15.04.2020 மகான் தர்மராஜர் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் தர்மராஜர் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
15.04.2020, புதன்கிழமை

காக்கும் #மாதவசியே அரங்கா
கருணை #வடிவாக வந்த தேசிகா
ஆக்கமுடன் உன் #வழிவருபவர்கள்
#அழியாமை காண்பரெனக் கூறி

கூறியே அருள்பிரசன்ன ஆசி
குறைவிலா சார்வரி தகர் திங்கள்
#ஈரான திகதி #கணக்கன் வாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 2ம் நாள், 15.04.2020 புதன்கிழமை)
இயம்பிடுவேன் #நவகிரக நாயகர்களை தொடர்ந்து

தொடர்ந்து #பஞ்சபாண்டவர்களும் அருள்வோம்
தேசிகனுக்கு தருமராசனும் அருள்வேன்
இடரில்லா #மாதரும் சக்தி
#எண்ணம் #செயலாக எங்கும் #பரவிட

பரவிடவே பாருலகம் தன்னில்
#பலி அழிவு அண்டா காப்பு கூடும்
#துறவியாக அரங்கன் காட்டும்
தூயநல் #அன்னதான நெறியை

நெறியை உலக மக்களெல்லாம்
நேர்மைபட #ஏற்றுத் தொடர
#வறுமை தானாக விலகும்
வல்லமையான அரங்க ஞானி

ஞானியரின் #உபதேச வழிகள்தனை
ஞானமாக மக்களெல்லாம் #எற்று
ஞானிகளை #பூஜித்து வர
ஞானவான்களாகி உலக மக்கள்

மக்களெல்லாம் #பேரிடர் துன்பங்களை
மரணத்தையும் வெல்லும் #பலம் பெறுவர்
தேக்கமின்றி ஞானக் குடிலாம்
தேசிகன் #பிரணவக்குடிலை நாடி வர

வருகவே #வடிவேலன் சக்தியாக
வரம் தரும் #அரங்கன் ஆசியால்
#முருகப்பெருமான் அருள் தயவும்
முழுமை #கீர்த்தியும் வருபவர் அடைவர்

அடையவே #சைவ நெறியுடன்
#அனைத்து வழிகள் தனிலும்
தடையற #தருமநெறி கடைபிடிக்க
தன்னார்வ தொண்டாக மாறி

மாறியே கலியுக மக்களுக்கு
#மாற்று சக்தியாக அரங்கஞானி
ஆறுதலும் #பெருந்துணையும்
ஆற்றலாகப்பரவி #காப்பு தரும்

காப்புதரும் #கலியுக ஞானியே
கந்தவேலன் சக்திமிகு தவசியே
#ஒப்புகொண்டு உன் வழிவர
உலகமே தருமஉலகாகி சிறக்கும்
அருள்பிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –
முருகப்பெருமான் துணை
மகான் #தர்மராஜர் அருளிய அருள்பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

இவ்வுலகை #காக்கும் மகாதவசியே அரங்கமகா தேசிகரே #கருணையே வடிவமாக வந்துதித்த ஞானதேசிகனே உறுதியுடன் உமது தூயநெறிகளை ஏற்று அதன்வழி நடந்து வருபவர்கள் அழிவிலாமை எனும் #நிலையை அடைவார்கள் என்று கூறியே உலகமெலாம் உனது #பெருமைகூறி உலக நலம் கருதி அருள் பிரசன்ன ஆசி நூல் தனையே சார்வரி வருடம் சித்திரை மாதம் 2ம் நாள், 15.04.2020 புதன்கிழமையான இன்றைய தினமதிலே நவகிரக நாயகர்களை தொடர்ந்து பஞ்சபாண்டவர்களில் ஒருவரான மகான் தர்மராஜர் ஆகிய யான் உரைக்கின்றேன் என்கிறார் மகான் தர்மராஜர்.

#இடர்கள் இல்லாத மாதர்ம சக்தி உலகமெங்கும் மக்களின் எண்ணங்களாக செயல்பாடுகளாக #பரவி வரவர பாருலகினில் இனி உயிர்பலிகளும் அழிவுகளும் வராமல் பாதுகாப்பு பெறும். #தன்னலமற்ற தனிப்பெரும் துறவியாக கலியுகஞானியாக அவதரித்துள்ள #அரங்கர் காட்டும் தூயநல் அன்னதான நெறியை உலகமக்களெல்லாம் உண்மையுடன் ஏற்று தொடர்ந்து செய்து வர உலகிலுள்ள #வறுமை தானே விலகிவிடும். #வல்லமைமிக்க அரங்கமகா தேசிகரின் உபதேச நெறிகளை உலகமக்கள் ஞானமாக ஏற்று உபதேச வழி நடந்து #தினம் தினம் மறவாமல் ஞானிகளை பூஜைசெய்து தர்மங்களையும் செய்து வர அவர்களெல்லாம் ஞானவான்களாகி பேரிடர் துன்பங்களையெல்லாம் #வெல்லும் பலத்தை பெறுவதோடு மரணத்தையும் வெல்லும் பலத்தையும் பெறுவர்.

#தடையின்றி அரங்கர் அமைத்திட்ட #ஏழாம்படைவீடு #துறையூர் ஓங்காரக்குடிலுக்கு உலக மக்கள் #பயபக்தியுடன் வந்து ஆங்கே முருகப்பெருமானின் #அவதாரமாக வீற்றிருக்கும் #வரம்தரும் அரங்கரின் ஆசியால் முருகப்பெருமானின் அருளையும் தயவையும் பெருமைகளையும் #குடில் நாடி வருவோர் அடைந்து சிறப்பர். #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த சைவ நெறியில் நடந்து எல்லா வகையிலும் தர்மநெறியினை கடைபிடித்து #தர்மத்தை தாராளமாக செய்து வர அவர்கள் செய்யும் எல்லா செயல்களும் #தன்னார்வ தொண்டாக மாறி கலியுக மக்களுக்கு #துன்பம் நீக்கும் மாற்று சக்தியாக உருவாகியுள்ள அரங்க மகா தேசிகரின் பெருந்துணையும் அவர்களுக்கும் உலகமக்களுக்கும் கிடைத்து #அருள் சக்தி ஆற்றலாக உலகெங்கும் பரவி உலகிற்கு அருள் பாதுகாப்பை உண்டாக்கும்.

#சகலவிதமான பாதுகாப்பையும் உலகோருக்கு தருகின்ற கலியுக ஞானியே முருகப்பெருமானின் சக்திமிகுந்த அவதார மகா தவசியே அரங்கா உம்மை உலகோர் #குருவாக ஏற்றுக்கொண்டு உமது உபதேசங்களை ஏற்று உம்மை #பின்தொடர்ந்து வர வர உலகமே தர்மஉலகமாகி சிறப்படையும் எனக் கூறுகிறார் மகான் தர்மராஜர்.
– சுபம்

1214-mahan-dharmarajar-aruliya-arul-prasanna-asi-nool-15.04.2020
YouTube: https://youtu.be/Ey-iJQmX1BE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *