08.05.2020 மகான் கடுவெளிச்சித்தர் தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான் #கடுவெளிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
08.05.2020, வெள்ளிக்கிழமை

#ஞானச்சுடரே ஆறுமுக அரங்கா
ஞானிகள் #துணைபட கலியுகத்தை
ஞானயுகமாக #மாற்ற வந்த
ஞானியே ஞான #தேசிகனே

தேசிகனே உன் #தவபலம் மெச்சி
தெரிவிப்பேன் #தவபிரசன்ன ஆசி
ஆசிபட #சார்வரி தகர் திங்கள்
அய்யைந்து திகதி #புகர் வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 25ம், 08.05.2020 #வெள்ளிக்கிழமை)

வாரமதில் கடுவெளிச்சித்தர் யானும்
வழங்குவேன் #உலகநலம் பெற
அறமாக #அன்னதான சக்தி
அகிலமதில் #பரவும்படி செய்து

செய்துமே கலியுக மக்களை
#சேவைக்கு அழைத்து வழிநடத்தி
#மெய்ஞானம் தந்தருள் புரியும்
#மேன்மைநிலை கண்ட ஞானி

ஞானியரின் #வழிகளை ஏற்று
நானிலத்தோர் #தொடர்ந்து வர
#தானம் வழி பொருளுதவி செய்து
தருமபலம் மக்கள் #பெருக்கிட

பெருக்கிட #பேருலகம் தானும்
பேராசான் #அரங்கன் விரும்புகின்ற
கருத்தான தரும #உலகம் ஆகி
கலியுகமே #ஞானயுகம் ஆகும்

ஆகவே #ஆறுமுகனார் சக்தியாக
#அவதாரம் புரிந்த அரங்கன்
#யுகமாற்ற சேவை தன்னில்
உலகோர் பங்களிப்பு செய்து

செய்துமே #தொடர்ந்து வந்து
செயல்பாடுகளில் கலந்து நன்கு
#அய்யமிலா ஞான உயர் #தீட்சை
அரங்கமகானிடம் #அடைதல் கண்டு

கண்டுமே சீடர்களாகி தொண்டு
கணக்கிலா வண்ணம் தொடர
உண்டான #சுத்த நெறியாம்
#உயிர்கொலை தவிர்க்கும் நெறியை

நெறியை #யாவரும் ஏற்று
நிலவுலகில் #தயவை பெருக்க
#வறுமை விலகி கலியுகம்
வளமும் #யோகமும் காணும்

காணவே அரங்கன் #தலைமை
கலியுகதார் ஏற்று வந்திட
#ஞானயுகம் மாற்றம் சடுதி
காணும் நாட்டிவந்த தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் கடுவெளிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

#ஞானஜோதிசுடரே ஆறுமுக அரங்கமகா தேசிகரே ஞானிகளின் துணையுடன் இந்த கலியுகத்தை ஞானயுகமாக #மாற்ற வந்த மகா ஞானியே #ஞானதேசிகரே அரங்கா உமது #தவ பலத்தை மெச்சி தவபிரசன்ன ஆசி நூல்தனையே சார்வரி வருடம் சித்திரை மாதம் 25ம் நாள் 08.05.2020 வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே கடுவெளிச்சித்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கடுவெளிச்சித்தர்.

உலகமெங்கும் #அறசக்தியாகிய அன்னதான சக்தியை உலகமெலாம் பரவிடச் செய்து கலியுகமக்களை தொண்டுகள் செய்திட அழைத்து அவர்களை வழிநடத்தி மெய்ஞானத்தினை அவர்களுக்கு அருளி குருவாய் நின்று அருள் புரியும் மேன்மை நிலை கண்ட ஞானி, ஆறுமுக அரங்க மகா தேசிகர் கூறுகின்ற தூயநெறிகளை உலகோர் ஏற்று கடைபிடித்து அரங்கரை பின்தொடர்ந்து வருவதுடன் அரங்கர் உலக நலம் கருதி ஆற்றுகின்ற தானதர்ம பணிகளுக்கு பொருள் உதவிகள் செய்து தர்மபலத்தினை பெருக்கிட இந்த பேருலகம் அரங்கன் அவதரித்ததின் நோக்கத்தின் வழி சென்று அரங்கர் விரும்புகின்ற தர்ம உலகமாக ஆகி கலியுகமே ஞானயுகமாக ஆகிடும்.

ஆதலினால் முருகப்பெருமானின் சக்தியாக #அவதாரம் புரிந்த அரங்கமகான் நடத்துகின்ற #யுகமாற்ற சேவைகளில் #உலகோர் பங்களிப்புக்கொண்டு அரங்கரை #பின்தொடர்ந்து வரவர அரங்கரின் தொண்டுகளில் கலந்து செயல்பட அரங்கரின் #திருக்கரங்களால் உயர் ஞான தீட்சை உபதேசங்களை பெற்று கடைப்பிடித்து அரங்கரின் சீடர்களாகி #தன்னலமற்ற தொண்டுகளை தளறாது செய்து வருவதுடன் உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு வருவதுடன்# உலகோரையும் இந்த தயவு நெறியை ஏற்கும்படி செய்து உலகமக்களெல்லாம் தயவுநெறியை கடைப்பிடித்து #உலகமெங்கும் தயவை பெருக்கி வர உலகின் தயவு #பெருகி உலகினில் உள்ள #வறுமை விலகி இந்த கலியுகம் சர்வ வளமும் சகல யோகமும் காண்கும்.

அரங்கமகானின் #தலைமையை உலகோர் #ஏற்றுக்கொள்ள #ஞானயுகமாற்றம் விரைந்து உண்டாகும் எனக் கூறுகிறார் மகான் கடுவெளிச்சித்தர்.
– சுபம் –
youtube video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *