06.09.2021 மகான் ஜம்புமகரிஷி அருளிய துல்லிய ஆசி நூல்

 முருகப்பெருமான் துணை

மகான் ஜம்புமகரிஷி அருளிய துல்லிய ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 06.09.2021, திங்கட்கிழமை 1. தவபலம் கொண்டு உலகினில் தனித்துவம் படைத்து அருளும் அவதார ஞானி அரங்கமகான் உன் அற்புதம் கூறி துல்லிய ஆசி 2.ஆசிதனை பிலவ யாளி திங்கள் அய்நான்கோர் திகதி சோமவாரம் (பிலவ வருடம் ஆவணி மாதம் 21ம் நாள், 06.09.2021, திங்கட்கிழமை) ஆசிதனை ஜம்பு மகரிஷி யானும் அருளுவேன் உலகோர் நலம் பெற 3. நலம் காக்கும் ஞான ஆயுதமாக ஞானிகள் பூசைதனை துவக்கி பலமாக அன்னதானம் எனும் பரோபகார சக்திதனை தூண்டி 4. தூண்டியே மக்களை காக்க தூய சன்மார்க்க நெறியூட்டி தொண்டுவழி அழைத்துத் தேற்றி தொண்டர்களாக்கி உயர்வை தரும் 5.தருகின்ற அரங்கன் மார்க்கமே தணிகாசலன் ஏற்ற மார்க்கமாக இருக்கவே கலியுக மக்கள் இணைந்து ஓங்காரக்குடில் நோக்கி 6. நோக்கியே சேவையில் கலந்து நிலமதனில் அரங்கன் வழியில் ஆக்கமுடன் உலகளாவிய வண்ணம்

ஆன்மீக சேவை ஆற்றியே
7. ஆற்றியே தொடர்ந்து வருக
அனைவருக்கும் ஞான பலம்
பற்றியே குருவருள் துணைபட
பழுதில்லா யோக ஞான சித்தி

8.சித்திகண்டு கலியுக மக்கள் சித்தனை போலான வாழ்வு உத்தமமாய் கண்டு சிறப்பர் உண்மைநிலை மேலும் தேறியே 9.தேறியே உலகையே மாற்றும் தேசிகன் சேவை வழியில் ஆறுதல்பட தொடர்ந்து வந்து அனைவரும் ஆறுமுகன் ஆசிகிட்டி 10. கிட்டியே ஞானிகள் ஆவர் குவலயத்தில் ஞானயுகம் எனும் தட்டதாது மாற்றம் காண உண்டான தனித்துவம் படைத்து சிறப்பர்

11.சிறப்பான இந்தவித மாற்றம்
செகமெல்லாம் பெருகி வர
மறுப்பிலா ஞான ஆட்சியை
மண்ணுலகம் கண்டு சிறக்கும்
துல்லிய ஆசி முற்றே

-சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *