14.06.2021 மதுரகவியாழ்வார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் | jeeva naadi | ஜீவநாடி

முருகப்பெருமான் துணை 
மகான் மதுரகவியாழ்வார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் 

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
14.06.2021 , திங்கட்கிழமை 

1. சத்திய ஞான சபை அமைத்து 
சகலருக்கும் ஞானமருள வேண்டி 
இத்தரையில் அவதாரம் புரிந்த 
ஏழாம்படைவீட்டு ஞானியே
 

2. ஞானியே உன் பெருமை கூறி 
ஞாலமதில் பிலவ விடை திங்கள் 
இனிமைபட முப்பானோர்திகதி சோமவாரம் 
( பிலவ வருடம் வைகாசி மாதம் 31 ம் நாள் , 14.06.2021 திங்கட்கிழமை ) இயம்பிடுவேன் மதுரகவி ஆழ்வார் யானும்
யானும் உலகநலம்பெற உரைப்பேன் 
உயர்வான நிலையும் பாதுகாப்பும் 
ஞானபூமியாக உலகம் அமைய 
ஞானிகளை வணங்கி வந்து 
வந்துமே அரங்கமகான் காட்டும் 
வள்ளல் நெறி மீறா வாழ்வுகாண 
சிந்தைதனில் ஞானிகள் பூசை 
செபதபங்களாக நித்தம் செய்து 
செய்துமே ஏழ்மை விரட்டும் 
சிறப்பான அன்னதானமதை 
அய்யமற உலகோர் செய்துமே 
அழியாமை தரும் ஞான தீட்சை 

தீட்சையை அரங்கன் வழி பெற்று 
திடமுற திருவடி பணிந்து தொடர 
கட்ட நட்டங்கள் தொடரா விலகும் 
கரும வினைவழி தாக்கங்களும் 

தாக்கங்களும் அனுகா பாதுகாப்பு 
தரும பலமாகி துணை வரும் 
நோக்கமாம் அரங்கன் அவதார 
நிலைத்தன்மை யாவருக்கும் கிட்டி 

கிட்டியே மக்களுக்கு மாற்றம் 
கிருமி வழி மரணமிடர் இல்லா 
கட்டமிலா பாதுகாப்பு மிக்க 
கருணை நிறைந்த ஞான வாழ்வாக
வாழ்வாதாரம் சிறந்து நன்கு 
வையகம் வளம் பெறும் 
தாழ்விலா சகல வழிகளிலும் 
தரணியே வளர்ச்சி காணும் 
காணவே ஞானயுக மாற்றம் 
கந்த வேலன் வழிபாடு பெருக 
ஞானவான்கள் எனும் படை 
ஞானிகள் ஆசிபட அமைந்து 
அமைந்து சடுதி மாற்றமும் 
அரங்கன் அவதாரம் வழிகண்டு 
அமைந்திடும் ஞான ஆட்சிகாலம் 
அறிவித்த யோகபிரசன்ன ஆசி முற்றே
-சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *