13.05.2020 மகான் கதம்பமகரிஷி அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் | Kathamba maharishi jeeva nadi olai suvadi live reading

முருகப்பெருமான் துணை

மகான் #கதம்பமகரிஷி அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
13.05.2020, புதன்கிழமை

ஆறுமுக #சக்தியே ஞான தேசிகா
#அருட்குருவாக வந்த அரங்கா
#மாறுதலை உலகில் செய்யவே
மாதவசியாக #வந்த குருராசா

அரசனே உன் #தவபலம் மெச்சி
அருளுவேன் #தவபிரசன்ன ஆசி
தரணியில் #சார்வரி தகர் திங்கள்
தக்க முப்பான் திகதி #புந்தி வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 30ம் நாள், 13.05.2020 புதன்கிழமை)

வாரமதில் கதம்பமகரிஷி யானும்
வழங்குவேன் உலகோர் நலம் பெற
#வரமாக கலியுகம் தன்னில்
#வடிவேலன் சக்தியாக வந்த அரங்கன்

#அரங்கன் மலரடி பணிந்திட
ஆன்மீக #உண்மை நெறி விளங்கி
வரங்களென #மக்களிடை மாற்றம்
வள்ளல் நெறி #வளர்ச்சியாக காணும்

காணவே தருமவழி #காட்டும்
கருணைமிக்க #தேசிகன் தன்னை
ஞானமாக #குருவாக எண்ணி
#நம்பகம் கொண்டு தொடரவே

தொடரவே துன்பங்கள் விலகும்
தீங்கான செயல்கள் அழியும்
இடர்தரும் ஆளுமைகள் மாறும்
இயல்பான வாழ்வாதாரம் சிறக்கும்

சிறக்கவே #கலியுகம் தன்னில்
சிறப்பான #ஞானவான்களை உருவாக்க
#அறம்பெருக்கி அழைப்பு தரும்
அரங்கனிடம் #ஆசி தீட்சை பெற

தீட்சை பெற்ற மக்கள் சிறப்பர்
தீவினை கூடா உயருவர்
மாட்சிமைபட அரங்க ஞானி
மகத்துவம் கண்ட உணர்ந்த மக்கள்

மக்கள் மாறுவர் #தேறுவர்
மண்ணுலகை #மாற்றம் செய்யும்
ஆக்கமும் #ஊக்கமும் பெறுவர்
அழியாமை தரும் #ஞானத்தலைவன்

தலைவன் #சூட்சும வடிவான
தவராசன் #பார்வை பட்டுவிட
#பிழைநேரா பெரு வாழ்வும்
பேரிடர் அண்டா பாதுகாப்பும் கூடி

கூடியே உலகம் #அமைதி பெறும்
குறைகளில்லா #வளம் பெறும்
நாடியே #ஞானயுகமாற்றம் பெறும்
நாட்டிவந்த தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் கதம்பமகரிஷி அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்:

முருகப்பெருமானின் சக்திவடிவமே ஞான தேசிகனே உலகினை #வழிநடத்திட அருட்குருவாக வந்துதித்த ஆறுமுக அரங்கமகா தேசிகனே இவ்வுலகினில் #மிகப்பெரும் மாற்றங்களை செய்யவே மகா தவசியாக #ஆற்றலுடன் அவதரித்த குருராஜனே, அற்புதமான உமது #தவபலம் மெச்சி தவபிரசன்ன ஆசி நூல் தனையே சார்வரி வருடம் சித்திரை மாதம் 30ம் நாள் 13.05.2020 வியாழக்கிழமையாகிய இன்றைய தினமதனிலே கதம்பமகரிஷி யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கதம்பமகரிஷி.

இந்த உலகம் பெற்ற #அற்புத வரமாக முருகப்பெருமானின் அவதாரமாக ஆறுமுக அரங்கமகாதேசிகரின் அவதாரம் நிகழ்ந்துள்ளது. ஆதலினாலே உலகமகா குருநாதன் ஆறுமுக அரங்கரின் #மலரடியை பயபக்தியுடன் பணிந்து சரணாகதி ஆகிட அவர்களுக்கெல்லாம் உண்மை #ஆன்மீக நெறி முற்றிலும் #விளங்கி மக்கள் உண்மை ஆன்மீக வழியில் சென்று #மாற்றம் பெற்று மக்களிடையே வள்ளல் பெருமானாரின் #ஜீவகாருண்ய நெறி செழித்து ஓங்கி நிற்கும்.

உலகிற்கு #தர்மவழிதனை காட்டி மக்களை வழிநடத்துகின்ற கருணையே வடிவான அரங்கமகாதேசிகரை #குருவாக ஏற்றுக்கொண்டு அரங்கரின் #சொற்களையும் #செயல்களையும் ஞானமாக ஏற்று நம்பிக்கையோடு பின் #தொடர, இந்த உலகை பற்றியுள்ள துன்பங்களெல்லாம் தானே விலகும். உலகைபற்றிய #தீங்கான செயல்களெல்லாம் தானே #அழியும். உலகிற்கு #துன்பம் தருகின்ற உலகமக்களின் நலன் கருதாத #ஆட்சியாளர்களெல்லாம் தானே மாறிடுவர். மக்களின் இயல்பான வாழ்வு சிறப்படைந்து #வாழ்வாதாரமும் மேம்பாடடையும்.

#மகாமாயை சூழ்ந்துள்ள கலியுகத்தினில் #சிறப்புமிக்க ஞானவான்களை #உருவாக்க தர்மசக்தியை பெருக்கி உலகமக்களுக்கு #அழைப்பு தருகின்ற தன்னலமற்ற #தவஞானி ஆறுமுக அரங்கமகாதேசிகரின் #திருக்கரங்களிலே ஆசி தீட்சை உபதேசம் பெற தீட்சை உபதேசம் பெற்ற #மக்களெல்லாம் சிறப்படைவார்கள். தீவினைகள் பெருகாமல் #நல்வினைகள் பெருகி #உயர்வான வாழ்வை வாழ்வார்கள். #மாட்சிமைமிக்க அரங்கமகானின் அற்புதமான #மகத்துவங்களை கண்டு உணர்ந்த #மக்கள் மாற்றமடைவர் #கடைத்தேற்றம் அடைவர். இவ்வுலகினை மாற்றம் செய்யும் ஆக்கமும் ஊக்கமும் பெறுவர். ஞானத்தலைவன் முருகப்பெருமானின் #சூட்சும வடிவமாக அவதரித்த #தவராசன் அரங்கமகானின் தயவான #பார்வையை மக்கள் பெற்றுவிட்டால் அவர்களுக்கு எந்த குற்றமும் இல்லாத #பிழைநேரா பெருவாழ்வும் எந்தவிதமான பேரிடர்களாலும் #ஆபத்து வராமலும் உள்ள அருள் பாதுகாப்புமிக்க வாழ்வும் பெற்று இந்த உலகமே #அமைதி பெறும். #குறைகள் அற்று வளம் பெறும். மக்களெல்லாம் தர்மத்தின் வழி நடந்து ஞானயுகமாற்றதை #விரும்பி ஏற்க ஞானயுகமாற்றம் விரைந்து #நடந்தேறும் எனக் கூறுகிறார் மகான் கதம்பமகரிஷி.
– சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *