05.05.2020 மகான் ஒளவையார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #ஒளவையார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
05.05.2020, #செவ்வாய்கிழமை

#சற்குருநாதனே அரங்கராசா
#சடாட்சர சக்திமிகு ஞானியாக
#அற்புதம் நிகழ்த்த வந்த நல்
#அவதார தவசியே ஞான தேசிகா

#தேசிகா உன் #தவபலம் மெச்சி
தெரிவிப்பேன் சார்வரி #தகர் திங்கள்
ஆசிபட இருபானீர்திகதி #குசன் வாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 22ம் நாள், 05.05.2020 செவ்வாய்கிழமை)
அருளுவேன் தவபிரசன்ன ஆசி

ஆசியை ஔவையார் யானும்
அறிவிப்பேன் உலகோர் #நலம்பெற
#வாசி வென்ற ஞானிகள் #கூட்டம்
வலம்வர #பிரணவக் குடிலை

குடிலை பாதுகாப்புத் #தேடி
குவலயத்தார் #தஞ்சம் அடைய
#நாடிவரும் மக்கள் வாழ்வில்
நன்மையும் பாதுகாப்பும் #கூடும்

கூடவே ஞானத் #தலைவன்
#குருபரன் ஆசிபெற்ற மக்கள்
#இடரின்றி பெருவாழ்வு காண்பர்
#ஏமாற்றம் துன்பம் ஏதுமில்லா

#ஏதுமில்லா யோகபலன் காண்பர்
இனிதே #அரங்கன் காட்டுகின்ற
பூதலத்தில் #தருமவழிகள் தன்னை
பூவுலகோர் #வணங்கி வருதலுற

வருவதுடன் #பொருளுதவி செய்து
வருமுலகில் தருமத்தை #வளர்க்க
தருமபலம் உலகில் #பெருகவே
தரணியே #பாதுகாப்பு பெறும் என்பேன்

என்கவே #ஞானியர் காட்டும்
இயல்பான #சுத்த நெறி முறையை
#நன்மை கருதி உலக மக்கள்
ஞானமாக #ஏற்றுத் தொடர

தொடர்ந்து வர #மனித சக்தி
#தெய்வ சக்திமிகு ஆற்றலாகி
இடரில்லா #அழியாமை பெறக் கூடும்
எங்கும் #சரவணசோதி வழிபாடு

சிறப்புதரும் #குருவாக வந்த
#சிவராஜ யோகி அரங்கன்
#அறமுடன் ஞானம் வளர #மலர
அகிலமே #ஞானலோகம் ஆகும்
#தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் ஔவையார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

உலகிற்கு உண்மை ஞானத்தை அருளவே #வந்துதித்த சற்குருநாதனே அரங்கராசனே முருகப்பெருமானின் சக்தியை #அளவிலாது பெற்று மகா ஞானியாக #வந்துதித்து உலகத்தில் #அற்புதங்கள் நிகழ்த்தி உலகப்பெருமாற்றத்தை நடத்திட முருகப்பெருமானின் அவதாரமாக #வந்துதித்த தவசியே ஞானதேசிகனே உமது அற்புதமான தவபலத்தை #மெச்சி சார்வரி வருடம் சித்திரை மாதம் 26ம் நாள், 05.05.2020 செவ்வாய்கிழமையான இன்றைய தினமதனிலே #தவபிரசன்ன ஆசி நூல்தனையே #ஒளவையார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் #மகான் ஒளவையார்.

வாசியை வென்றிட்ட ஞானிகளின் கூட்டம் #ஏழாம்படைவீடு துறையூர் ஓங்காரக்குடிலை #சூழ்ந்து நிற்கின்றார்கள் ஆதலினாலே உலகினில் எவரேனும் பாதுகாப்பு #தேடி குடிலை #தஞ்சம் அடைந்து விட்டால் அரங்கனை நாடி வந்த அந்த மக்களின் வாழ்விலே உள்ள #துன்பமெல்லாம் மாறி நன்மையும் பாதுகாப்பும் பெருகிடும்.

ஞானத்தலைவன் முருகப்பெருமான் #ஆசி பெற்ற மக்கள் எந்த வித #தடைகளுமின்றி பெருமைமிக்க வாழ்வை வாழ்ந்து #சிறப்பார்கள் ஏமாற்றமும், துன்பமும் நீங்கி, #துன்பமற்ற பெருவாழ்வினை வாழ்வார்கள் பலவிதமான #யோகங்களை பெறுவார்கள். ஆறுமுக அரங்கர் காட்டுகின்ற தர்மத்தின் #வழிகளை இவ்வுலகோர் #ஏற்று வணங்கி தர்மங்களை #செய்து வர அரங்கரின் தர்மத்திற்கு #பொருளுதவிகள் செய்து வர உலகினில் #தர்மபலம் பெருகி இவ்வுலகமே தர்மத்தினால் பாதுகாப்பை பெறும்.

ஞானியர்கள் காட்டுகின்ற #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த சைவ உணவினை மேற்கொள்கின்றதான #அரங்கரின் தூய நெறியை உலகமக்களெல்லாம் ஞானத்தின் #மார்க்கமாய் ஏற்று அரங்கரை பின்தொடர்ந்து வர மனிதர்களின் சக்தியானது #தெய்வத்தின் சக்தியாக மாறி அதுவே அவர்களை அழிவிலாமை நிலையை அடைந்திட வழிவகை செய்யும்.

உலகமெங்கும் உத்தமமான #சரவணஜோதி வழிபாட்டினை உலக #மக்கள் செய்து வர உலகமெங்கும் #வழிபாடுகள் பெருகி அருள் #பலம் பெருகி இந்த உலகம் அற்புதமான #வளர்ச்சியை பெறும். அழிவிலாமை என்கிற மகாசக்தியை உலகோர் பெற்று சிறப்படைவார்கள்.

சர்வசிறப்புகளையும் #சற்குருவாக தோன்றி மக்களுக்கு அருளுகின்ற #சிவராஜயோகி அரங்க மகான் செய்கின்ற #தர்மங்கள் பெருகி அரங்கன் கூறும் தர்மமும் #ஞானமும் உலகினில் அதிகமாக #அதிகமாக இந்த உலகமே ஞான உலகமாக மாறிடும் எனக் கூறுகிறார் மகான் ஒளவையார்.
– சுபம் –

YouTube: https://youtu.be/N7yOoEtciwI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *