12.04.20 முதல் 19.04.2020 எதிர்கால #பலன் குறித்த மகான் #அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

#வார #ஆசி #நூல்.. 12.04.20 முதல் 19.04.2020

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி ! !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி ! !

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான்

#எதிர்காலம் குறித்த #இந்தியா, #தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால #பலன் குறித்த மகான் #அகத்தியர் அருளிய வார ஆசி நூல்
(விகாரி பங்குனி மாதம் 30ஆம் திகதி முதல் சித்திரை மாதம் 06ஆம் திகதி வரை ஏப்ரல் 12ம் திகதி ஞாயிறு முதல் ஏப்ரல் 19ம் திகதி ஞாயிறு வரை)

#சுவடி வாசித்தளித்தவர் T . ராஜேந்திரன் , M . A . , B . Ed .

#கலித்துன்பம் கண்டு வருந்தா
கருணைமிக்க வேலவன் துணையே என
பழிபாவ #நெறிவழி செல்லா
பரோபகார #சிந்தை கொண்டுவா மனிதா

மனிதா #தன்னுயிர்போல் பிறஉயிர்களை
#மதித்து போற்றி வாழ்ந்து வந்தாலே
இனியும் #அழிவு நெருங்காதடா
என அகத்தியன் யானும் எச்சரிக்கை தந்து

தந்துமே இந்தியா #தமிழகம் தன்னில்
தக்க #விகாரி சேல்திங்கள் முப்பான் திகதிமேல்
சிந்தைபட சார்வரி தகர்திங்கள் சஷ்டிதிகதி வரை
( விகாரி வருடம் பங்குனி மாதம் 30ம் நாள் 12.04.2020, ஞாயிறு முதல் சார்வரி வருடம் சித்திரை மாதம் 06ம் நாள் 19.04.2020, ஞாயிறு முடிய)
செப்பிடுவேன் நடக்கும் எதிர்கால பலன்குறித்த ஆசி

ஆசிதனை அரங்க ஞானிகேட்க #அருளுவேன்
அகிலமே #நச்சுக்கிருமிவழி (corona virus) அல்லலுக்கு
பேசிட அஞ்சியே உயிர்பலி மிஞ்சிட
#பேரிடராகி அழிவு மிகுந்து வர

வருகவே இந்த சிக்கலை வென்று
வையகமே வியந்து நோக்கும்படி
தருமபூமி தமிழகம் இந்தியா காப்புபெறும்
தரணியில் கிருமிவழி துன்பம் கட்டுக்குள் வரும்

வருக பேரிடர் துன்பமாக
வாராது காப்பு கொண்டாலும்
பெருமளவில் #வணிக #சரிவு
#பின்னடைவு பொருளாதார வழி காணும்

காணுமே இந்தியா தமிழகம் தன்னில்
#கடன் சுமை கூடும் வளரும்
ஞானபூமியில் #தனிநபர் வரவும் குன்றி
நன்மைபடா #தனபுழக்கம் கெடும்

கெடுமே அத்தியாவசிய தேவைகளும்
குறைபட #குளறுபடி சில காணும்
நாடெங்கும் இந்த #சரிவுடன்
நன்மையிலா இனமத பேத #கலகமிடர்

இடராக #இந்துத்துவம் மீறியபடி
#எதிர்மறை சக்திகள் போராடும்
#தடைபடும் பல வளர்ச்சிப் பணிகள்
#தன்னிறைவு காணா #தேச_வளர்ச்சி தேங்கும்

தேங்குகின்ற நிலைவராத வளம்காண
தேக்கமின்றி இந்தியா தமிழகம் உயர
#ஓங்கார_ஞானி கண்டு ஆசிபெற
#ஓங்காரன் வழிக்குவர நன்மையும் பாதுகாப்பும் கூடும் வார ஆசி முற்றே .
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் #அகத்தியமகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :

விகாரி வருடம் பங்குனி மாதம் 30ம் நாள் 12.04.2020, ஞாயிறு முதல் #சித்திரை மாதம் 06ம் நாள் 19.04.2020, #ஞாயிறு முடிய உள்ள கால நிகழ்வுகள் குறித்த #ஆசி நூல்:

கலியுகத்தின் துன்பங்களைக் #கண்டு வருந்தாதே, கருணையே வடிவான வேலவன் முருகப்பெருமானே துணையென #பணிந்துமே பழிபாவங்களை உண்டாக்கும் எந்த செயல்களையும் #செய்யாமல் பழிபாவமற்ற வாழ்வை வாழ்ந்து #பரோபகார #சிந்தையுடன் வாழ்ந்திட வேண்டும் மனித குலமே!

மனிதர்களே பிற உயிர்களையும் #உங்களது உயிர்களைப் போல எண்ணி மதித்து போற்றி வாழ்ந்து வந்தாலே போதுமப்பா. இந்த உலகினை #இனியும் எந்த அழிவுகளும் அண்டாதப்பா. எனவே எச்சரிக்கையுடன் நடந்து #உயிர்க்கொலை தவிர்த்து வாழுங்கள் என அகத்தியர் யானும் உங்களுக்கு #எச்சரிக்கை தந்து விகாரி வருடம் பங்குனி மாதம் 30ம் நாள் 12.04.2020 ஞாயிற்றுக்கிழமை முதல் சார்வரி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19.04.2020 #ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக அகத்தியர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி.

இந்த #உலகம் முழுதும் நச்சுக்கிருமியின் தாக்குதலுக்கு ஆளாகி #உயிர்ப்பலிகள் ஆகுதப்பா. #நச்சுக்கிருமி தாக்குதல் பேரிடராக ஆகி உலகமெலாம் அழிவுகள் மிகுந்து வருகின்றது. இப்படிப்பட்ட துன்பமயமான உயிர்ப்பலி சிக்கலை வென்று உலகமே #வியந்து பாராட்டும்படி தரும பூமியாகிய தமிழகமும் இந்திய தேசமும் அருள் பாதுகாப்பை பெற்று பாதுகாப்புடன் விளங்கிடும். உலகம் முழுதும் படிப்படியாக கிருமிகளால் உண்டான துன்பங்கள் விலகி கட்டுப்பாட்டிற்குள் வரும். பேரிடர்களால் துன்பங்கள் மேலும் வராமல் #காக்கப்பட்ட போதிலும் உலகமெங்கும் பெருமளவில் #வணிகம் சரிவைக் காணும், பொருளாதார வழியில் பின்னடைவை சந்திக்கும். இந்தியாவிலும் தமிழகத்திலும் #கடன்சுமை அதிகமாகிடும். தனிநபர் வருவாயும் குறைந்து #பணப்புழக்கம் குறைந்திடும். நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளெல்லாம் #குறைபாடுகள் உண்டாகி, சில குளறுபடிகள் காணும். இப்படிப்பட்ட சரிவுகளெல்லாம் நாட்டில் உண்டாகி நடக்கும் பொழுதே, மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் #இனமதபேத கலகங்கள் உண்டாகி, இந்துத்துவாவினை எதிர்க்கும் #எதிர்மறை சக்திகள் போராடும், ஆதலினால் நாட்டினில் பலவிதமான #வளர்ச்சி பணிகளும் #தடைபட்டு போகும், நாட்டின் வளர்ச்சியே தடைபட்டு போகும்.

இப்படிப்பட்ட தேக்கமான #நிலைகளெல்லாம் வராமல் வளம் பல கண்டு தடையின்றி வளர்ச்சி பெற, இந்தியாவும் தமிழகமும் #உயர்வடைய வேண்டுமாயின், #அவதார ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனாரைக் கண்டு ஆசி பெற்று முருகப்பெருமானின் தூய #நெறிக்கு வர, நாட்டிற்கு நன்மையும் #பாதுகாப்பும் பெருகிடும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.

– சுபம்.
YouTube:  https://youtu.be/GhFMbOnqKaw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *