14.04.2020 மகான் கேதுபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் கேதுபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,
14.04.2020, செவ்வாய்கிழமை

#சார்வரி தகர் திங்கள் தன்னில்
#சகல தடைகளை தகர்த்தெறிந்து
#பார்போற்ற ஆறுமுகப் பெருமான்
#பாமரர்க்கும் அருளி வருவானென்பேன்

என்கவே ஆறுமுகனார் #வழிபாட்டை
#இணையிலா சரவண ஜோதியாக ஏற்றி
நன்மை #கருதி செய்யும் அரங்க
#ஞானியரின் வழிகட்கு வருக மாற்றம் உண்டு

உண்டெனக் கூறி #அருள்பிரசன்ன ஆசி
உயர்வான சார்வரி தகர் திங்கள்
கண்டுரைக்க முதல்திகதி #குசன் வாரம்
(சார்வரி ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள், 14.04.2020 செவ்வாய்கிழமை)
கணக்காய் அரங்க ஞானி கேட்க

கேட்க #கேதுபகவானும் அருள்வேன்
#குறைபோக்கி அகிலம் காக்க
#தீட்சை தந்து ஞான குருவாய்
தேசிகன் வழங்கும் #சக்திவழி

வழிதன்னில் ஆறுமுகனார் தானும்
#வரம் தந்து அருளி வர
அழியாமைக்கு உண்டான இந்தவித
ஆன்மீக உண்மை ஞானமும்

ஞானமும் உலகமெல்லாம் #பரவி
ஞான பண்டிதனை #வணங்குகின்ற
#ஞானமதை உலகோர் அடைய
நாள்தோறும் #சோதி ஏற்றி வழிபாட்டை

வழிபாட்டை #பிரணவ நாதமாக
#வையகம் எங்கிலும் முழங்க
#பழிபாவ துன்ப செயல்களெல்லாம்
பாருலகை விட்டு விலகி ஓடும்

#விலகியோட மக்களிடை தெளிவும்
விரைந்து #தருமபலம் பற்றி
#கலகமிடர் இல்லாத சமத்துவமும்
கண்ணியமிகுந்த #வாழ்க்கை முறையுமாக

ஆகவே #மாறி #அதிசயங்கள்
#ஆன்மாக்கள்# சைவ நெறி மீறா
யுகமாற்றமாக #கண்டு இனிதே
உலகம் ஆறுமுகனார் #வருகைக்கு

வருகைக்கு #தகுதிபடும் #வழிவிடும்
#வரலாறு படைக்க வையகம் மாற்ற
ஆறுமுகன் #அவதாரமாக வந்த
அரங்கஞானி #அருமை உணர்ந்தவர்

#உணர்ந்தவர் #தெளிந்தவர் #கலந்தவர்
உண்மையான #ஞானவான்கள் மூலமாக
ஞான யுகமாற்றமும் சடுதிகாணும்
#நச்சுக்கிருமி இடரும் விலகி ஓடும்
அருள் பிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –
முருகப்பெருமான் துணை
மகான் #கேதுபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

சார்வரி வருடம் சித்திரை மாதம் தனிலே உலகில் #நிலவும் சகல தடைகளையும் #தகர்த்தெறிந்து உலகமெல்லாம் போற்றும்படியாக ஆறுமுகப்பெருமான் #ஏழைகளுக்கும் #படிப்பறிவு இல்லாத #பாமரர்களுக்கும் #கூட மனமிறங்கி #அருள்புரிந்து நிற்பானென்று, ஆறுமுகனார் வழிபாட்டை #ஈடு இணையிலாது வல்லமைமிக்கதாய் சரவணஜோதியாக ஏற்றி உலக நலன் கருதி #உலகெங்கும் செய்து வருகின்ற அரங்க மகாதேசிகரின் #ஞானவழிகளுக்கு உலகோர் வருக உலகினில் பல #மாற்றங்கள் உண்டாகும் எனக்கூறியே உலக நலம் கருதி சார்வரி வருடம் #சித்திரை மாதம் முதல் நாள் 14.04.2020 செவ்வாய்கிழமையாகிய இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல் தனையே #கேது பகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கேதுபகவான்.

மக்களிடமுள்ள #குறைகளைப் போக்கி இவ்வுலகத்தைக் காக்க உலக மக்களுக்கு தமது #தவப்பலனை தீட்சை உபதேசமாக உலகமக்களுக்கு அருளி அவர்களுக்கு #ஞானகுருவாய் விளங்கி அருளும் #குருவருள் சக்தி வழி முருகப்பெருமான் யானும் அவர்களுக்கு #அரங்கன் சக்தி மூலமாக #வரங்கள் தந்து அருள் செய்து காத்துவருகின்றான். #அழிவிலாமை எனும் ஒப்பற்ற ஞானத்தை தந்தருளும் அரங்கரின் ஆன்மீக உண்மைஞானம் உலகமெல்லாம் #பரவி உண்மை ஆன்மீகத்தின் தலைவனாம் ஞானத்தின் #தலைவனாம் ஞானப்பண்டிதன் முருகப்பெருமானை வணங்குகின்ற #உண்மை_வழிபாடு முறைகளை உண்மை ஞானமாக #உலகோர் ஏற்று கடைபிடித்து வரவேண்டும். நாள்தோறும் #ஜோதி ஏற்றி வழிபாடுகளை செய்து வந்து பிரணவநாதமான ஓங்காரத்தை முருகப்பெருமானின் #திருநாமங்களை உலகமெங்கும் #ஜெபித்து வர உலகினில் உள்ள #பழிபாவ துன்பசெயல்களெல்லாம் இவ்வுலகை விட்டு விலகி ஓடும்.

உலகினில் உள்ள பழிபாவ செயல்கள் எல்லாம் உலகைவிட்டு #ஓட மக்களிடை தெளிவு உண்டாகும் அவர்களெல்லாம் #தர்மத்தின் தன்மையை உணர்வார்கள் #தயவை உணர்வார்கள் விரைந்து தர்மங்களை செய்து கன்னியமிக்க வாழ்க்கையை கலகமில்லாது சமத்துவமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவ்விதமான பல #அற்புதங்களும் அதிசயங்களும் கண்டு அந்த ஆன்மாக்கள் #உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த #சைவ உணவு மேற்கொண்டு சைவ #நெறியில் நடந்து கனிவுமிக்க தயவு #யுகமாற்றமாக கண்டு உலகம் முருகப்பெருமானின் வருகைக்கு #தகுதியுடையதாக மாறிடும். உலகம் முருகப்பெருமானின் ஞான #ஆட்சிக்கு வழிவிடும்.

இவ்வுலகினில் மிகப்பெரும் வல்லமையுடன் #வரலாறு படைக்கும் விதமாக உலகினில் பல பெரும் மாற்றங்களை செய்து இவ்வுலகை ஞானயுகமாக ஆக்கும் #வல்லமையுடன் முருகப்பெருமானின் அவதாரமாக இவ்வுலகினில் அவதரித்து உலகை தர்மநெறியில் வழிநடத்தும் ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #அருமையை உணர்ந்தவர்களும் தெளிந்தவர்களும் அரங்கன் #பெருமை உணர்ந்து அவருடன் பின்தொடர்ந்து அவர்தொண்டு கலந்தவர்களும் தெளிந்த அறிவையும் ஞானத்தையும் அரங்கன் அருளால் பெற்று ஞானவான்களாவார். இந்தவித அரங்கன் அருள் பெற்ற #ஞானவான்கள் மூலமாக ஞானயுகமாற்றம் விரைந்து உண்டாகும். உலகை #தற்சமயம் பற்றி துன்பத்தில் #ஆழ்த்தும் நச்சுக்கிருமி இடர்களும் ஞானவான்களாகிய ஞானிகள் அருளால் இவ்வுலகிலிருந்து விரைந்து விலகி ஓடும் எனக் கூறுகிறார் மகான் கேதுபகவான்.
– சுபம் –

1213-mahan-kedhubagavaan-aruliya-arul-prasanna-asi-nool-14.04.2020
Youtube: https://youtu.be/SgGYEZYpxUA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *