12.05.2020 மகான் கணபதிதாசர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான் #கணபதிதாசர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
12.05.2020, #செவ்வாய்கிழமை

#சன்மார்க்க விதை விதைத்து
#சகலருக்கும் நல்லொழுக்கமும்
#நன்மைதரும் செயல்பாடுகளும்
#ஞானமும் வளர அருள்புரிகின்ற #அரங்கா

அரங்கனே #உன்தவபலம் போற்றி
அருளுவேன் #தவபிரசன்ன ஆசி
#வரங்களென சார்வரி தகரின் திங்கள்
வல்லமைபட இருபான்நவ திகதி #குசன் வாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 29ம் நாள், 12.05.2020 செவ்வாய்கிழமை)

வாரமதில் கணபதிதாசர் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
#அரங்கனே கலியில் அவதரித்த
ஆறுமுகனார் #சக்தியாய் இருக்க

இருக்கவே #பிரணவக் குடிலும்
#ஏழாம்படைவீடாக சக்தி பெற்று
#வருத்தமுள மக்களின் கஷ்டங்களை
#வரமீந்து நீக்கி காத்தருள

அருளவே #அரங்கன் குடிலின்
#அருளமுது உண்ட மக்களுக்கு
#அருள் பொருள்வளம் கிட்டும்
அரங்க ஞானி #உபதேசம் பெற்ற மக்கள்

மக்களெல்லாம் #ஞானம் பெற்று
#மகான்கள் ஆகும் வாய்ப்பும் ஆசியும்
#தேக்கமின்றி உலகோர் அடைவர்
தேசிகன் #அழியாமை தருகின்ற

தருகின்ற #மாதவசியாக இருக்க
#தருமபலம் கொண்ட மக்களே
ஆறுமுக அரங்கன் #வழிகாட்டலில்
அழியாமை பெற்று #சிறப்பர்

சிறப்பான #சமத்துவநிலை மிக்க
சிறந்த #ஞானயுகம் படைக்க
அறம் மிக்க #தொண்டர்படைகளை
#அகிலம் எங்கிலும் அரங்கன்

அரங்கன் #உருவாக்கி வருக
ஆசி #தீட்சை அடைந்து வருவதுடன்
#வரங்களும் மக்கள் பெற்று
#வருக வருக கலியுகம் தானும்

தானுமே ஞானவான்கள் #பெருகி
தருமபலம் கூடி #கூடியே
#ஞானயுகமாற்றம் காண்கும்
ஞானிகள் #பூசை செய்துமே

செய்துமே #தருமவேலி கொண்டு
#சேவைகள் உலகமே ஏற்றி
#அய்யன் ஆறுமுகன் ஆசிபட
அகிலமே மாற்றம் காண்கும்
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் கணபதிதாசர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

உலகினில் #வல்லமைமிக்க சன்மார்க்கத்தை #விதைத்து உலக மக்கள் அனைவருக்கும் #நல்லொழுக்கமும் நன்மையான செயல்களையும் ஞானத்தையும் மக்களுள் #வளர்த்து அவர்களுக்கு #அருள் புரிந்து #காக்கின்ற ஆறுமுக அரங்கமகா தேசிகரே உமது தவபலத்தை மெச்சி உலகநலன் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 29ம் நாள் 12.05.2020 செவ்வாய்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல்தனையே கணபதிதாசர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் #கணபதி தாசர்.

ஆறுமுக அரங்கமகா #தேசிகனே இக்கலியுகத்தினில் முருகப்பெருமானின் #சக்திவடிவமாக அவதரித்திட்ட மகா ஞானியாவார். அரங்கனின் #ஞானபீடமாம் #துறையூர் ஓங்காரக்குடிலும் ஏழாம்படைவீடாக சக்தி பெற்று #துன்பப்படுகின்ற மக்களின் கஷ்டங்களை #வரமளித்து நீக்கி அவர்களை #காத்தருள்கிறது. ஆதலினாலே #ஏழாம்படைவீடு துறையூர் ஓங்காரக்குடிலில் ஞானிகளின் அருளாசியுடன் #சமைக்கப்படுகின்ற உணவானது #அருளமுதாகும். ஓங்காரக்குடில் உணவை #உண்ட மக்களுக்கு அருள் #வளமும் பொருள் வளமும் #கிட்டுமப்பா. #அரங்கமகானிடத்து தீட்சை உபதேசம் பெற்ற மக்களெல்லாம் #ஞானம் பெற்று மகான்களாக ஆகும் வாய்ப்பும் அருளாசியும் #தடையின்றி பெறுவார்கள்.

#கலியுக ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகரே #மரணமிலா பெருவாழ்வை #தரக்கூடிய மகா ஞானியாக இருக்க #தர்மங்கள் செய்து தர்மபலமிக்க மக்களே ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #வழிகாட்டலில் அழிவிலாத நிலையை #பெற்று சிறப்படைவார்கள். சிறப்புமிக்க #சமத்துவமான ஞானயுகம் படைக்க அறபலம் மிக்க #தொண்டர் படைகளை உலகமெங்கும் அரங்கமகான் #உருவாக்கி வருகின்றார். அவர்களெல்லாம் அரங்கரை #அனுகி அருளாசிகளை பெற்று, தீட்சை உபதேசம் பெற்று, #வரங்களை பெற்று வரவர இந்த கலியுகத்தினில் ஞானவான்கள் பெருகி உலகின் தர்மபலம் பெருகி ஞானயுகமாற்றமாக இந்த கலியுகம் #மாற்றமடையும்.

ஞானிகள் #பூஜைகளை தினம் தினம் #தவறாமல் செய்து உலகமெலாம் #தர்மவேலி அமைத்து #தன்னலமற்ற தொண்டுகளை உலகமெங்கும் செய்த #ஐயன் முருகப்பெருமானின் #ஆசியுடன் இந்த உலகமே பெரும் மாற்றமடையும் எனக் கூறுகிறார் மகான் கணபதிதாசர்.
– சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *