07.04.2020 மகான் சந்திரபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் சந்திரபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
07.04.2020, செவ்வாய்கிழமை

#யோகசித்தே ஆறுமுக அரங்கா
உயர் ஞானமருளும் ஞானதேசிகா
#யுகமாற்றம் செய்ய வேண்டி
ஓங்கார குடில் படைத்த தேசிகனே

தேசிகனே உன்பெருமை கூறி
தெரிவிப்பேன் அருள் பிரசன்ன ஆசி
ஆசிபட விகாரி #சேல் திங்கள்
அய்யைந்து திகதி #குசனார்வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 25ம் நாள், 07.04.2020 செவ்வாய்கிழமை)

வாரமதில் சந்திர பகவானும்
வழங்குவேன் உலக நலம்பெற
#சோரம் போகா உலகை மீட்க
#சுப்பிரமண்யர் சக்தியாக வந்த

வந்தநல் அரங்க ஞானியரின்
#வள்ளல் நெறிதனை ஏற்று
இந்த #யுகத்தார் தொடர்ந்து வர
ஏழாம்படை வீடுகண்டு ஆசிதனை

ஆசிதனை ஞானியரிடம் #பெற்று
ஆறுமுகனார் #நாம செபம் போற்றி
#வாசி வென்ற ஞானியர்களையும்
#வணங்கி பூசை செய்துவர

வருவதுடன் #அன்னதானமதை
#வையகமெங்கிலும் செய்து கொண்டு
தரும பலம் #பெருக்கி வருக
தரணியே #பெருமாற்றம் காணும்

காணவே மனித குலம்தனை
#கண்ணியமுற வழி நடத்தவே
ஞானமாக உபதேசம் அருளி
#ஞானத்திருவடி நூலாகவும் வர

வருகவே #உலகம் எங்கிலும்
வணங்கி முருகப் பெருமானை
தருமவானாக #தலைவனாக ஏற்று
தரணியோர் #நித்யபூசை செய்துவர

வருகவே மக்களுக்கு #பக்குவம்
#வல்லமை குணம் தயைசிந்தை
முருகனே தலைவனெனும் #பேரறிவும்
முழுமை ஞானமும் கூடி சிறப்பர்

#சிறப்பறிவு கொண்ட மக்களும்
#சுத்தநெறி ஏற்ற மக்களும் 
மறுப்பின்றி #மரணம் வெல்லும்
#மகத்துவம் ஆயுள் கீர்த்தியும் பெறுவர்

#கீர்த்தி தரும் அரங்கனே குரு
#குவலயம் காக்கும் ஞான குரு
நேர்த்தியாய் வணங்கி வர
#நிலவுலகோர் பாதுகாப்பு பெறுவர்
அருள் பிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் சந்திர பகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

எல்லையிலாது யோகங்களை செய்து வெற்றி கண்டிட்ட யோக #சித்தனே ஆறுமுக அரங்கமகா தேசிகனே உலகமக்களுக்கு உயர்ஞானத்தை அருளி காக்கும் ஞான தேசிகனே இவ்வுலகினில் உலகப்பெருமாற்றம் செய்ய வேண்டியே ஏழாம்படைவீடாய் #துறையூர் ஓங்காரக்குடிலை படைத்திட்ட தேசிகனே ஆறுமுக அரங்கனே அற்புதமான உமது பெருமைகளை உலகமெலாம் கூறியே உலக நலம் கருதி விகாரி வருடம் #பங்குனி மாதம் 25ம் நாள், 07.04.2020 செவ்வாய்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசிநூல் தனையே #சந்திரபகவான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சந்திர பகவான்.

#வீண்போகாது குற்றமற்ற உலகமாக இந்த உலகத்தை மீட்கவே ஆறுமுகப்பெருமானின் அற்புத சக்தியாக #அவதாரமாக உலகில் அவதரித்திட்ட அரங்கஞானியின் அற்புதமான #வள்ளல் நெறிதனை #ஏற்றுக்கொண்டு உலக மக்கள் கடைபிடித்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும். ஏழாம் படைவீடாம் துறையூர் ஓங்காரக்குடிலினை பயபக்தியுடன் #அனுகி ஆங்கே ஞானத்தலைவனாக வீற்றிருந்து அருள் #பாலிக்கும் ஆறுமுக அரங்கமகா தேசிகரிடத்து அருளாசிகளை பெற்று அரங்கரின் நாமங்களை பயபக்தியுடன் #தினம் தினம் மறவாமல் நாமஜெபமாக ஜெபிப்பதுடன் முற்றுபெற்ற வாசியைவென்ற முதுபெரும் ஞானிகளை தினம்தினம் மறவாமல் வணங்கி பூஜைகள் செய்து வருவதுடன் அவர் அவரின் #புண்ணிய பலத்தை பெருக்கும் விதமாக தர்மங்களை தாராளமாய் செய்து தர்மபலம் பெருக்கி வரவர உலகின் தர்மபலம் பெருகி இந்த உலகமே பெரும் மாற்றத்தைக் காணும்.

இந்த உலகம் பெரும் #மாற்றம்தனை காணவேண்டுமாயின் மனிதகுலத்தினை நன்னெறியில் கண்ணியமுற வழிநடத்தி செல்லும் ஞான குரு அருளிய அருளுபதேசமாம் ஞானமாக வெளிவருகின்ற ஞானத்திருவடி நூலை உலகோர் ஏற்று #படித்து அதன்படி நடந்துவருவதுடன் முதுபெரும் ஞானத்தலைவன் முருகப்பெருமானை தர்ம தலைவனாக ஏற்றுக்கொண்டு #வழிபடு தெய்வமாக ஏற்றுக்கொண்டு தினம்தினம் மறவாமல் பூஜைகளை செய்து வர மக்களுக்கு #பரிபக்குவம் உண்டாகி வல்லமை பெருகி #நற்குணங்கள் மிகுந்து தயைசிந்தை அதிகமாகி முருகப்பெருமானே அனைத்திற்கும் தலைவன் எனும் பேர் #உண்மையும் விளங்கி பேரறிவுப் பெற்று முருகனே #ஞானம் ஞானமே முருகன் என்கின்ற ஞானத்தின் #உட்பொருளையும் அறிந்து முழுமைஞானம் பெற்று சிறப்படைவர்.

சிறப்பறிவு கொண்ட மக்களும், உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்தசைவ உணவை மேற்கொண்ட மக்களும் உறுதியாக மரணத்தை வெல்லும் மகத்துவத்தினை பெற்று நீடிய ஆயுளையும் பெற்று சிறப்படைவார்கள்.

சகவிதமான வெற்றிகளையும் தந்தருளும் ஆறுமுக அரங்கமகா தேசிகரே இவ்வுலகின் ஒப்பற்ற சற்குரு ஆவார். இவ்வுலகை காக்கும் ஞானகுருவும் அவரே ஆவார். சற்குரு அரங்கரை பயபக்தியுடன் உண்மையுடன் வணங்கி வர இவ்வுலகோர் முழுமையான பாதுகாப்பை பெறுவர். எனக் கூறுகிறார் மகான் சந்திர பகவான்.
– சுபம்

1206-mahan-chandhira-bagavaan-aruliya-arul-prasanna-asi-nool-07.04.2020


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *