13.04.2020 மகான் ராகுபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகான் ராகுபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 13.04.2020, திங்கட்கிழமை தவராசனே ஆறுமுக ஞானியே #தன்னலமிலா தொண்டர்படையை #புவனம் காக்க படைத்துநல் #புண்ணியம் பெருக்கும் அரங்கனே அரங்கனே உன் #பெருமை கூறி அகிலமதில் விகாரி #சேல் திங்கள் வரங்களென முப்பானோர்திகதி #சோமவாரம் (விகாரி வருடம் பங்குனி மாதம் 31ம் நாள், 13.04.2020 #திங்கட்கிழமை) வழங்குவேன் அருள் பிரசன்ன ஆசி ஆசியை #ராகுபகவான் யானும் அருளுவேன் #உலகோர் நலம்பெற #வாசிவென்ற ஞானிகள் கூட்டம் #வரங்கள் தந்து காத்துவர வருகவே அரங்க மகானின் #வல்லமையான பிரணவக் குடிலை ஆறுதலாக #வணங்கிவரும் மக்கள் அனைவருக்கும் #வெற்றி கிட்டும் கிட்டுமென்பேன் #சகல வகையும் கேட்டிடுவாய் #தரும்பலம் பெருக்கி #தட்டாது ஞானவழியை தொடர #தவசி அரங்கனை நம்பிவர வருகவே #வையகம் தன்னில் வந்தடையும் #பூரண பாதுகாப்பு தரும வழியை #தேர்ந்து எடுத்துவர தான தருமத்தில் #பொருளுதவி செய்து வர வருகவே நம்பகமான வாழ்வும் #வாழ்வாதார தேவை பூர்த்தியும் ஆறுமுகனார் அருளும் ஆசியும் அரங்கஞானி தயவால் கிட்டும் கிட்டவே #நடப்பு காலம் உள்ள #கிருமிவழி வந்த #உயிர்பலி கட்டங்கள் பெருகா தடுத்திட கட்டாயம் #சைவ நெறி முறைக்கு வந்து வந்துமே #உலகை காக்க #வரம்பெற்ற அரங்க ஞானியரிடம் சிந்தைபட #தீட்சை ஏற்று #சீடர்களாகி பணிந்து வர வருகவே நிலைகள் மாறும் வந்த கிருமி வழி #சோடை அகல முருகப் பெருமனை #வணங்கி முழுமைபட #தனித்திரு #விழித்திரு என என தருமமும் #இயன்றவண்ணம் இவ்வுலகோர் செய்து செயல்பட #ஞானவான்களாகி அனைத்து பேரும் நச்சுக்கிருமி வழி #அழிவிலாமீள்வர் அருள்பிரசன்ன ஆசி முற்றே – சுபம் – முருகப்பெருமான் துணை மகான் #ராகுபகவான் அருளிய #அருள்பிரசன்ன ஆசி நூலின் சாரம் – #ராஜயோகங்களெல்லாம் செய்து வெற்றி கண்டிட்ட தவராசனே ஆறுமுக ஞானியே இவ்வுலகினை காக்க #தன்னலமற்ற தொண்டர் படையினை படைத்து #உலகமெங்கும் அத்தொண்டர் படைமூலம் தர்மங்களை செய்து உலகின் #புண்ணியத்தை பெருக்கும் அரங்கமகானே அற்புதமான உமது பெருமைகளை உலகமெலாம் கூறியே உலக நலம் கருதி விகாரி வருடம் பங்குனிமாதம் 31ம் நாள், 13.04.2020 திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே ராகுபகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் ராகுபகவான். #உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகான் #வீற்றிருக்கும் ஓங்காரக்குடில்தனை வாசியை வென்ற ஞானிகள் கூட்டம் #வருகின்றோருக்கு வரங்களை தந்து துணையாய் நின்று குடிலதனை #இடைவிடாது காத்துவருகின்றனர் ஆதலால் அரங்கமகானின் வல்லமைமிக்க ஓங்காரக்குடிலை அவரவரும் #ஆறுதலை வேண்டி பனிந்து வணங்கி வேண்டிவர #அவர்கெல்லாம் வெற்றிகள் கிட்டுமப்பா. சகலவிதமான வெற்றிகளையும் அவர்கள் #அடைந்து சிறப்பர். தர்மபலம் பெருக்கி ஞானவழியினை பின்பற்றி ஆறுமுக அரங்கமகானை #குருவாக ஏற்று அரங்கனை #நம்பிக்கையோடு பின்தொடர்ந்து வர இந்த உலகத்திற்கு பூரணமான அருள் பாதுகாப்பு வந்தடையும். ஆறுமுக அரங்கமகான் உலக நலன் கருதி செய்கின்ற #தர்மபணிகளிலே பொருளுதவிகளை செய்து தர்மத்தை வளர்க்கின்றவர்கள் வாழ்க்கை நம்பகமிக்க வாழ்க்கையாக அமையும். அவர்களது வாழ்வாதார #தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி முருகப்பெருமானின் அருளும் தயவும் ஆசியும் ஆறுமுக அரங்கமகானின் அருளாசியினால் கிடைக்கப் பெறுவார்கள். நடப்புகாலத்தில் உள்ள நச்சுக்கிருமிகளால் வந்த உயிர்பலிகள் #நோய் துன்பங்கள் மேலும் பெருகாமல் #தடுத்திட உலகமக்கள் #கட்டாயம் #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த சைவ உணவினை மேற்கொண்டு வரவேண்டும். உலகோர் உலகைக்காக்க வேண்டி #அவதரித்த ஆறுமுக அரங்கமகான் திருவடி பனிந்து அரங்கரை குருவாக ஏற்றுக்கொண்டு அரங்கரின் #சீடர்களாகி பின்தொடர்ந்து வர உலகில் நிலமைகள் விரைந்து மாறும். கிருமி வழி #உலகிற்கு வந்த துன்பங்களெல்லாம் அகல உலகமக்களெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானை #வணங்கி தனித்திரு விழித்திரு என தனிமையிலிருந்து தர்மங்களை செய்து வர அவர்களெல்லாம் ஞானவான்களாகி நச்சுக்கிருமி வழி அழிவிலாது #மீள்வர் எனக் கூறுகிறார் மகான் ராகுபகவான். – சுபம் https://dailypalmleaf.blogspot.com/2020/04/13042020_29.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *