10.05 முதல் 17.05.2020 எதிர்காலம் குறித்த இந்தியா தமிழகத்தில் நிகழ்வு அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை
கண்டவர் முருகப்பெருமான்
எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

#சார்வரி வருடம் #சித்திரை மாதம் 27ம் திகதி முதல் சார்வரி வைகாசி மாதம் 04ம் திகதி வரை
(10.05.2020 ஞாயிறு முதல் 17.05.2020 ஞாயிறு வரை)
சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed.

மனிதனே மனுகுலத்தை #அழிக்க
மற்றதேசங்களை #ஒடுக்கி வல்லமைநாட்ட
மனிதனே மனிதனுக்கு செய்த சதி
மக்களிடை #இழிகுணம் பெருகியது தன்னால்

தன்னிலே இதுகலித்துன்பமாக #பரவி
தரணியை அழித்து வருகவே
இன்னாளில் #இந்தியா தமிழக
#எதிர்கால பலன் குறித்த ஆசிதன்னை

தன்னிலே சார்வரி தகர் திங்கள் இருபானேழ்திகதி மேல்
தக்க விடைதிங்கள் #சதுர் திகதி வரை
இன்னாளில் நிகழ்வான எதிர்கால பலனை
இயம்பிடுவேன் அகத்திய #மகரிஷி யானும்

யானும் வார ஆசியாக உரைப்பேன்
உலகையே #அச்சுறுத்தும் #கிருமிவல்லல்
#ஞானபூமி இந்தியா தமிழகத்திலும்
#நட்டமும் பொருளாதார நலிவும்

நலிவுடன் மக்களின் #அலட்சியம் வழி
நாலா திக்கிலும் #பரவி நின்று
#அழிவு பெருக்கம் காணக் கூடும்
#அரசு நடவடிக்கைகள் கூட

கூடவே மக்களிடை #வெற்றி காணா
குழப்பமும் #சஞ்சலமும் மிகுதிபடும்
#நாடெங்கிலும் இந்த துன்பம் விலக
நச்சுக் #கிருமி வழி அழிவை போக்க

போக்கவே #ஆளுமை சக்திகள்
பொறுப்புடன் ஒற்றுமைபட இயங்கி
#ஊக்கமுடன் மக்களை காத்திடும்
#உயர்வான நடடிக்ககைகள் கையாண்டு

கையாண்டு #விழிப்புணர்வு சார்ந்து
#கண்டிப்புமிக்க செயலாக்கும் பரவிட
#தயவுமிக்க நல்ல திட்டமுடன்
தாராள உதவிகளை செய்து கொண்டு

கொண்டுமே #ஆளுபவர்கள் சமத்துவம்
குடிமக்களும் #பின்பற்றும்படி நடத்திட
தொண்டில் #பிழை எக்காலமும் வரா
தூய்மைபட நடத்தி மனித நேயம் வளர்க்க

வளர்ப்பதுடன் #உயிர்கொலை நீக்கி
வள்ளல் நெறி #அரங்கஞானி வழியை
#தளர்வின்றி மக்கள் பின்பற்ற செய்ய
தமிழகம் இந்தியா இயற்கைதயவால் சடுதி மீளும்
வார ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் #அகத்தியமகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :
சார்வரி வருடம் சித்திரை மாதம் 27ம் நாள் 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை முதல் சார்வரி வருடம் வைகாசி மாதம் 04ம் நாள் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நிகழவிருக்கும் #நிகழ்வுகள் :

இவ்வுலகினில் கலியுகத்தின் #வக்ரம் உச்ச நிலைக்குச் சென்று மனிதர்களுக்குள் தாங்கள் தான் #பெரியவர் என்ற போட்டிகளின் காரணமாக #மனுவம்சத்தின் மூலம் தோன்றிய மனிதனே சக மனிதர்களை வெல்லவும் இந்த மனிதகுலத்தை #அழித்து தானே பெரியவன் என்பதை #நிலைநாட்ட ஒரு தேசத்தை சேர்ந்தவர்கள் மற்ற #தேசங்களை ஒடுக்கி வல்லமைகளை காட்டியும், மனிதனே மனிதனுக்கு செய்த #சதியினாலும், மக்களிடையே இழிகுணங்கள் பெருகியதாலும் இத்தகைய #செயல்பாடுகளெல்லாம் உலகினில் பெரும் துன்பமாக பரவி உலகினை அழித்துவருகின்றது. இப்படிப்பட்ட துன்பமிக்க சூழ்நிலையிலே இந்தியாவிலும், தமிழகத்திலும் சார்வரி வருடம் #சித்திரை மாதம் 27ம் நாள், 10.05.2020 #ஞாயிற்றுக்கிழமை முதல் #வைகாசி மாதம் 04ம் நாள், 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்திலே நடக்கவிருக்கும் நிகழ்வுகளை #வார ஆசி நூலாக அகத்திய மகரிஷி யானும் அரங்கருக்கு எதிர்கால பலனாக வார ஆசி நூலாக உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி.

#உலகையே அச்சுறுத்தி வருகின்ற நச்சுக்கிருமியினால் உண்டாகின்ற துன்பமானது #தற்சமயம் #ஞானபூமியாகிய இந்தியாவிலும், தமிழகத்திலும் #நஷ்டங்களை உண்டாக்குவதோடு பொருளாதாரத்தில் #நலிவை உண்டாக்கி வருகிறது. இந்திய தேசத்தினிலே #அரசானது மக்களை #காப்பதற்காக செய்திட்ட ஏற்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் மக்கள் #மீறி அலட்சியமாய் நடந்துக்கொண்டதால் நச்சுக்கிருமியினால் உண்டான துன்பங்கள் நாலாதிக்கிலும் #பரவி நின்று நாட்டினில் அழிவினை #பெருக்கி வருகிறது.  #அரசு நடவடிக்கைகளை எடுத்திட்டாலும் அவை #செயல்பட முடியாமல் மக்களிடம் #வெற்றி அடைய முடியாமல் போனதினாலே நாட்டினில் சஞ்சலங்களும் #குழப்பமும் இனி மேலும் அதிகமாகும்.

நாடெங்கிலும் நச்சுக்கிருமிகளால் உண்டான துன்பங்கள் #விலகிட வேண்டுமாயின், நச்சுக்கிருமிகளால் மேலும் #அழிவு உண்டாகாமல் இருக்க வேண்டுமாயின் நாட்டை ஆளுகின்ற #ஆட்சியாளர்கள் தங்களுடைய பொறுப்பினை உணர்ந்து பொறுப்புடன் நடந்து, ஆட்சியாளர்களுக்குள் #கருத்து வேறுபாடுகள் இல்லாமல் மக்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே #குறிக்கோளுடன் ஒன்றுபட்டு இயங்கி ஊக்கமுடன் மக்களைக் காக்கின்ற வகையிலே நல்ல பல உயர்வான, #விரைவான நடவடிக்கைளை எடுத்து மக்களுக்கு நச்சுக்கிருமிகளால் உண்டாகுகின்ற #ஆபத்துகளை விளக்கமாக எடுத்துரைத்து மக்களிடம் #விழிப்புணர்வினை உண்டாக்கி, #கண்டிப்புடன் செயல்பட்டு அதேசமயம் மக்களுக்கு #பெருந்துன்பம் தராத வகையிலே #தயவுமிக்க நல்ல பல #திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு தேவையான #ஜீவாதார அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலே தாராளமாய் உதவிகளை செய்து, நாட்டு மக்கள் அனைவரையும் #பாகுபாடின்றி சமத்துவமாய் நடத்தி #மக்களும் அரசின் கோட்பாடுகளுக்கும், #கட்டளைகளுக்கும் இணங்கி அரசின் உத்தரவுகளை #பின்பற்றி நடந்து வர, அரசின் சேவைகளிலே எந்தவித #பிழைகளும் எக்காலமும் வராதவாறு ஆட்சியாளர்கள் #தூய்மையுடன் நடந்து மனிதநேயத்தினை வளர்த்து உயிர்கொலை நீக்கி, புலால் மறுத்து, சுத்த #சைவ உணவை மேற்கொண்டு வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய #ஜீவகாருண்ய நெறியை, #மகாதவசி ஆறுமுக அரங்கமகான் கூறும் #தூய நெறியை உறுதியுடன் பின்பற்றி மக்களெல்லாம் நம்பிக்கையோடு செயல்பட தமிழகமும், இந்தியாவும் #இயற்கையின்_தயவால், இந்த தேசத்தைக் காத்து நிற்கும் #ஞானிகளின்_அருளாலும் தற்சமயம் நச்சுக்கிருமிகளால் நாட்டினில் உண்டான பெரும்துன்பங்களில் இருந்து விரைந்து #விடுபட்டு மீளும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.
– சுபம் –

இந்த உலகினில் மனிதனுக்காக #இயற்கை கோதுமை, நெல், பார்லி, ஓட்ஸ் போன்ற #தானியங்களையும் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற அனேக உணவு #பொருள்களையும் கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கேரட் இப்படி கணக்கற்ற #காய்கறிகளையும் அதுமட்டுமல்லாமல் #கீரைவகைகள், #கிழங்குகள், #தண்டுகள், #இலைகள், #மலர்கள், #கனிகள் என மனிதன் உண்ணுகின்ற வகையிலே எண்ணற்ற தாவரவர்கங்களை படைத்து மனிதனுக்காக #சாத்வீக உணவை இயற்கை தந்துள்ளது. ஆயினும் மனிதனோ தாம் தமது #பகுத்தறிவைக் கொண்டு இயற்கையால் படைக்கப்பட்ட #உயிரினங்களுக்கு தொண்டு செய்து #புண்ணியத்தை பெருக்காமல் வாயில்லா #ஜீவன்களை கொன்று அதன் #புலாலை உண்டு பெரும் #பாவத்தை செய்து கொண்டிருக்கின்றான். அவன் செய்த உயிர்கொலை பாவமானது #ஒருபோதும் இயற்கையின் ஆசியையோ கடவுளின் #ஆசியையோ பெற #விடாது. உயிர் கொலை செய்தவர்கள் ஒருபோதும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது.
ஆதலினால் #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு #கடவுள் உண்டு என்று நம்பி தினம் தினம் தவறாமல் #ஞானிகள் பேரில் பூஜைகளை செய்து இயற்கையால் படைக்கப்பட்ட உயிரினங்கள் மீது #தயவு காட்டி தர்மங்களை செய்து வாழ்ந்தால் #இயற்கையின் ஆசியையும் பெறலாம் #முழுமுதல் கடவுளான முருகப்பெருமான் ஆசியையும் முற்றுபெற்ற ஞானிகளின் ஆசியையும் பெற்று #ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பது ஞானிகளின் வாக்காகும்.

– உலகப்பேராசான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.
https://youtu.be/ucX8vNNzvzA

அகத்தியர் மஹரிஷி ஓலை சுவடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *