10.04.2020 மகான் புதன் பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் புதன் பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T . ராஜேந்திரன் , M . A . , B . Ed . ,
10.04.2020, #வெள்ளிக்கிழமை

அவதார ஞான #சூட்சுமமாக
ஆறுமுக சக்தியாக வந்தகுருவே
#புவனம் காக்க #மாதருமமதை
#புண்ணியமாகச் செய்து வரும் அரங்கனே

அரங்கனே உன் பெருமை கூறி
அகிலமதில் #விகாரி சேல் திங்கள்
வரங்களென எழுநான்கு திகதி புகர் வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 28ம் நாள் 10.04.2020, வெள்ளிக்கிழமை)
வழங்குவேன் அருள் பிரசன்ன ஆசி

#ஆசியை புதன் பகவான் யானும்
#அருளுவேன் உலகோர் நலம்பெற
வாசி வென்ற ஞானிகள் #கூட்டம்
வணங்கி அரங்க ஞானி #குடிலை

குடிலை #பாதுகாத்து வருதலுற
குவலயத்தார் #பிரணவக் குடிலை
நாடியே உலக மக்கள் வணங்கி
ஞான தீட்சை அடைந்து வருக

வருகவே மக்களிடை #தெளிவும்
வல்லமையும் ஞானபலமும் கூடும்
#முருகப்பெருமான் அருளும் தயவும்
முழுமையான ஞானமும் #வந்தடையும்

அடையவே அரங்கமகான் வடிவில்
ஆறுமுகனார் #காட்டும் அன்னதான வழியை
#தடையின்றி மக்கள் பின்பற்றி
தருமத்தில் பொருளுதவி செய்து

செய்துமே அன்னதானமதை 
#செப்பிட உலகளாவிய வண்ணம்
மெய்யுடனே செய்து #கொண்டு
மண்ணுலகம் தருமபலம் காண

காணவே தரும சக்தி கூடவே
கலிகாலத் துன்பமாக வந்த
ஞானமிலா #நச்சுக்கிருமி இடர்
#நாடெங்கும் மரண துன்பம் தரா

துன்பம்தரா #விலகி மாற்றம்
தேசமெங்கும் #தெய்வ பலத்தால்
துன்பமிலா பாதுகாப்பான வாழ்வாக
#திருவருளால் சகலதும் மாறும்

மாறுதலை #செய்ய வந்த ஞானி
மகான் #அரங்கன் காட்டுகின்ற
மாறுதல் தரும் பாதுகாப்புதரும்
மகத்துவமுள #சைவ நெறிக்கு வர

வருகவே #நடப்புகால துன்பம்
#வடிவேலன் சக்தியால் விலகும்
#முருகா எனும் செபதபமே #மாற்றம்
முழுமைபட மக்களுக்கு தரும்
 அருள் பிரசன்ன ஆசி முற்றே.
 – சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் #புதன் பகவான் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் #சாரம் :

  ஞானத்தின் சூட்சும அவதாரமாக #வந்துதித்த மகா ஞானியே, ஆறுமுக பெருமானே, மகாசக்தியாக வந்துதித்த #ஞானகுருவே, எல்லையிலாது #புண்ணியங்களை செய்து வருகின்ற கலியுக மகா ஞானியே, ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலன் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 28ம் நாள் 10.04.2020, வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே புதன் பகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் புதன் பகவான்.

#வெல்லுதற்கரிய வாசியை வென்றிட்ட மகா #ஞானியர்கள் கூட்டம் #துறையூர் ஒங்காரக்குடிலை சார்ந்து பாதுகாத்து வருகின்றனர். ஆதலினாலே உலகமக்கள் ஓங்காரக்குடிலை பயபக்தியுடன் #நாடி வணங்கி ஆசான் அரங்கரிடத்தில் ஞான தீட்சைகளை பெற்று #அரங்கன் உபதேசித்த #வழி நடந்து வர, வருகின்றவர்களிடையே #வல்லமைகள் பெருகி ஞானபலமும் பெருகி முருகப்பெருமானின் அருளும் தயவும் முழுமையான #ஞானமும் அவர்களுக்கு #தானே வந்தடையும். ஆறுமுக அரங்கமகா தேசிகனார் #முருகப்பெருமானின் அவதாரமாவார். ஆதலினாலே அரங்கமகான் #உருவினிலே முருகப்பெருமானார் காட்டுகின்ற #அறநெறியாகிய அன்னதான வழியிலே உலக மக்களெல்லாம் #ஏற்று நடந்து வர, தர்மங்களை தாராளமாய் செய்து வர, அரங்கரின் தானதர்மங்களிலே #தடையின்றி தர்மம் நடக்க, #பொருளுதவிகளை செய்து வருவதுடன் #தொண்டுகளையும் செய்து வந்து அற்புதமான இந்த அன்னதான தர்மத்தை #உலகளாவிய வண்ணம் பரப்பி, உலகமெங்கும் தானதர்மங்கள் பெருகி, இந்த உலகமே தர்மபலம் காண, உலகை #அண்டிய பேரிடர்களெல்லாம் #விலகி, நச்சுக்கிருமித் #தொல்லைகள் ஒரு முடிவுக்கு வந்து, #நாடெங்கும் உள்ள மரணத்துன்பங்கள் #நீங்கி , நாட்டினில் #அமைதி நிலவி பெரும் மாற்றங்களை #காணுமப்பா. தேசமெங்கும் #தெய்வபலம் பெருகி மக்களின் வாழ்க்கையை துன்பமில்லாத பாதுகாப்பான வாழ்வாக #தெய்வத்தின் திருவருளால் சகலமும் நன்மையாகவே #மாற்றமடையும்.

  உலகினில் பெரும் மாற்றங்களை செய்து ஞானயுகமாக இந்த கலியுகத்தை மாற்ற வந்த #யுகமாற்ற ஞானி, #மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர் காட்டுகின்ற உண்மை ஞானநெறியானது உலகினில் பெரும் மாற்றங்களைத் தரும். அரங்கன் காட்டும் #ஜீவதயவு நெறியாம் சுத்த #சைவ நெறியாகிய #உயிர்க்கொலை தவிர்த்து, #புலால் மறுத்து, சுத்த சைவ உணவினை மேற்கொள்ளும் அன்பர்களுக்கு #தற்காலம் நடந்து வருகின்ற நச்சுக்கிருமி தாக்குதலால் உண்டாகும் #மரணபயமோ துன்பமோ அவர்களை #விட்டு உடன் விலகும். நச்சுக்கிருமிகளால் #எந்தவித பாதிப்பும் உண்டாகாது. முருகப்பெருமான் ஆசியால் அனைத்து #இடர்களும் தானே விலகும்.

#முருகா எனும் வல்லமைமிக்க #மகா_மந்திரமே, அந்த மந்திரத்தை #ஜெபிக்கும் ஜெபதபத்தின் வலிமையே , இந்த உலகினில் முழுமையான மாற்றங்களை மக்களுக்கு தந்தருளும் எனக் கூறுகிறார் மகான் புதன் பகவான். 
 – சுபம்.

1209 mahan budhan bagavaan aruliya arul prasanna asi nool 10.04.2020 
https://youtu.be/MZuJ2jiSEG8


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *