06.04.2020 மகான் சூரியபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி மகான் சூரியபகவான் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல் #சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 06.04.2020, திங்கட்கிழமை கருமவினை வென்று காக்கவே கந்தவேலன் சக்தியாக வந்தநல் ஆறுமுக அரங்க ஞானியே அகிலமதில் உன் பெருமை கூறி கூறியே ஆழ்வார் பெருமக்களை #தொடர்ந்து #கோள்களின் நவநாயகர்களும் புகலுவோம் #அருள்பிரசன்ன ஆசி தன்னை அறிவிக்க விகாரி சேல் திங்கள் திங்களில் அறுநான்கு திகதி #சோமவாரம் (விகாரி வருடம் #பங்குனி மாதம் 24ம் நாள், 06.04.2020 திங்கட்கிழமை) தேசிகனுக்கு சூரியபகவானும் அருள்வேன் ஓங்கார ஓசை ஒலிக்கும் #தேசமெல்லாம் உலகப் பேரிடர் அகன்று மேவி மேவியே #வெப்ப சக்தி மூலம் முழுமைபட பாதுகாப்பு பெறும் அவனியில் #தருமபலம் உள்ள அனைத்து தேசங்களும் இடரின்றி #இடரின்றி பேரழிவின்றி #காப்பு பெறும் #இறைசக்தியாக உள்ள #அரங்கன் #இடர்வெல்லும் தரும நெறியை ஏற்கும் தேசமே பாதுகாப்பு காண்கும் காண்கவே #தரும்பலம் மெச்சி #கலியுகம் தருமயுகம் ஆகவே நன்மைகருதி #நவநாயகர்களும் ஞானதேசிகனுடன் சக்தியாய் இருக்க இருக்கவே #பிரணவக்குடில் நாடி இணைந்து உலக மக்கள் வர வருத்தமான எல்லா துன்பங்களும் வருமுலகில் அகன்று நலம் காணும் காணவே மக்களை நோக்கி காப்பான தயவுதனை #விதைக்கும் ஞானதேசிகன் வழிகள் தானும் ஞாலமதில் எங்கும் பரவிவர வருகவே மக்களிடை தீதான #வக்ர #கொடூர சிந்தைகள் விலகி தரும சிந்தை #வளர்ச்சி கண்டு தரணியோர் உயர்நிலை பெற்று பெற்றுமே ஆறுமுகப் பெருமானை பேருலகோர் வணங்கும் #ஞானம்கூடி ஆற்றல்பட ஞானவான்கள் ஆவர் அகிலமே #ஞானயுகம் ஆகும் ஆகவே அரங்கமகானை கண்டு #அகிலம் வணங்கவே மாற்றம் மிகைபட சடுதி காணக் கூடும் மொழிந்திட்ட அருள்பிரசன்ன ஆசி முற்றே – சுபம் – முருகப்பெருமான் துணை மகான் சூர்ய பகவான் அருளிய அருள்பிரசன்ன ஆசி நூலின் சாரம் : உலக மக்கள் செய்திட்ட கர்மவினைகளிலிருந்து அவர்களை மீட்டு அவர்களின் #வினைகளை வென்று காக்கவே முருகப்பெருமானின் #மகாசக்தியாக அவதாரமாக வந்த நல் ஞானியே ஆறுமுக அரங்கமகா தேசிகரே அற்புதமான #உமது பெருமைகளை உலகறியக்கூறியே உலக #நலம் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 24ம் நாள், 06.04.2020 #திங்கட்கிழமை ஆகிய இன்றைய தினமதிலே இதுவரை ஆசி கூறி வந்த #ஆழ்வார்களைத் தொடர்ந்து #நவகிரக_நாயகர்களாகிய நாங்களும் ஆசி #நூல் உரைக்கின்றோம். அதன் வகையிலே நவகிரக நாயகர்களில் ஒருவரான #சூர்ய_பகவான் ஆகிய யானும் அருள் #பிரசன்ன ஆசி நூல் தனையே உரைக்கின்றேன் என்கிறார் மகான் சூர்ய பகவான். #ஓங்கார_ஓசை ஆகிய முருகப்பெருமானின் #திருநாமங்கள் ஒலிக்கக்கூடிய தேசங்களெல்லாம், இயற்கை பேரிடர்கள் அத்தேசங்களை விட்டு நீங்கி பாதுகாப்புத் தரும் அந்த #தேசங்களில் #வெப்பநிலை அதிகமாகி பாதுகாப்புத் தரும். இவ்வுலகினிலே தர்மபலம் மிகுந்த எல்லா தேசங்களும் இந்த வித பேரிடர்களின் அழிவுகளில் இருந்து மீண்டு அருள் பாதுகாப்பை பெறும். உலகினில் மக்கள் செய்த தர்மத்தின் பலம் #பெருகி கலியுகம் தர்மயுகமாகவும் ஆகும். ஆதலினால் இத்தகைய அளவில்லாது தர்மம் செய்யும் தர்மத்தின் தலைவன் முருகப்பெருமானின் #அவதாரம் ஆறுமுக அரங்கமகா தேசிகருடன் நவகிரக நாயகர்களாகிய நாங்களும் சக்தியாய் இணைந்திருக்கிறோம். ஆதலினால் #ஏழாம்படைவீடாம் அரங்கமகானின் ஞானபீடமாம் #துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வருகின்ற மக்கள் அனைவருக்கும் அரங்கருடன் இணைந்து தர்மங்கள் செய்கின்ற மக்களுக்கும் உண்டான எல்லா விதமான துன்பங்களும் வரும் காலங்களில் அகன்று ஓடும். உலக மக்களை #தாயினும் மிக்க தயவுடன் கருணைக் கொண்டு மக்கள் மனதில் #தயவு உணர்வினை #விதைத்து அவர்களை #மேன்மை படுத்துகின்ற அரங்கமகா தேசிகரின் அற்புதமான தூய ஞான நெறி #கொள்கைகள் யாவும் உலகமெங்கும் #பரவிவர பரவிவர உலகினில் மக்களிடையே உண்மை #ஞானம் பெருகி தர்மம் பெருகி மக்களிடையே உண்டான தீமையை விளைவிக்கக்கூடிய #வக்ரமான கொடூர எண்ணங்களெல்லாம் அவர்களை விட்டு மறைந்து அதை சார்ந்த #சிந்தைகள் கூட உண்டாகாமல் பாதுகாப்பைப் பெற்று #தர்மசிந்தை அதிகமாகி உலகமக்களெல்லாம் #உயர்வான நிலையை அடைந்து சிறப்பார்கள். அவர்கள் ஞானத்தலைவன் முருகப்பெருமானை வழிபடும் #தெய்வமாக ஏற்று தினம்தினம் தவறாமல் முருகப்பெருமானின் #திருநாமங்களை மனமுருகிச் சொல்லி பூஜைகள் செய்து ஆற்றல் பெருகி ஞானவான்களாக ஆகிடுவர். இத்தகைய ஞானவான்களின் #பெருக்கத்தினாலே உலகினில் ஞானம் பெருகி இந்த யுகம் #ஞானயுகமாக விரைந்து உண்டாகிடும். ஆகவே யுகமாற்ற ஞானி ஆறுமுக அரங்கமகா #தேசிகரை உலகோர் #வணங்கி வர இவ்வுலகினில் அற்புதமான #மாற்றங்கள் விரைந்து உண்டாகி ஞானயுகமாக இவ்வுலகம் மாறிடும். என கூறுகிறார் மகான் சூரிய பகவான். – சுபம்
YouTube: https://youtu.be/pJa2Jazgd78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *