11.05.2020 மகான் கணநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
#மகான் #கணநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
11.05.2020, #திங்கட்கிழமை

#தருமத்தை காக்க வந்த #குருவே
#தன்னிகரில்லாத ஞான குருவே
#கருமவினை போக்கவல்ல குருவே
#கந்தவேலன் சக்தியாக வந்த குருவே

குருவே #அரங்கனே உமை போற்றி
கூறிடுவேன் #தவபிரசன்ன ஆசி
பெருமைபட #சார்வரி தகர் திங்கள்
பேதமிலா எழுநான்கு திகதி #சோமவாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 28ம் நாள், 11.05.2020 திங்கட்கிழமை)

வாரமதில் கணநாதர் யானும்
வழங்குவேன் #உலக நலம் பெற
வீரமான #தொண்டர் படைகளை
விவேகமுடன் #சைவநெறி கூட்டி

கூட்டியே #ஞானவழி காட்டியே
குருபரனை வணங்கும் படி
காட்டியே #சரவணசோதி ஏற்றி
#கலியில் வழிபாடு செய்துவரும்

வருகின்ற #அரங்க ஞானி வழி
#வல்லமை காட்டும் உயர்வழி
தருகின்ற அரங்கஞானி #தீட்சை
தவத்தின் பூரண பலனை தரும்

தருகவே ஞானமாக அருளும்
#தவராஜன் ஆசி தீட்சை பெற்று
#வருகின்ற மக்கள் எல்லாம்
வாழ்வின் #துன்பங்களை வெல்வர்

வெல்வதுடன் #மாயை இடருடன்
விரட்டும் #பேரிடர் கட்டங்களையும்
வெல்வதுடன் #உயர் பாதுகாப்பும்
வேலவன் துணைபட #அடைவர்

#அடயோகியர் அனைத்து பேரும்
#அட்டதிக் பாலகர்கள் என அனைவரும்
#தடையின்றி பிரணவக் குடிலை
#தரிசித்து சூட்சும வடிவிலே

வடிவிலே வரம்பல தந்து
வடிவேலன் ஆணைக்கு இணங்கி
#குடிகொண்டு குடிலில் அருள்புரிய
#கும்பிட்டு #பிரணவக்குடில் #தங்கி

#தங்கி சேவை செய்யும் மக்கள்
#தனிப்பெருஞ் சக்தி கிட்டி
#இங்கனமே தவபலம் பெறுவர்
#இணைந்து தருமம் செய்யும் மக்கள்

மக்களெல்லாம் ஞானிகள் ஆவர்
#மரணம் வென்றும் சிறப்பர்
தேக்கமின்றி வர #திருவருள் பெறுவர்
தெரிவித்த தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் கணநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

இவ்வுலகின் தர்மத்தினை காக்க #அவதரித்த மகாகுருவே தன்னிகரில்லாத ஞானகுருவே மக்களின் #முன்ஜென்ம பாவங்களான கர்மவினைகளை போக்கி மக்களை கர்மவினைகளில் இருந்து #மீட்டு காக்கவல்ல ஞான குருவே முருகப்பெருமானின் சக்தியாக அவதரித்திட்ட மகா ஞான குருவே அரங்கமகா தேசிகரே உம்மை #போற்றி உலக நலன் கருதி தவபிரசன்ன ஆசி நூல் தனையே கணநாதர் யானும் சார்வரி வருடம் சித்திரை மாதம் 28ம் நாள் 11.05.2020 திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே உரைக்கின்றேன் என்கிறார் மகான் கணநாதர்.

வீரம்மிக்க #தொண்டர்படைகளை உருவாக்கி அவர்களை விவேகம் உள்ளவர்களாக ஆக்கி சைவ நெறியினில் அவர்களை நடந்திடச் செய்து அவர்களுக்கு ஞானத்தின் வழிதனை காட்டி குருபரனாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானை #வணங்கும்படி செய்துமே அவர்களுக்கு சரவண #ஜோதி வழிபாடுதனை #அறிவுருத்தி ஜோதி ஏற்றி வழிபட செய்து மக்களை #காக்கின்ற மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகரின் வல்லமைமிக்க உயர் ஞான நெறிமுறைகள் உலக மக்களை மேன்மை அடையச் செய்யும். மக்களுக்கு உயர் #ஞானம் அருளிய அரங்க ஞானியரின் #உண்மை ஞான வழிதனிலே வந்து ஆறுமுக அரங்க மகானிடத்து #தீட்சை #உபதேசம் அடைய அடைபவர்தமக்கு அரங்கனின் தவபலம் #பூரணமாய் அவர்களை அடைந்து பூரணபலனைத் தரும்.

மக்களுக்கு #ஞானமாக அருள் செய்து காக்கின்ற #தவராஜன் அரங்கரிடத்து ஆசி தீட்சை உபதேசம் பெற்று வருகின்ற மக்களெல்லாம் அவர்களது வாழ்வினிலே உண்டான #துன்பங்களை எல்லாம்வென்று சிறப்பர். #மாயை வெல்வர், மக்களை விரட்டி துன்பறுத்தும் #உயிர்பலி செய்யும் பேரிடர் துன்பங்களையும் கடந்து வெல்வதுடன் ஞானிகளின் உயர் பாதுகாப்பை முருகப்பெருமானின் #துணையுடன் அடைந்திடுவர்.

யோகத்திலும் ஞானத்திலும் #வெற்றிகண்ட வாசியை வென்ற நவகோடி #சித்தர்கள் அத்துனைபேரும் #அட்டதிக்கு பாலகர்கள் #தேவாதிதேவர்கள் மகாசக்திகள் #மும்மூர்த்திகள் என அனைவரும் எந்த வித தடையுமின்றி ஏழாம் படைவீடாம் துறையூர் #ஓங்காரக்குடிலை நாடி ஆங்கே முருகப்பெருமானின் #அவதாரமாக வீற்றிருக்கும் அரங்கரை தரிசித்து #சூட்சும வடிவிலே குடிலை சார்ந்து அரங்கரை தரிசிக்க வருகின்ற பக்தர் தமக்கு #வரம்பல தந்து முருகப்பெருமானின் #ஆனைக்கு ஏற்ப தொடர்ந்து #அன்பர் தமக்கு குடில் சார்ந்து அருள் புரிந்து நிற்கின்றார்கள்.

ஆதலினாலே துறையூர் #ஓங்காரக்குடில் #தங்கி தொண்டுசெய்யும் மக்களுக்கு தனிப்பெரும் சக்தி கிட்டி #தவபலம் பெறுவார்கள். அரங்கரின் தர்மங்களில் இணைந்து #பொருளுதவி செய்து #தொண்டுகள் செய்து தர்மத்தை #வளர்க்கின்ற மக்களெல்லாம் #ஞானிகள் ஆவார்கள். மரணத்தையும் வென்று சிறப்படைவார்கள். அரங்கரை #தடையின்றி பின்தொடர்ந்து வர அவர்களெல்லாம் திருவருளை பெற்று சிறப்படைவார்கள் எனக் கூறுகிறார் மகான் கணநாதர்.
– சுபம் –

YouTube:
https://youtu.be/CMGLhpZYTQ4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *