08.09.2020 மகான் எறிபத்த நாயனார் அருளிய தவபிரசன்ன ஆசி நூல்

 முருகப்பெருமான் துணை

மகான் எறிபத்த நாயனார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A, B.Ed., 08.09.2020, செவ்வாய்கிழமை 1.யோகானந்த சற்குரு ராசனே உயர்சேவை ஆற்றி உலகில் மிகையான தருமம் செய்துவரும் மாதவசியே ஆறுமுக அரங்கனே 2. அரங்கனே உன் பெருமை கூறி அகிலமதில் சார்வரி யாளி திங்கள் இருபான் சூல திகதி குசன் வாரம் (சார்வரி வருடம் ஆவணி மாதம் 23ம் நாள், 08.09.2020 செவ்வாய்கிழமை) இயம்பிடுவேன் தவபிரசன்ன ஆசி 3.ஆசிதனை எறிபத்த நாயனாரும் அருளுவேன் உலகோர் நலம்பெற ஆசிதந்து உலகை வழிநடத்தும் ஆறுமுக அரங்கமகா ஞானியரின் 4. ஞானியரின் சன்மார்க்க வழிதனை நம்பகம் கொண்டு மக்கள்வர ஞானிகள் பூசை செய்துவர ஞானவான்கள் ஆகும் ஆளுமை கூடி 5. கூடியே கலிகால துன்பம் விலகி குவலயத்தில் தருமமும் ஞானமும் கூடியே ஞானயுகம் நிலை குறைவின்றி நிறைந்து மாற்றம் 6.மாற்றம் ஞானியரால் நடந்தேறும் மகத்துவம் கண்டு உலகமே ஆற்றல் பெருக்கம் அடைவதுடன் ஆறுமுகனார் ஆளுமை ஆகும் 7.ஆகவே அரங்கன் சீடர்களாகி அகிலமெங்கும் தரும சேவை யுகமாற்றமாக செய்துவரும் மக்களே உங்களுக்கு அரங்கஞானி காப்பு வேலி 8. காப்புவேலி சக்தியாய் இருக்க கருணைபட தொடரும் மக்கள் காப்புடன் கந்தவேலன் அருளும் கலிமீட்பின் சக்தியாகப் பரவி 9.பரவி இந்த பாருலகே பாதுகாப்பும் இயற்கை வளமும் குறைவிலா நீர்நில வளமும் குன்றாத தான தரும பலமும் கூடி 10. கூடியே எங்கும் எதிலும் குறைகள் குளறுபடி இல்லா திடமும் ஞானவான்கள் ஆட்சியும் தேசமெல்லாம் பரவி மாற்றம் 11. மாற்றம் ஞானயுகம் ஆகும் மகான்கள் திருவடி பற்றிட ஏற்றமும் கடைத்தேற்றமும் உருவாகும் இயம்பிய தவபிரசன்ன ஆசி முற்றே -சுபம்- https://youtu.be/mjKPuMTk60s


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *