09.04.2020 மகான் குரு பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் குரு பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T . ராஜேந்திரன் , M . A . , B . Ed . , 
09.04.2020, #வியாழக்கிழமை

தவசியே #கலியுகத்தின் ஞானியே
#தரணி காத்திட ஆறுமுகனார்
அவதார சக்தியாக வந்த அரங்கனே
அகிலமதில் உன் #பெருமை கூறி

கூறியே #அருள்பிரசன்ன ஆசி
குவலயமதில் விகாரி சேல் திங்கள்
இருபானேழ் திகதி #வேந்தன் வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 27ம் நாள் 09.04.2020, வியாழக்கிழமை)
இயம்பிடுவேன் #குருபகவான் யானும்

யானும் உலகோர் நலம்பெறவே
உயர் #ஞானி கேட்கவே அருள்வேன்
தானமோடு #தவதரும வேலியை
தரணியெங்கும் #சக்தியாக பரப்பி

பரப்பியே மக்களை காத்திட
#பாலதண்டாயுதன் வரமாக நின்று
தரணியில் #குருவாய் அருளும்
தவராசன் #உபதேசம் ஏற்றுவர

வருகவே மக்களிடை #சிறப்பும்
#வளர்ச்சியும் மாற்றமும் காணும்
#முருகா எனும் செபதபமுடன்
மண்ணுலகே #சோதி வழிபாடு செய்து

செய்துமே அரங்க மகானை
செப்பிட குருவாக #ஏற்றுமே
#மெய்ஞான வழியைத் தொடர
மக்களிடை பக்குவமும் தெளிவும்

தெளிவுடன் #திருவருள் பலமும்
தேசமெல்லாம் பேரிடர் #வந்தாலும்
#அழியாமை எனும் பலம் பெற்று
அரங்கஞானி #வழிவரும் மக்களெல்லாம்

மக்களெல்லாம் மரணம் வெல்லும்
மகத்துவமும் ஆற்றலும் பெறுவர்
தேக்கமின்றி அன்னதானமதை
தேசிகன் கொள்கையாக அகிலம் எங்கும்

அகிலமெங்கும் செய்து வருக
அகிலமே தரும பூமி ஆகி
வகைபடா சகலவழி அழிவும்
வருமுலகில் தொடரா பரவாவிலகி

விலகியே உலகம் பாதுகாப்பும்
விரைந்து மீட்பும் அமைதியும்
வேலவன் ஞானவழிக்கு வர
விளம்பிடுவேன் சடுதி உண்டாகும்

ஆகவே ஞான குருவாக #உலகில்
ஆறுமுகனார் ஆசிபட வந்த
மகான் அரங்கனை #குருவாக ஏற்றிட
மண்ணுலகில் குருபகவான் என் அருளும் #பெற்றுயர்வர்
அருள் பிரசன்ன ஆசி முற்றே.

– சுபம்.

முருகப்பெருமான் துணை
மகான் #குரு பகவான் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

#எல்லையில்லா தவங்களைச் செய்திட்ட மகா தவசியே கலியுகத்தின் வாழும் ஞானியே இவ்வுலகை காத்திடவே முருகப்பெருமானாரின் #அவதாரமாக வந்துதித்திட்ட அரங்க மகானே அற்புதம்மிக்க உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலம் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 27ம் நாள் 09.04.2020, வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன #ஆசி நூல்தனையே குருபகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் குருபகவான். 

தான #வேலியிட்டும், தவ வேலியிட்டும் #காக்கும் அரங்கமகான் அளவிலாது தர்மங்களைச் செய்து தருமவேலிதனை உலகமெங்கும் சக்திகளைச் செய்து தருமவேலிதனை உலக மக்களைக் காத்து வருகின்றார். #சாட்சாத் பரப்பிரம்மமாகிய அந்த பாலதண்டாயுதன் முருகப்பெருமானே அரங்கமகான் எனும் ஞானகுருவாக அவதரித்து அரங்கனைச் #சார்ந்து நின்று வரமளித்து காத்து வருகின்றதினாலே, அரங்கமகானை குருவாய் ஏற்றுக்கொண்டு அரங்கரின் உபதேசங்களை ஏற்றுக்கொண்டு பின்பற்றி நடக்கின்றவர்களுக்கு நல்ல #வளர்ச்சியும் #மாற்றமும் உண்டாகி சிறப்படைவார்கள்.

#முருகா முருகா என்றே #தினம்தினம் தவறாமல் பக்தியுடன் பூஜைகளை செய்து வருவதுடன் அவதார ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனாரைக் குருவாக ஏற்றுக்கொண்டு, அரங்கரின் #மெய்ஞான வழியை ஏற்றுக்கொண்டு பின்தொடர்ந்து வரவர, மக்களிடையே தெளிவு உண்டாகி #மனபக்குவமும் உண்டாகி திருவருள் பலமும் பெருகி , பாதுகாப்பை பெற்று #தேசமெங்கும் பேரிடர்கள் வந்திட்டபோதும் இவர்களெல்லாம் #மரணம் இல்லாமல் அழிவிலாது பாதுகாப்பை பெறுவார்கள். மரணத்தை வெல்லும் #மார்க்கத்தினில் சென்று மரணத்தை வெல்லும் தகுதியினை பெற்று சிறப்படைவார்கள். 

ஆறுமுக அரங்கமகான் ஆற்றும் அன்னதானப் பணிகளை அரங்கரின் கொள்கையாக உலகமெங்கும் பரப்பி அன்னதானத்தினை செய்து வர, உலகமெலாம் தருமம் பெருகி உலகமே #தருமபூமியாக ஆகி, சகலவிதமான #அழிவுகளில் இருந்தும் உலகம் பாதுகாப்பை பெறும், உலகம் தற்சமயம் உள்ள பேரிடர்களில் இருந்து விரைந்து மீளும். உலகோர் முருகப்பெருமானின் உண்மை ஞானநெறிக்கு வர, விரைந்து பேரிடர் துன்பம் நீங்கும். உலகை வழிநடத்தும் ஞானகுருவாக முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கமகான் அவதரித்து இருக்க, ஆறுமுக அரங்கமகானை குருவாக ஏற்று #பின்தொடர அவர்களுக்கெல்லாம் குருபகவான் எனது அருளையும் ஆசியையும் பெற்று சிறப்படைவார்கள் எனக் கூறுகிறார் மகான் குருபகவான். 
– சுபம்.
https://youtu.be/_CWhU4xTltQLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *