12.4.2020 மகான் சனீஸ்வரபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் #துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் சனீஸ்வரபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T . ராஜேந்திரன் , M . A . , B . Ed . ,
12.4.2020, #ஞாயிற்றுக்கிழமை

தவசியே தருமத்தின் #காவலனே
#தரணி காத்திட கந்தவேலன்
#அவதாரமாக வந்த அரங்கனே
அகிலமதில் #உன் பெருமை கூறி

கூறியே அருள் பிரசன்ன ஆசி
குறையிலா விகாரி சேல் திங்கள்
#தெரிவிக்க முப்பான் திகதி #கதிர் வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 30ம் நாள் 12.4.2020, ஞாயிற்றுக்கிழமை)
தேசிகன் கேட்க #சனீஸ்வர_பகவான் யானும்

யானும் உலக நலமுற உரைப்பேன்
#உலகமெங்கும் கலித் துன்பமாக
ஞானமிலா மக்களை #தாக்கி
நச்சுக்கிருமியாக #பரவி மரணம் நேர

நேருகின்ற இந்த #நிலைகள் மாற
நிலவுலகம் பாதுகாப்பு பெற
#பேரிடர் பரவா #தடுப்பு காண
#பூவுலகோர் தயவுநெறி ஏற்றுமே

ஏற்றுமே இனியும் #உயிர் கொலை
எனும் இடர் தொடரா #கைவிட்டு
உற்றதொரு #சைவநெறி ஏற்று
உயர்வான முருகப்பெருமான் வழிபாடு

வழிபாடு தொடர்ந்து #செய்துவர
வழிகாட்டும் #துறையூர் வாழ் #ஞானி
#அழியாமை தரும் அரங்கமகான்
ஆன்மீக ஞானவழிகளை #ஏற்றுவர

வருகவே #குருவாக ஏற்று
வணங்கி ஞான #தீட்சை பெற்று
தருமம் #தடைபடா வளரும்படி
தரணியோர் கலந்து உதவிவர

வருகவே #புண்ணியபலம் கூடிட
#வையகம் வடிவேலன் அருள் #துணை
பெருகியே பாதுகாப்பு பெறும்
பேரிடரும் படிப்படியாய் விலகியே

விலகியே #இயற்கை பலத்தாலும்
விரைவான #மருத்துவ சேவையாலும்
#கலகம் கொள்ளா தனிமைப்படுத்தி
#கண்ணியமான கட்டுப்பாடுகள் மூலமாகவும்

ஆகவே #ஞானவழி வருபவரின்
#ஆளுமையால் யாவும் சிறந்து
#மிகைபடா பேரிடர் விலகி
முழுமையான பாதுகாப்பு காண்கும்

காண்கவே இனியும் #அலட்சியம்கொள்ளா
கட்டாயம் #உயிர்க்கொலை தவிர்த்து
#சண்முகனார் வழிபாட்டு #முறையுடன்
#சைவம் கடைப்பிடிக்க உலகே #காப்பு பெறும்
 அருள் பிரசன்ன ஆசி முற்றே.
 – சுபம்

 முருகப்பெருமான் துணை.
 மகான் #சனீஸ்வரபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

 #அனேகம் அனேகம் தவங்கள் செய்திட்ட மகா தவசியே எல்லையிலாது தர்மங்களை செய்து #தர்மபலம் பெருகி நிற்கும் தர்மத்தின் காவலனே இவ்வுலகை காத்திடவே முருகப்பெருமானின் #அவதாரமாக வந்த ஆறுமுக அரங்கமகா தேசிகனே இவ்வுலகெலாம் உமது பெருமையை கூறியே உலக நலன் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 30ம் நாள் 12.4.2020, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல் தனையே சனீஸ்வரபகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சனீஸ்வர #பகவான்.

 உலகமெங்கும் #கலியுகத்தின் கொடுமையின் ஒருபகுதியாக #நச்சுக்கிருமி வடிவிலே உலகமெங்கும் #பரவி உலகமக்களை #தாக்கி மரணம் #சம்பவிக்க செய்கிறது. மக்களை #பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. இப்படிப்பட்ட துன்பம்மிக்க நிலைகளெல்லாம் மாறி இவ்வுலகம் அருள் பாதுகாப்பினை பெற்றிட உலகமெங்கும் பேரிடர்கள் மேலும் #பரவாமல் #தடுப்பு நிலை காண வேண்டுமாகின் உலக மக்கள் #உயிர்க்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த #சைவ உணவை மேற்கொண்டு தயவு நெறியை #தளராது பின்பற்றி வருவதுடன் ஞானத்தின் தலைவன் முருகப்பெருமானை வழிபடு தெய்வமாக ஏற்று தினம் #தினம் மறவாமல் நாமங்களைச் சொல்லி பூஜைகள் செய்து வருவதுடன் முருகப்பெருமானின் அவதாரமாக #விளங்கி நிற்கும் ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் #அழிவிலாமை நிலை தரும் ஆன்மீக #உண்மை ஞான நெறிகளை ஏற்று கடைப்பிடித்து வரவேண்டும்.

 #உலகப்பேராசான் அரங்கமகானை அவரவரும் #குருவாக ஏற்றுக்கொண்டு அரங்கரிடத்து பயபக்தியுடன் வணங்கி ஞான தீட்சைகளை பெற்று, #அரங்கன் ஆற்றும் #தானதர்மங்கள் வளரும் விதமாக தர்மங்களுக்கு #பொருளுதவி செய்து தர்மத்தை வளர்த்துவர அவர்களுக்கு #புண்ணியபலம் கூடிடும். இவ்விதமே உலக மக்களின் புண்ணியபலம் #கூடிட இவ்வுலகம் முருகப்பெருமானின் #அருள் துணையை பெற்று அருள் பாதுகாப்பை பெறும். உலகைப் பற்றிய இயற்கை பேரிடர்களும் படிப்படியாய் இயற்கையின் துணையாலும் மருத்துவ சேவைகளாலும் மக்கள் ஒன்று கூடாது தங்களை #தனிமைப்படுத்திக் கொள்ளுகின்ற கண்ணியமான கட்டுப்பாடுகளின் மூலமாகவும் ஞானிகளை வணங்கும் #ஞானவான்களாலும் உலகைப் பற்றிய இயற்கை பேரிடர்கள் விலகி முழுமையான பாதுகாப்பை பெற்றிடும்.

 ஆதலினால் உலகமக்களே #இனியும் அலட்சியமாய் #இராதீர்கள். நீங்களெல்லாம் உறுதியாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவஉணவினை கட்டாய உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுத்த சைவ நெறியை கடைப்பிடிப்பதுடன் சர்வ வல்லமைமிக்க முருகப்பெருமானின் வழிபாட்டு முறையுடன் #சரவணஜோதி வழிபாடுகளை தினம்தினம் தவறாமல் செய்துவர , இந்த உலகம் உறுதியாக ஞானிகளின் பாதுகாப்பை பெறும் எனக் கூறுகிறார் #மகான் சனீஸ்வர பகவான்.
 – சுபம்.
https://youtu.be/Ho3a8DxOVJQ

மகான் சனீஸ்வரபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *