14.05.2020 மகான் கபிலர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை மகான் #கபிலர் அருளிய தவ #பிரசன்ன ஆசி நூல் #சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 14.05.2020, #வியாழக்கிழமை #வறுமை போக்கி காத்திட #வள்ளலாய் வந்த ஞானியே #தருமபலம் மேலும் கூட்டிட தரணி #பாதுகாப்பு பெறுமெனக்கூறி கூறியே தவபிரசன்ன ஆசி #குறையிலா சார்வரி விடை திங்கள் தெரியவே #ஏக திகதி குருவாரம் (சார்வரி வருடம் #வைகாசி மாதம் முதல் நாள், 14.05.2020 வியாழக்கிழமை) தேசிகனுக்கு கபிலர் யானும் யானும் உலக #நலமுற உரைப்பேன் #உயர்வான குரு அரங்கன் #ஞானயுகம் படைக்க வந்த ஞானியாகும் #அவர்வழி மக்கள்வர வருகவே #நிலைமைகள் மாறும் #வதைத்திடும் கிருமி வழி பேரிடர் #பெருகிடும் உயிர்பலி அல்லல் #பிரச்சினைகள் அனைத்தும் விலகிட விலகிட #வேலவன் அருளாய் #விசாலமாய் வந்த மாதவசி #காலம் வெல்லும் சக்திமிகு #கந்தகோட்டம் பிரணவக்குடிலை குடிலை #நாடி உலகமக்கள் குறையிலா #தீட்சை ஆசிபெற தேடியே அரங்கன் குடில் #அமுது #திருவருள் தரும் அமுதாக எண்ணி #எண்ணி உலகோர் உண்டு #இயல்பான வழிவகை தருமம் மண்ணுலகில் #பரவிட உதவி #மாதவசி அரங்கன் துணைகூட்டிட கூட்டிட கலியுகம் #மாறும் குறைகள் எல்லாம் #ஓடும் #தட்டாது ஞான உயர்நெறி தவராசன் #சன்மார்க்க நெறி #நெறிபிறழா தொடர்ந்து நன்கு நிலவுலகோர் #வணங்கி வர வறுமை #பசி பிணி விலகும் வளமும் வளர்ச்சியும் காணும் காணவே #காலம் கடத்தா #கட்டாயபூசையாக அரங்கனின் ஞான பூசை #ஞானிகள் பூசை நன்மைதரும் #முழுமதி பூசை பூசை நோக்கி #விரைந்து வர #புண்ணியம் கூட்டிதொடர்ந்துவர #வாசிவென்றவர்கள் ஆசியும் #வரமும் கூடி உலகோர் சிறப்பர் தவசிரசன்ன ஆசி முற்றே – சுபம் – முருகப்பெருமான் துணை மகான் கபிலர் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்: உலகமக்களின் வறுமையை #போக்கி காத்திடவே #வள்ளல் ஞானியாய் #அளவிலாது தர்மங்கள் செய்து அவதரித்திட்ட அரங்க ஞானியே தாம் இந்த #பிறவியிலும் எல்லையிலாது தர்மங்களை செய்து இந்த உலகின் #தர்மபலத்தை பெருக்கி வருகின்றாய். உமது தர்மபலத்தினாலே இந்த உலகம் #பாதுகாப்பு பெறும் என்று கூறியே அரங்கா உமக்கு சார்வரி வருடம் வைகாசி மாதம் முதல் நாள் 14.05.2020 வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல்தனையே கபிலர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கபிலர். இவ்வுலகின் ஒப்பற்ற #சற்குரு ஆறுமுக அரங்கமகா தேசிகர் இந்த கலியுகத்தை மாற்றி #ஞானயுகம் படைத்திட #அவதரித்திட்ட மகா ஞானியாகும் அப்படிப்பட்ட #வல்லமை மிக்க #ஞானி அரங்கரின் கொள்கைகளை ஏற்று அரங்கரை #பின்தொடர அவர்களின் நிலைமைகள் எல்லாம் நல்ல விதமாக மாறும். உலக மக்களை #வாட்டி வதைக்கின்ற #நச்சுக்கிருமிகளினால் உண்டாகுகின்ற #பேரிடரும் உயிர்பலிகளும் துன்பங்களும் அதனால் உண்டாகுகின்ற #பல்வேறுபிரச்சினைகளும் அனைத்தும் விலகிடவேண்டுமாயின் உலகைக் காக்க வந்துதித்த #மகாதவசி ஆறுமுக அரங்கமகானின் ஏழாம்படைவீடு, காலத்தை வெல்லும் சக்திமிக்க கந்தகோட்டமாகிய #ஓங்காரக்குடிலை உலகமக்களெல்லாம் நாடி வந்து மகா ஞானி #அரங்கதரிசனம் பெற்று அரங்கரிடத்து #தீட்சை உபதேசங்களை பெற்று ஆங்கே ஞானிகளின் அருளாசிகளுடன் சமைக்கப்படுகின்ற அருளமுதாம் குடில் #உணவை உண்டு ஆங்கே நடக்கின்ற தான தர்ம பணிகளுக்கு #பொருளுதவிகள் செய்தும் #தொண்டுகள் செய்தும் வருவதுடன் அரங்கரின் #தர்மம் உலகமெலாம் பரவிட வழிவகைகள் செய்து அரங்கமகானின் துணையையும் தயவையும் விடாமல் பெற்று அரங்கனை பின் தொடர்ந்து வர இந்த கலியுகம் #விரைந்து மாறிடும். அதனைப் பற்றிய குறைகளெல்லாம் தானே #விலகி ஓடும். உலகமக்களே நீங்கள் #உறுதியுடன் ஞான உயர் நெறியாகிய அரங்கனின் சன்மார்க்க நெறியினை #ஏற்று #நெறிபிறழாமல் நடந்து அரங்கனை பின்தொடர்ந்து வருவதுடன் முருகப்பெருமானையும் நவகோடி #சித்தரிஷிகணங்களையும் அரங்கரையும் #பக்தியுடன் வணங்கி வரவர. உலகை பற்றிய வறுமையும் #பசிப்பிணியும் தானே விலகி ஓடும். இந்த உலகம் வளமும் #வளர்ச்சியும் பெற்றிடும். ஆதலினாலே உலகமக்களே இனியும் காலம் கடத்தாதீர்கள், இனிமேலாகிலும் நீங்கள் #கட்டாயம் அரங்கமகான் கூறும் ஞானபூசைகளான ஞானிகள் பூசையினை தினம் #தினம் தவறாமல் செய்து, ஒவ்வொரு #பௌர்ணமி தினத்திலும் நடக்கும் சிறப்பு வழிபாடுகளையும் செய்து அரங்க தரிசனம் பெற்று ஞானிகளின் அருளாசிகளையும் பெற்று, புண்ணியங்களை #பெருக்கி அரங்கனை பின்தொடர, அவர்களுக்கு #வாசியை வென்ற ஞானிகளின் அருளாசியும் வரமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் எனக் கூறுகிறார் மகான் கபிலர். -சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *