13.04.2020 ஓங்காரக்குடிலின் ஆளுமையை இந்த உலகோர் ஏற்கும் காலம் குறித்து மகான் சுப்ரமணியர் அருளிய அறிவுரை ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
ஓங்காரக்குடிலின் ஆளுமையை இந்த உலகோர் ஏற்கும் காலம் குறித்து மகான் சுப்ரமணியர் அருளிய அறிவுரை ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T . ராஜேந்திரன் , M . A . , B . Ed ,
13.04.2020, திங்கட்கிழமை

#தர்மவேலி கொண்டு கலியுகத்தை
#தவபலத்தால் நிரப்பி வருகின்ற அரங்கனே
#கர்மவினை போக்க உலகமக்களை
கலியுகத்திலும் மீட்டு வருகின்ற #தேசிகனே

தேசிகன் நீ ஓங்காரக்குடிலின் #ஆளுமைக்கு
#உலகமெல்லாம் வருகின்ற #காலங்கள் குறித்து கேட்க
ஆசிபட #சுப்ரமணியர் யானும் #அறிவுரை ஆசியாக
அருளவே விகாரி சேல் திங்கள் தன்னில்

தன்னிலே கலியுகத்தை #மாற்றம் செய்யவே
#தர்மத்தின் பலத்தை மக்கள் உணரவே
மண்ணுலகில் எங்கும் #பேரிடர் துன்பம்
மக்கள் மக்களையே #உணரக்கூடிய வண்ணம்

வண்ணமுடன் #பொருளாசை #மண்ணாசை
போன்ற ஆசைகளைத் #துறந்து
மக்களெல்லாம் #புனிதம் பெறவும் #தயவை உணரவும்
#நேசக்கரம்கொண்டு இந்தஉலகோர் நிலவுலகில் #தர்மத்தை வளர்க்கவும்

வளர்க்கவும் உண்டான #சூழல் மாறிவருக
வருகவே இந்தசூழலில் ஏனோஇந்த மக்கள்
முருகப்பெருமான் என்தயவையும் ஆசியையும்
மேலான #அரங்கன்நீ வந்துள்ள உலகமாற்றத்துக்கு உண்டான

ஆனதொரு சூட்சுமத்தையும் அறிந்து தெளிந்து
#அகிலத்தார் சுத்தசைவ நெறியேற்று
கொண்டதொரு #தர்மஞான வழிக்குவர
குறையிலா #ஓங்காரக்குடிலின் பெருமை அறிந்து உணர்ந்து வர

வருகவருகவே உலகமெங்கிலும் வல்லமை பட
உன் #கொள்கை ஏற்கப்பட
பெருமளவில் #நீசெய்கின்ற தர்மத்தின் பலனும்
#புண்ணியமும் உலகம் ஏற்று பின்வர

வருகின்ற #இந்தசூழல்கள் வளமுற #சார்வரி ஆண்டிலே
வடிவேலன் #என்சக்தியால் பெருகக் கூடும்
தருகின்ற #உன்தர்மம் உலகமெங்கும் அறியப்படும்
#தவசிநீ வந்த #நோக்கமும் மக்களிடை #உணர்த்தப்படும்

உணர்த்தபடுகின்ற இந்த சூழல் #விரிவாகவே
உண்மைபட #உலகோர் ஞானவழிக்கு வரவே
ஞானமாக #நீதருகின்ற அனைத்து அறிவுரைகளும்
நாடெங்கிலும் பரவி #நல்லொழுக்கம் பெருகி

பெருகியே உலகோர் #சரவணஜோதி ஏற்றி
உயர்வான #வழிபாட்டுக்கு வருகவருகவே
பெருமைபட சார்வரி #ஆண்டிலே பேதமற
மக்களிடை #சமத்துவநிலை உருவாகி

ஆகியே கலியுகத்தின் #மாற்றமாக சடுதிகண்டு
ஆறுமுகன் என் தயவுபட ஞானயுகமாற்றம்
பெருமைபட சடுதிகாணக் கூடும் இந்த பேராற்றல்
பரவவும் உண்டான சூழல் பெருகபெருக

பெருகவே ஓங்காரக்குடிலின் #ஆளுமைக்கு
பேருலகமே #செவிசாய்த்து அதன் தலைமைக்கு கீழ்வந்து
முருகப்பெருமான் என்ஞான #ஆட்சியாக
முழுமைபட #உலகமெங்கும் நடந்தேறும்
அறிவுரை ஆசி முற்றே-
சுபம்

#முருகப்பெருமான் துணை
#மகான் சுப்ரமணியர் அருளிய அறிவுரை #ஆசி நூலின் சாரம் :

#எல்லையில்லாது தர்மங்களை செய்து #தர்மபலம் பெருக்கி அதை #தர்மவேலியாக ஆக்கி உலகமக்களை கலியுகத்துன்பங்களில் இருந்து தமது #தவபலத்தின் உதவியாலும் காத்துவருகின்ற கலியுகமகா ஞானியே ஆறுமுக அரங்கனே மக்களின் கர்மவினைகளை போக்கி கலியுகத்தினில் மீட்டு காக்கின்ற #மகாஞானியே அரங்க மகாதேசிகனே தாம் தமது #ஞானபீடமாம் #ஓங்காரக்குடில் உலகை ஞான ஆளுமையை செய்கின்ற #காலம் குறித்து கேட்க சுப்ரமணியர் யானும் விகாரி வருடம் பங்குனி மாதத்திலே அறிவுரை ஆசிநூல்தனையே உரைக்கின்றேன் என்கிறார் #மகான் சுப்ரமணியர் ஆகிய முருகப்பெருமான்.

கலியுகத்தினை #மாற்றம் செய்யவே தர்மபலத்தினை மக்கள் #உணரவே இந்த பரந்த உலகம் முழுதும் #நச்சுக்கிருமி #மூலம் பேரிடராய் #துன்பநிலை உண்டானது. மக்களெல்லாம் மக்களைக்குறித்து தயவுடன் #உணர்ந்து தம்மைப்போலவே #பிற #உயிர்களும் என்று உணரக்கூடிய வகையிலே #துன்பமிக்கதாய் அமைந்தும் மக்களெல்லாம் தாம் இதுவரை சேர்த்த #பொருள்கள் தம்மைக் #காக்கவில்லை என்பதையும் தாம் இதுவரை #சேர்த்து  #வைத்த #நிலங்களும் மற்றும் அசையா #சொத்துக்களும் நம்மை காக்கவில்லை என்பதை உணரும் வகையிலே #கொடும் துன்பத்தை #அளித்து மக்களிடையே #பொருளாசை #பொன்னாசை மண்ணாசை போன்ற #ஆசைகளை துறந்து மக்களெல்லாம் #புனிதம் பெறவும் தயவை உணரவும் #தர்மத்தை வளர்க்க ஒவ்வொருவரும் #நேசக்கரம் கொண்டு ஒன்றினைந்து இந்த உலகில் தர்மத்தை அற்புதமாய் வளர்க்கவும் வேண்டியே இந்த வித அற்புதமான #சூழ்நிலை இயற்கை உருவாக்கியுள்ளது. #ஆதலில் இந்த #இக்கட்டான சூழலிலேனும் மக்கள் தங்களை #மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த #இடற்பாடான சூழ்நிலையிலே சர்வ வல்லமைமிக்க முருகப்பெருமான் எனது தயவையும் ஆசியையும் பெறவேண்டும்.

முருகப்பெருமான் எனது #அவதாரமாக வந்துள்ள உலகமாற்ற மகா ஞானி அரங்கமகானே நீ இந்த உலகினில் அவதரித்ததின் #நோக்கத்தையும் அதன் #சூட்சுமத்தையும் அறிந்து தெளிந்து அரங்கனே முருகன் #முருகனே #அரங்கன் எனும் உண்மை உணர்ந்து அரங்கன் #நீ கூறும் #உபதேசங்கள் அனைத்தும் முருகப்பெருமான் யானே கூறுவதாய் ஏற்றுக்கொண்டு எம்மால் கூறப்பட்ட #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த #சைவ_உணவை மேற்கொள்கிறதான சுத்த சைவ நெறியை ஏற்றுக்கொண்டு #அதன்வழி நடந்து உலக உயிர்கள் மீது #தயவு கொண்டு நடந்து தர்மஞானவழிக்கு வர வேண்டும். அவரெல்லாம் உலகமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட #ஏழாம்படைவீடு துறையூர் ஓங்காரக்குடிலை #பயபக்தியுடன் நாடி வரவேண்டும். உலகமக்களெல்லாம் உமது தூய #ஞானநெறிதனை ஏற்று கடைபிடிக்க வேண்டும். தாம் செய்யும் தர்மத்தின் பலனாய் உலக மக்களும் உமது #தர்மநெறியை ஏற்று அவரவரும் தர்மங்களை தாராளமாய் செய்து புண்ணியசெயல்களை செய்தும் தர்மத்தின் #வழி உலகம் நடந்து வர இந்த #சூழல்கள் எல்லாம் மாறி துன்பங்கள் நீங்கி #வளங்கள் பெருகும் வருகின்ற #சார்வரி ஆண்டிலே முருகப்பெருமான் என் #சக்தியால் இவ்வுலகமெங்கும் அருள்பலம் பெருகக்கூடும் அரங்கா தாம் செய்யும் தர்மம் உலகமெங்கும் #அறியப்படும் #தவசி நீ இந்த உலகில் அவதரித்ததின் நோக்கமும் மக்களிடையே உணர்த்தப்படும்.

இந்தவித #சந்தர்ப்பத்தை உலக மக்கள் பயன்படுத்திக்கொண்டு உத்தம மகா #ஞானி உலகின் #ஒப்பற்ற #சற்குரு அரங்கா உம்மை குருவாக ஏற்றுக்கொண்டு தாம் கூறும் #உண்மை ஞானவழிக்கு வருகையுற்று #உம்மை பின்தொடர உலகமக்களுக்கு #நீ தரும் அனைத்து #அறிவுரைகளும் #நாடுகளெங்கும் பரவி நாடெங்கிலும் #நல்லொழுக்கம் பரவி மக்கள் #பண்புள்ளவர்களாய் மாறுவார்கள் நாட்டினில் பண்புள்ளவர்கள் #அதிகமாகி அவரெல்லாம் தூயஞானநெறியின் வழிபாட்டுமுறையாம் #ஜோதி வழிபாடாகிய #சரவணஜோதி வழிபாடுகளை செய்து #தினம் தினம் மறவாமல் ஞானிகளை வணங்கி ஞானவழிபாட்டில் #தொடர்ந்து வர பெருமைமிக்க இந்த சார்வரி ஆண்டிலே மக்களிடையே #புண்ணியபலமும் #அருள்பலமும் பெருகி மக்களிடையே உள்ள #பேதாபேதங்களெல்லாம் மறைந்து #சமத்துவநிலை உருவாகி இந்த கலியுகம் விரைந்து #மாற்றமடையும் முருகப்பெருமான் எமது தயவினாலே இந்தவித ஞானயுகமாற்றம் விரைந்து பெருமையுடன் நடந்தேறக்கூடும். இந்த #அருள்பேராற்றல் உலகமெங்கும் பரவுவதற்குண்டான #சூழல் பெருகி உலகமெங்கும் #அருளாற்றல் பரவப்பரவ இவ்வுலகம் ஓங்காரக்குடிலின் ஆட்சிக்கு கீழ் இப்பேருலகமே #செவிசாய்த்து #ஓங்காரக்குடில் #தலைமைக்குகீழ் வந்து முருகப்பெருமானாகிய எனது ஞான #ஆட்சியாக இவ்வுலகமுழுதும் நடந்தேறும் எனக்கூறுகிறார் மகான் சுப்ரமணியராகிய முருகப்பெருமான் .

– சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *