10.05.2020 மகான் கண்ணிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணைமகான் #கண்ணிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,10.05.2020, #ஞாயிற்றுக்கிழமை#தருமனே கலியுகத்தின் தவசியே#தரணி வெல்லும் தவபலத்தைஆறுமுகனாரிடம் #வரமாகப் பெற்ற#அண்ணலே ஆறுமுக அரங்கனேஅரங்கனே உன் #தவபலம் மெச்சிஅருளுவேன் சார்வரி தகரின் திங்கள்#வரங்களென இருபானேழ்திகதி கதிர்வாரம்(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 27ம் நாள், 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை)வழங்குவேன் #தவபிரசன்ன ஆசிஆசியை கண்ணிச்சித்தர் யானும்#அருளுவேன் உலக நலம் காண#வாசி வென்ற ஞானிகள் சூழ்ந்த#வரம்பெற்ற பிரணவக் குடிலைகுடிலை உலகோர் #வணங்கிவர#கோள் குற்றம் யாவும் விலகும்#தேடியே அரங்க மகானின்#திருவடி பணிந்து தீட்சை பெறதீட்சைபெற #தீவினை அகலும்#தொடர்ந்து அரங்க மகானின்தீட்சைபடி #ஞான வழித் தொடர#தொண்டென அரங்கன் காட்டும்காட்டும் #அன்னதான நெறியைகட்டாயம் மக்கள் #பின்பற்றி#வாட்டம் போக எங்கும் தருமம்#வளர வகை செய்து தொடரதொடர துன்பமில்லா #வாழ்வு#தோல்வியில்லா ஞான வாழ்வுமாக#தடையற சிறந்து உலகோர்தவராசன் #ஆசிபட வாழ்வர்வாழ்வினில் அகிலத்தை #இதுகாலம்வதைக்கின்ற #கிருமிவழி துன்பம்தாழ்வென அனுகி #தகர்க்கும்தரணியின் #அழிவுநிலை அகலஅகலவே #கலியுக மக்கள்#அறம்வழி வருதல் வேண்டும்மிகைப்பட #தான தருமம் செய்துமுருகப் பெருமான் வழிபாடுசெய்துசெய்துமே #ஞானிகள் வழிகளைசிறப்புற #பின்பற்றி வருக#மெய்ஞானம் அருளும் #குரு#மாதவசி அரங்க ஞானி ஆசி பெற்றுஆசிபெற்று வருதல் காணஅழிவின்றி அகிலமே #மீளும்ஆசிபெற்றிட #பாதுகாப்பு கூடும்அறிவித்த தவபிரசன்ன ஆசி முற்றே -சுபம்முருகப்பெருமான் துணைமகான் கண்ணிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்: #எல்லையிலா தர்மங்கள் செய்திட்ட தர்மராசனே கலியுகத்தின் #மகாதவசியே இவ்வுலகை வெல்லும் அளவிற்கு அளவிலாத #தவபலத்தை முருகப்பெருமானிடம் வரமாக பெற்றிட்ட #அண்ணலே ஆறுமுக அரங்கமகா தேசிகரே உமது தவபலத்தை மெச்சி #சார்வரி வருடம் #சித்திரை மாதம் 27ம் நாள் 10.05.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே #கண்ணிச்சித்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கண்ணிச்சித்தர். #வெல்லுதற்கரிய வாசியை வென்று மரணமில்லா பெருவாழ்வை பெற்ற #ஞானிகள் சூழ்ந்த ஞான #பீடம் எல்லையிலா வரம் பெற்ற #ஏழாம்படைவீடு #துறையூர் ஓங்காரகுடிலினை உலக மக்கள் #பயபக்தியுடன் அணுகி அரங்கமகானை வணங்கி வர அவர்களை பற்றிய #கிரகதோஷங்கள் யாவும் அவர்களை விட்டு விலகும். அரங்க மகானிடத்து #தீட்சை உபதேசம் பெற அவர்களை பற்றிய தீவினைகள் அகன்று ஓடும். அரங்க மகானிடத்து ஏற்ற தீட்சை உபதேசத்தின் #படி நடந்து அரங்கரை பின்தொடர்ந்து வருவதுடன் அரங்கர் காட்டும் #தர்மநெறியிலே சென்று #தன்னலமற்ற #தொண்டுகளை செய்து #அன்னதானங்கள் செய்து வருவதுடன் உலகமெங்கும் தர்மம் மலர்ந்திட வழிவகை செய்து வர அவர்களுக்கு துன்பமில்லாத #வாழ்வு தோல்வியற்ற ஞானவாழ்வாக அமைந்து தடைகள் ஏதுமின்றி அரங்கமகானின் ஆசியுடன் #சிறப்புடன் வாழ்வார். உலகினில் #இதுகாலம் மக்களை துன்புறுத்துகின்ற கிருமிவழியிலான துன்பம் #அகன்று ஓட வேண்டுமாயின் கலியுக மக்கள் எல்லாம் #அறவழியில் வந்திட வேண்டும். #அதிகமாக தர்மங்களை செய்து உலகின் தர்மபலத்தை பெருக்க வேண்டும். முழுமுதற் #கடவுள் முருகப்பெருமானை #வழிபடு தெய்வமாக ஏற்று தொடர்ந்து வழிபாடுகளை செய்து வர வேண்டும். #முற்றுப்பெற்ற ஞானிகள் கூறிய தயவுநெறியை ஏற்று #பின்பற்றி வர வேண்டும். மெய்ஞானம் அருளும் #ஞானகுரு மாதவசி அரங்கமகா தேசிகரின் #ஆசி பெற்று வந்தால் இந்த உலகம் #மீண்டு விடும். அரங்கன் ஆசி பெற அருள் பாதுகாப்பு பெருகும் எனக் கூறுகிறார் மகான் கண்ணிச்சித்தர்.– சுபம் –


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *