07.05.2020 மகான் கடைப்பிள்ளைசித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் | ஜீவநாடி | ஓங்காரக்குடில் ஓலைச்சுவடி

முருகப்பெருமான் துணை
மகான் #கடைப்பிள்ளைசித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
07.05.2020, வியாழக்கிழமை

#அவதார யோகியே அரங்கா
#அண்ணலே ஞான தேசிகா
#புவனம் காத்திட மாதருமத்தை
#புண்ணியமாகச் செய்துவரும் அரசா

#அரசனே உன் தவபலம் மெச்சி
அருளுவேன் #தவபிரசன்ன ஆசி
தரணியில் சார்வரி தகரின் திங்கள்
தக்க அறுநான்கு திகதி #குருவாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 24ம் நாள், 07.05.2020 #வியாழக்கிழமை)

வாரமதில் கடைப்பிள்ளை #சித்தர் யானும்
வழங்குவேன் உலகோர் #நலம் பெற
#சோரம் போக்கி மக்களை மீட்கும்
#சுத்தநெறி கொண்ட அரங்கஞானி

#ஞானி நடத்தும் #முழுமதிகால பூசை
#நானிலத்தோர் கலந்து கொண்டு
#தானதருமம் வழி #பொருளுதவி
#தவராசனிடம் செய்து நன்கு

செய்துமே அரங்க #மகானிடம்
சிறப்புதரும் ஞான #தீட்சை ஏற்று
#மெய்ஞான சன்மார்க்க வழியில்
மக்களெல்லாம் #வணங்கி வருதல் காண

காணவே #மக்களிடை மாற்றம்
கண்டுரைக்க #சடுதி உண்டாகி
#ஞானவான்கள் ஆவர் என்பேன்
ஞானிகள் துணை பெருகவே

பெருகவே #கலிவாழ் மக்களுக்கு
#பேரிடர் வந்தாலும் பாதுகாப்பு
#முருகப்பெருமான் தயவால் கிட்டும்
முழுமைப்பட தருமவழி #பிசகாவருக

வருகவே #வையகம் எங்கிலும்
வளமும் #இயற்கை பலமுமாக
தருமபலத்தால் #மாற்றம் காண்கும்
#தவசி அரங்கன் உபதேசம்

#உபதேசம் ஞானமாக வருக
#உலகோர் ஞானிகள் ஆகும்
#அபயமென வேலவன் துணைபட
#அழியாமை இலகுவாய் கிட்டும்

கிட்டவே #கலியுகம் காத்திடும்
குடிலாம் #பிரணவக் குடிலை
தட்டாது உலகோர் #அனுகி
தரும்பலம் கூடும்படி தயவை

தயவை உலகமெங்கும் #பரவ
தரணியோர் சேவையாக ஆற்ற
தயவுமிக்க ஞான உலகமாக
தரணி கண்டு மாற்றம் காணும்
தவபிரசன்ன ஆசி முற்றே

– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் கடைப்பிள்ளை சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

உலகை #காக்க வந்த அவதார யோகியே அரங்கமகாதேசிகரே அண்ணலே ஞானதேசிகரே இவ்வுலகினை காத்திட #எல்லையிலாது தர்மங்களை செய்து உலகின் #புண்ணியபலத்தை பெருக்கி வருகின்ற ஞான அரசனே, ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது #தவபலத்தை மெச்சி தவபிரசன்ன ஆசி நூல்தனையே சார்வரி வருடம் சித்திரை மாதம் 24ம் நாள், 07.05.2020 வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே #கடைப்பிள்ளைச்சித்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கடைப்பிள்ளைச்சித்தர்.

உலகமக்களின் #குற்றங்களை போக்கி மக்களை மீட்டு #காக்கவல்ல தூயநெறி கொள்கையினை கொண்ட ஆறுமுக அரங்கமகா தேசிக ஞானியர் நடத்துகின்ற #பௌர்ணமி ஞான வழிபாடுகளிலே #உலகமக்கள் எல்லாம் கலந்துக்கொண்டு ஆங்கே நடக்கின்ற #தர்மங்களுக்கு பொருளுதவிகளை செய்வதுடன் #தொண்டுகளையும் செய்து அரங்கமகாதேசிகரிடத்து எல்லா சிறப்புகளையும் தந்தருளுகின்ற வல்லமைமிக்க #தீட்சை உபதேசங்களைப் பெற்று அரங்கர் கூறும் மெய்ஞான சன்மார்க்க வழியினில் வந்து முற்றுப்பெற்ற ஞானிகளை #ஜோதி வழிபாடுகளாக வணங்கி தொடர்ந்து வரவர மக்களிடத்து மனமாற்றம் விரைந்து உண்டாகி அவர்களெல்லாம் #நிலை உயர்ந்து ஞானவான்களாக ஆகிடுவார்கள்.

ஞானிகளின் துணையை மக்கள் #அதிகமாக பெறபெற, கலியுக மக்களுக்கு #பேரிடர்கள் வந்தாலும் முருகப்பெருமானின் தயவினால் #அருள்பாதுகாப்பு அவர்களுக்கு உண்டாகிடும். மக்களெல்லாம் தர்மத்தின் மீது #நம்பிக்கை வைத்து தர்மவழியில் பிசகாமல் நடந்து வர உலகமெங்கிலும் இயற்கையின் மகிழ்வால் வளம் #பெருகி நிற்கும் #இயற்கை பலம் மக்களுக்கு துணையாய் #நிற்கும் இந்தவித மாற்றங்கள் எல்லாம் மக்கள் செய்கின்ற தர்மத்தின் #பலத்தால் உண்டாகிடும்.

#மகாதவசி ஆறுமுக அரங்கரின் #உபதேசங்கள் எல்லாம் உலகோருக்கு #ஞானகருத்துகளாக வெளிவருகின்றதப்பா, உலகோர் அரங்கரின் உபதேசங்களை ஏற்று #கடைப்பிடித்திட அவர்களுக்கு முருகப்பெருமானின் #அருளாசிகள் கிடைத்து முருகப்பெருமானின் #துணையும் கிடைத்து ஞானிகளாகும் வாய்ப்பை பெற்று அழிவில்லாத நிலையை எளிதில் #அடைவார்கள். கலியுகத்தை காக்கின்ற ஞானபீடமாம் #துறையூர் ஓங்காரக்குடிலை உலகமக்களெல்லாம் தவறாமல் சென்று அரங்கரை #வணங்கி தர்மபலம் பெருக்கி, #தயவு உணர்வினை உலகமெங்கும் பரப்பி வரவர உலகமெங்கும் மக்களெல்லாம் தயவுடன் நடந்து உலக உயிர்களுக்கு #தன்னலமற்ற தொண்டுகளை செய்து வர இவ்வுலகம் தயவுமிக்க ஞானவுலகமாக ஆகிடும் எனக் கூறுகிறார் மகான் கடைப்பிள்ளை #சித்தர்.
– சுபம் –

YouTube: https://youtu.be/8D3dtz9aasA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *