முருகப்பெருமானின் அருளால் விரைந்து விலகி உலகம் மாற்றங்களை அடைந்து அருள் பாதுகாப்பினை பெற்று சிறப்படையும்.

உலகமெங்கும் முருகப்பெருமானின் #திருநாமங்கள் ஒலித்திட ஒலித்திட கலியுகத் துன்பமெல்லாம் உடன் விலகி ஓடும் எனக் கூறுகிறார் மகான் அர்ச்சுனர்.

– சுபம் –
https://youtu.be/j9rtRAZiDIY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *