05.04.2020 மகான் ஆண்டாள் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் ஆண்டாள் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
05.04.2020, ஞாயிற்றுக்கிழமை

ஞான #சூட்சும குருவாக வந்த
ஞானியே ஆறுமுக அரங்கனே
ஞானயுகம் #படைக்க வந்த
ஞானியே தரும #சக்தியே தேசிகா

தேசிகனே உன் #பெருமை கூறி
தெரிவிப்பேன் அருள்பிரசன்ன #ஆசி
ஆசிபட விகாரி சேலின் திங்கள்
அறிவிக்க மூவேழீர் திகதி #கதிர்வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 23ம் நாள், 05.04.2020 ஞாயிற்றுக்கிழமை)

வாரமதில் #ஆண்டாள் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
பாரதமெங்கும் முருகப் பெருமானின்
பாதுகாப்பான #வழிபாடு பெருகவே

பெருகவே பேரிடர்கள் #விலகும்
பேராசானாக தரும சக்தியாக
ஆறுமுகனார் சூட்சுமமாக வந்த
அரங்கமகான் #மலரடி பணிந்து

பணிந்துமே #வணங்கி ஞானவழிவர
பரிந்துமே அரங்கன் வழங்கும்
கனிவேலவன் #அருளமுது உண்டு
கணக்காய் சைவ நெறி தொடர

தொடரவே #இந்தியா முழுவதிலும்
#திருவருள் பலம் கூடி இனிதே
பேரிடர் பரவா #தடுப்பு கண்டு
பெருமைபட பாதுகாப்பு மிகுதியாகும்

ஆகவே ஞானவான்களை உருவாக்கி
#அதிசயம் படைக்க வந்தநல்
மகான் #அரங்கன் சேவை வளர
மக்களுக்கு #மனபக்குவம் பெருகி

பெருகியே உலகோரிடை இனிதே
பெருந்தன்மையான #தயவு மிகுந்து
முருகப்பெருமான் அருள் பெறும்
முழுமையான தருமவான்கள் ஆகி

ஆகியே கலியுக மக்கள் தானும்
அரங்கன் #தேற்றும் படியான
அகிலத்தில் ஞானவான்களாவர்
#அழியாமை எனும் நிலை பெற்றுயர்வர்

உயர்வான #வழிகாட்டி மீட்கவும்
#உண்மைபட ஆன்மீக நெறிவழி
தயவு கூட்டி உலகோர் வர
தவசி அரங்கன் ஆசி துணைபெற

துணை பெற மரணமிடரில்லா
தேசத்தில் பேரிடர்வழி அல்லலிலா
துணை கொண்ட மக்களெல்லாம்
தேசிகன் அருளால் #காப்புபெறுவர்
அருள்பிரசன்ன ஆசி முற்றே

– சுபம் –
முருகப்பெருமான் துணை
மகான் ஆண்டாள் அம்மையார் அருளிய அருள்பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

ஞானசூட்சும குருவாக வந்த #மகாஞானியே ஆறுமுக அரங்கனே துன்பமிக்க கலியுகத்தை #மாற்றி மக்களை காத்து ஞானயுகம் படைக்க முருகப்பெருமானின் அவதாரமாக வந்த ஞானியே அளவிலா தர்மங்களை செய்திட்ட தர்மசக்தியின் #தலைவனே ஞானதேசிகனே ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது பெருமைகளை உலகறிய கூறியே #உலகநலம் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 23ம் நாள், 05.04.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள்பிரசன்ன ஆசி நூல்தனையே ஆண்டாள் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் ஆண்டாள் அம்மையார்.

ஞானத்தலைவன் முருகப்பெருமானின் #ஜோதி வழிபாடுதனை உலகினில் பெருக பெருக உலகைப் பற்றியுள்ள பேரிடர்கள் தாமே விலகும். உலகப்பேராசானாக #தர்மசக்தி வடிவமாக முருகப்பெருமானின் சூட்சும சக்தியாக வந்துதித்த அரங்கமகானின் திருமலரடி பணிந்து பக்தி செலுத்தி வணங்கி அரங்கரிடத்து ஞான உபதேசம் ஏற்று அரங்கர் கூறும் ஞான வழிகளிலே #தளராது தொடர்ந்து வரவேண்டும். அரங்கர் ஞானிகளை வணங்கி வழங்குகின்ற முருகப்பெருமானின் அருள்மிக்க அருளமுதாம் #குடில் உணவினை உண்டு வரவேண்டும். #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த #சைவ உணவை மேற்கொண்டு சைவநெறியில் தொடர்ந்து வரவேண்டும். இவ்விதமே இந்திய தேசத்தினில் மக்களெல்லாம் ஞானவழியில் வர நாடெங்கும் #திருவருள் பலம் பெருகி #நாட்டினின் இயற்கை பேரிடர்கள் வராமல் பாதுகாப்பதோடு வந்துள்ள பேரிடர் துன்பம் #மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு அருள் பலத்தால் பெருமைமிக்க பாதுகாப்பை இந்திய தேசம் பெறும்.

ஆதலினால் இவ்வுலகினில் ஞானவான்களை #உருவாக்கி அவர்கள் மூலம் உலகபெருமாற்றத்தை நடத்தி ஞானயுகம் படைக்க வந்த நல் #அவதாரம் ஆறுமுக பெருமானின் ஆற்றல்மிக்க மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #தன்னலமற்ற பொதுத் தொண்டுகளும் தர்மமும் வளரவளர நாட்டின் மக்களுக்கு #மனபக்குவம் பெருகி பெருந்தன்மையான குணங்கள் உண்டாகி மக்களிடையே தயவு உணர்ச்சி அதிகமாகி மக்களெல்லாம் முருகப்பெருமானின் அருளை பெறுகின்ற #தகுதி உடைய முழுமையான தர்மவான்களாகி #சிறப்பர். மக்கள் #தர்மங்கள் செய்ய செய்ய அரங்கன் விரும்புகின்ற #தகுதியுடைய ஞானவான்களாக ஆகிடுவார்கள் அரங்கர் #ஆசியாலும் முருகப்பெருமான் தயவாலும் அவரெல்லாம் ஞானவான்களாக அழியாமை என்னும் நிலையை அடையும் தகுதியையும் பெறுவர்.

#உண்மையோடு உண்மை ஆன்மீகத்தை ஏற்று அதன் வழி நடந்து அரங்கரின் ஆசிபெற்று அரங்கரின் துணையையும் பெற்று அரங்கரை பின்தொடர்ந்து வர #அவரெல்லாம் மரணபயமில்லாத தேசத்திலே பேரிடர்கள் மூலமாக துன்பங்கள் வராத தேசத்திலே வாழ்ந்து அரங்கன் துணையுடன் அரங்கன் அருளைப்பெற்று அருள்பாதுகாப்பை பெறுவார்கள் என கூறுகிறார் மகான் ஆண்டாள் #அம்மையார்.
– சுபம் –
Youtube:
https://youtu.be/fDxU3I3lWeY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *