11.04.2020 மகான் சுக்கிர பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் #துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் சுக்கிர பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,
11.04.2020, சனிக்கிழமை

#மருந்தாக உள்ள அரங்கன் #கரங்கள்
மக்களை #காக்கும் சக்தியாக இருக்க
#அருந்தவசி தரும் அன்னதானமும்
ஆறுமுகனார் #அருமருந்தாக இருக்க

இருக்கவே அரங்கன் #பெருமை கூறி
இயம்பிடுவேன் அருள் பிரசன்ன ஆசி
கருத்தாக #சுக்கிர_பகவான் யானும்
கண்டுரைப்பேன் விகாரி சேல் திங்கள்

திங்களிலே இருபான் #நவதிகதி #காரி வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 29ம் நாள் 11.04.2020, #சனிக்கிழமை)
தேசிகனும் கேட்க உரைப்பேன்
#ஓங்காரக்குடில் உலகை காக்க
#உயிர்ப்பலி நிகழா போக்க வந்த #குடில்

குடிலின் பெருமை #அறிந்து வந்து
#குருவாக இருக்கும் அரங்கமகானை
#தேடிவந்து உலக மக்கள்
#தீட்சை பெற்று #வழிபாடு காண

காணவே அரங்கன் #தருகின்ற
#கனிவுமிக்க தருமம் தன்னில்
#தானாக முன்வந்து பங்களித்து
#தருமமிட உதவி ஆசி பெற்று

#ஆசி பெற்று அரங்க ஞானி
ஆற்றல்மிக்க சைவ #நெறிக்கொள்கை
நேசமுடன் #உலகமக்கள் ஏற்று
நிலமதனில் #ஜீவதயவோடு நடக்க

நடக்கவே மக்களுக்கு #பாதுகாப்பு
நம்பகமுற இனிதே #வாய்க்கும்
தடையின்றி #சன்மார்க்கம் வழி
தயவென #வந்த மக்களுக்கும்

மக்களுள் அரங்க ஞானியரிடம்
#மார்க்கமுடன் ஆசி பெற்றவர்களும்
#ஊக்கமுடன் தருமத்தில் உதவி
#உயர்வான #தருமவான் ஆனவர்களும்

ஆனதொரு #புலால் உணவு தவிர்த்து
அனைத்துயிரும் #தன்னுயிராய் எண்ணி
ஞானதேசிகன் #வழி தொடர
ஞானிகளை #வணங்கி பூசை செய்து வர

வருகவே #நடைமுறை சிக்கலாக
வந்ததொரு #நச்சுக்கிருமி வழி
பேரிடர்கள் #அனுகா விலகி
பெரும் பாதுகாப்பு #வந்தடையும்

அடையுமே பாரத #பூமியும்
ஆறுமுகனார் #அருளாசி தன்னால்
தடையற #தவராசன் வழியை
தரணியோரும் #தொடரவே காப்பு கூடும்
    அருள் பிரசன்ன ஆசி முற்றே.

   – சுபம்.

#முருகப்பெருமான் துணை

மகான் சுக்கிர பகவான் அருளிய #அருள்பிரசன்ன ஆசி #நூலின் #சாரம் :

 உலக மக்களைக் காக்கும் அருமருந்தாக உள்ள அரங்கனின் திருக்கரங்கள் இவ்வுலக மக்களை காக்கும் மகா சக்தியாக இருக்க, #அரும்பெரும் மகா #தவசி, ஞானிகளை வணங்கி மக்களுக்கு அருளும் #அருளமுதாகிய அன்னதான உணவு முருகப்பெருமானின் அருமருந்தாக இருக்கின்றதப்பா. அத்தகைய முருகப்பெருமானின் ஆற்றல் வடிவாகிய ஆறுமுக அரங்கமகா தேசிகரே உமது பெருமையே உலகமெலாம் கூறியே உலக நலம் #கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 29ம் நாள் 11 . 04 . 2020, சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே சுக்கிர பகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சுக்கிர பகவான்.

 ஆறுமுகப்பெருமானால் அமைக்கப்பட்ட #ஏழாம்படை வீடாம் #துறையூர் #ஓங்காரக்குடில் உலக மக்களை காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இந்த உலகினில் உள்ள #உயிர்ப்பலி மற்றும் #புலால் உணவை உண்பதையும் #மாற்றி உயிர்ப்பலி நிகழாத ஜீவதயவுடைய #உலகை அமைத்திடவும் முருகப்பெருமானால் அமைக்கப்பட்டதாகும். ஆதலினாலே வல்லமைமிக்க ஏழாம்படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலிலே உலக மக்கள் #பயபக்தியுடன் நாடி வந்து ஆங்கே உலகை காக்கும் #சற்குருவாக வீற்றிருக்கும் அரங்கமகானை பணிந்து வணங்கி #அண்ணல் அரங்கரிடத்து #தீட்சை உபதேசம் அடைந்து #அரங்கர் உபதேசித்த வழியினை பின்பற்றி வழிபாடுகளை செய்து வருவதுடன் #அரங்கன் உலகமக்களுக்கு கனிவோடு அருளும் தர்மத்தினை வளர்க்கும்விதமாக தானாக #முன்வந்து #பொருளுதவிகள் செய்து தர்மத்தை #வளர்த்து ஞானிகளாசி பெற்று அரங்கன் கூறிய உண்மை ஞானநெறியை கடைப்பிடித்து ஜீவதயவோடு நடந்து வர வேண்டும்.

 #உலகோர் அரங்கன் கொள்கையை #ஏற்றுக்கொண்டு ஜீவதயவோடு நடந்துவர, உலக மக்களுக்கு ஞானிகளின் #அருள் பாதுகாப்பு இறுதியாக கிடைக்கும். அரங்கனின் தூய சன்மார்க்க நெறியை #கடைப்பிடிக்கின்ற மக்களுக்கும் அரங்க ஞானியரிடம் #முறையாக_ஆசி பெற்றவர்களுக்கும் ஊக்கமுடன் தளராது அரங்கன் தர்மத்தை வளர்க்க பொருளுதவி செய்து #தர்மவான்களாக ஆகியவர்களுக்கும் ஞானிகள் ஆசி கிடைத்து நல்வாழ்வை வாழ்வார். அவர்களெல்லாம் உயிர் கொலை தவிர்த்து புலால் மறுத்து #சுத்தசைவ நெறியை கடைப்பிடித்து ஞானிகளை வணங்கி #தவறாது பூசைகளை செய்து வரவர உலகினில் தற்போது நிலவி வரும் நடைமுறை சிக்கலான நச்சுக்கிருமியினால் வந்த பேரிடர்களெல்லாம் அவர்களை விட்டு விலகி ஞானிகளின் அருள் பெரும் பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்கும்.

 #பாரதபூமியும் முருகப்பெருமான் ஆசியினால் பாதுகாப்பு பெறும், தேச மக்கள் தவராசன் அரங்கன் வழியை #பின்பற்ற தேச மக்களுக்கு முருகப்பெருமானின் பாதுகாப்பு தொடர்ந்து கிட்டும் என கூறுகிறார் மகான் சுக்கிர பகவான் .

 – சுபம்.
YouTube : https://youtu.be/tnZd4OHUrgY

1210 mahan Sukkira bagavaan aruliya arul prasanna asi nool 11.04.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *