15.05.2020 மகான் கமலமுனிவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை
மகான் #கமலமுனிவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
15.05.2020, #வெள்ளிக்கிழமை

மாதவசியே ஞானச் #சுடரே
#மரணம் வெல்லும் சூட்சுமத்தை
#பூதலத்தில் ஞானமாக அருளும்
#பிரணவசித்தி கொண்ட அரங்கனே

அரங்கனே உன் தவபலம் #மெச்சி
#அருளுவேன் சார்வரி விடைதிங்கள்
வரங்களென உபயதிகதி #புகர் வாரம்
(சார்வரி வருடம் #வைகாசி மாதம் 2ம் நாள், 15.05.2020 வெள்ளிக்கிழமை)
வழங்குவேன் #தவபிரசன்ன ஆசி

ஆசியை கமலமுனிவர் யானும்
#அருளுவேன் உலகோர் நலம்பெற
#வாசி வென்ற சக்தி மிக்க
வல்லமையான ஞானிகள் #கூட்டம்

கூட்டம் #பிரணவக் குடிலை
குறைவின்றி #வழிநடத்தி வருக
#தட்டாது அரங்கன் சபையை
#தரிசிக்கும் உலக மக்களெல்லாம்

எல்லோரும் ஞானிகள் #துணைபட
இனிதே ஆற்றலுடன் #கீர்த்தியும்
வல்லமையும் #வரமும் பெறுவர்
வணங்கி நாம #செபம் தன்னை

தன்னையே #நித்தம் ஞானிகள் பேரில்
தட்டாது செய்து #தருமம்தொடர
இன்னலில்லா #பெருவாழ்வும்
இனிதே அருளும் #பொருளுமான வளம்கூடி

#வளம்கூடி உலகோர் சிறப்பர்
வரம் தரும் #அரங்கன் தரும
பலம்பெற்ற உலக மக்கள்
#பகை #போட்டி #வஞ்சம் நெருங்கா

#நெருங்கா பாதுகாப்பு கூடி
நிலமதனில் அமைதி #மகிழ்வுபெறுவர்
வருந்தா மன பலம் #தேகபலம்
வாழுங்காலமே #மேலவர்கள் துணைபட

துணைபட #சன்மார்க்கவழியில்
#தொடர்ந்து வரும் மக்களெல்லாம்
இணையிலா #சக்தி பெறுவர்
எக்காலமும் துன்பம் #அனுகாதவண்ணம்

வண்ணமுடன் #அழியாமை பெற்று
#வளமுறுவர் ஞான #பலமுறுவர்
எண்ணம் வழி தரும #சிந்தை
இனிதே #பெருக்கி வரும் மக்கள்

மக்களெல்லாம் மரணம் #வெல்வர்
#மறுமையும் வென்று சிறப்பர்
தேக்கமின்றி தேசிகனார் வழிவர
திருவருள் அடைந்து தேறுவர் உலகோர்
தவபிரசன்ன ஆசி முற்றே
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் கமலமுனிவர் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்:

#எல்லையில்லாது தவம் #இயற்றி வெற்றி கண்டிட்ட மகா தவசியே #ஞானஜோதி தரிசனம் பெற்று #ஜோதிச் சுடராய் #விளங்கும் ஞானச்சுடரே மரணத்தை வெல்லுகின்ற #சூட்சுமத்தினை உலகமக்களுக்கு ஞானமாக #தயவுடன் அருளுகின்ற ஓங்கார சக்திமிக்க அரங்கமகானே உமது தவபலத்தினை மெச்சி சார்வரி வருடம் வைகாசி மாதம் 2ம் நாள்,15.05.2020 வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல்தனையே கமலமுனிவர் யானும் #உரைக்கின்றேன் என்கிறார் மகான் கமலமுனிவர்.

#வெல்லற்கரிய வாசியை வென்று வெற்றிபெற்றிட்ட, மரணத்தைவென்ற மாமேருகளான வல்லமைமிக்க, ஞானியர்கள் #கூட்டம் ஓங்காரக்குடிலை எப்பொழுதும் #சூழ்ந்து அகலாது எந்த குறைகளும் இன்றி வழிநடத்தி வருகின்றார்களப்பா. ஆதலினால் அரங்கனின் #ஞானசபையாம் ஓங்காரக்குடிலை #தவறாமல் தரிசிக்கின்ற உலகமக்களெல்லாம் ஞானிகள் துணையுடன் #ஆற்றலையும் பெருமைகளையும் #வல்லமைகளையும் வரங்களையும் பெற்று சிறப்படைவார்கள். உலகமக்களே ஞானிகளை #வணங்கி அவர்களது #புனிதமான நாமங்களை நாமஜெபங்களாகஞானிகள் பேரில் மனமுருகி தினம் #தினம் மறவாமல் ஜெபித்து வரஅவர்களுக்கு #துன்பமற்ற பெருவாழ்வும் அருள்வளமும் பொருள்வளமும் மிக்க வாழ்வாகி உலகமக்களெல்லாம் சிறப்படைவார்கள். வரங்களை தந்தருளும் மகாஞானி அரங்கமகானின் தர்மத்தில் #பொருளுதவிகள் செய்து அரங்கனின் #தர்மபலத்தை பெற்ற உலகமக்கள் எல்லாம் பகையற்ற, போட்டிகளற்ற, வஞ்சனைகளற்ற வாழ்வாய் அருள் பாதுகாப்பை பெற்று அவை யாவும் #நெருங்காமல் அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை பெற்று சிறப்படைவார்கள். அவர்களுக்கு #மனோபலம் பெருகும் #உடல் பலம் பெருகும், அவர்களெல்லாம் இந்த ஜென்மத்திலேயே ஞானிகள் துணையுடன் சன்மார்க்க வழி செல்வர்.

#சன்மார்க்க வழியில் தொடர்ந்து வரும் #மக்களெல்லாம் ஈடுஇணையில்லாத சக்தியினை பெறுவார்கள். #எக்காலத்தும் அவர்களை எந்த துன்பமும் #அனுகாதவாறு அழிவிலாமை ஞானத்தை பெற்று வளம்பெறுவர் #ஞானபலம் பெறுவர். தர்மசிந்தை பெருகி உலகினில் தர்மங்களை #செய்து தர்மபலத்தை பெருக்கி வரும் மக்களெல்லாம் மரணத்தை வெல்வார்கள் மறுபிறப்பையும் வென்று சிறப்படைவார்கள்.

எவரெல்லாம் அரங்கரின் #ஞானநெறிகளை ஏற்று தடையின்றி பின்பற்றி வருகின்றார்களோ அவர்களெல்லாம் திருவருளை பெற்று #ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள் எனக் கூறுகிறார் மகான் கமலமுனிவர்.
-சுபம்-

https://youtu.be/bp9jctQ3uq4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *