05.04.2020 ஞாயிறு முதல் 12.04.2020 ஞாயிறு வரை – எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த #மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

#ஆன்மீகத்தில் அரசியலையும், #அரசியலில் ஆன்மீகத்தையும் #கரை
கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த #மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

விகாரி வருடம் பங்குனி மாதம் 23ம் திகதி முதல் பங்குனி மாதம் 30ம் திகதி வரை (05.04.2020 ஞாயிறு முதல் 12.04.2020 ஞாயிறு வரை)
சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன், M.A.,B.Ed.

#மானிடப்பதரே கேளும் #கேளும்
மாபெரும் #அழிவை கண்டும் கூட
ஏனடா #மனமாற்றம் காணவில்லை
எப்போது #உயிர்கொலை விட்டு வருவாய்

வருவாய் #வேலவன் ஞானவழிக்கு
வணங்கிவா காப்புபெறுவாயென்று
பெருமைமிகு #பாரதம் தமிழகத்தில்
புகலுவேன் விகாரி சேல் திங்கள்

திங்களிலே மூவேழீர்திகதிமேல் முப்பான் திகதிக்குள்
தேசநிகழ்வாக #எதிர்கால பலன்குறித்த
இங்கனமே ஆசிதனை #அகத்தியன் யானும்
இயம்பிடுவேன் ஆறுமுகப் பெருமானை வேண்டி

வேண்டாத #உலகப் பேரிடராக
வினைவடிவில் மக்கள் #உயிர்பலி
கண்டுவர #கலிவேகம் மிகுந்து
கணக்கிலா #அழிவு மிகுமென்பேன்

என்கவே உயிர்கொலை #நீக்காத
ஏற்று #சைவநெறி வராத
மண்ணுலக #தேசங்கள் எல்லாம்
மரணங்கள் #மிகுந்து கலக்கம் பெறும்

#கலக்கம் தரும் கருமவினை கிருமியாக
#காசாயம் தூய நெறி கொண்ட
#பழக்கவழக்கம் தருமவழி கண்ட
#பரோபகாரமிக்க பூமியே காக்கப்படும்

காக்கவே #நடப்பில் இந்தியா தமிழகம்
கவலையுற #தாக்குதல் கண்டாலும்
ஆக்கமுடன் #இறைவழி உள்ளவர்கள்
ஆண்டவனை #நம்புபவர்கள் சைவநெறி யாளர்கள்

நெறியுடன் வாழ்பவர்கள் #நீதிமான்கள்
நிலவுலகில் #ஊழல் லஞ்சம் வழிசெல்லாதவர்கள்
கிருமி வழி மரணமண்டா மீள்வர்
#காவலர்கள் #செவிலியர்கள் #மருத்துவர்கள் ஆக

ஆகவே #ஆளுமை உண்மை சக்திகளாக
ஆன்மீக பூமியில் ஞானிகள் #இறங்கிகாக்க
யுகமே இடர்பல கண்டாலும்
உண்மை பூமி பாரதம் #தமிழகம் பாதுகாப்பு பெறும்

காப்புக்கென #சேவை ஆற்றிவர
கலிவாழ்மக்களே கண்டு உணர்ந்துதேறி
ஒப்பு கொண்டு #தனிமையை கடைபிடிக்க
உயர்வான #தயை சிந்தைக்கு வர

வருவதுடன் #அரங்கஞானி காட்டும்
வல்லமையான #சோதிவழிபாடு இல்லில்
முருகா என போற்றி சைவநெறி தொடர
முழுமைபட பாதுகாப்பு பெருகி உலகே மீளும்
வார ஆசி முற்றே
– சுபம் –
முருகப்பெருமான் துணை
மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :

விகாரி வருடம் பங்குனிமாதம் 23ம் நாள் 05.04.2020 ஞாயிற்றுகிழமை முதல் பங்குனி 30ம் நாள் 12.04.2020 ஞாயிற்றுகிழமை முடிய உள்ள ஒருவார கால நிகழ்வுகள்.

மானிடர்களாய் பிறந்தும் #பகுத்தறிவு உடையவராய் இருந்தும் அறியாமையில் #மூழ்கி #பதர்களாக போய்விட்ட மானிடர்களே கேளுங்கள் இந்த உலகினில் இயற்கையின் கோபத்தால் மாபெரும் அழிவினை கண்டு அஞ்சியபோதும் #பாவம் நீங்கள் இன்னும் மனமாற்றம் அடையாமல் உள்ளீர்கள் இன்னும் ஏன் மனமாற்றம் அடையாமல் தவிக்கிறீர்கள் நீங்கள் எப்போது உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவினை மேற்கொள்ள போகிரீர்கள், தூய ஞான வழிபாடாம் ஜோதி வழிபாடாகிய முருகப்பெருமானின் ஞான வழிக்கு வருவீர்கள் முருகப்பெருமானை #உளமாற வணங்கி வாருங்கள் அருள் பாதுகாப்பினை பெறுவீர்கள் என்றே பெருமைமிக்க பாரத தேசத்திலும் தமிழகத்திலும் கூறி நிற்பேன் விகாரி வருடம் பங்குனி மாதம் 23ம் நாள் 05.04.2020 ஞாயிற்று கிழமை முதல் பங்குனி மாதம் 30ம் நாள் 12.04.2020 ஞாயிற்றுகிழமை முடிய உள்ள காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளாக வார ஆசி நூலாக அகத்தியர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய #மகரிஷி.

இனிவரும் காலங்களில் மக்கள் செய்திட்ட உயிர்பலிகளால் உண்டான வினைகளினால் மக்களுக்கு #உயிர்பலி கண்டு கலியுகத்தின் வேகமும் மிகுந்து உலகமெங்கும் கணக்கிலாத வகையில் அழிவுகள் மிக அதிகமாகிடும்.

ஆதலினாலே இனி உலகினில் உயிர்பலி உயிர்கொலை நீக்காத #தேகங்களும் சைவநெறிகளை ஏற்று #தயவுநெறிக் கொள்கைக்கு வராத #தேசங்களும் இனிவரும் காலங்களில் #மரணம் மிகுந்து கலக்கமடையும். கிருமிகள் மூலமாக உலகினில் உயிர்பலிகள் அதிகமாகும்.

#ஞானியர் வழிபாடுகளைச் செய்து தூயநெறியில் நடந்து தருமத்தின் வழியில் நடக்கும் ஜீவ தயவுடைய தேசமே இனி காக்கப்படும் அதன்வகையில் #நடப்பு காலத்தில் இந்திய தேசமும் தமிழகமும் பலவிதமாய் கிருமிகளால் தாக்குதல் #கண்டாலும் ஆண்டவனை நம்பும் இறைநம்பிக்கை உடைய #பக்தர்கள் சைவ நெறி கடைபிடிக்கும் சைவ #நெறியாளர்கள், #நெறிபிறழாது வாழ்பவர்கள், நீதிமான்கள் லஞ்சம் வாங்காது தூய்மையுடன் வாழ்பவர்கள் இவர்கள் அனைவரும் கிருமிகளால் தாக்கப்பட்டு மரணம் வராத வண்ணம் #அருள்_பாதுகாப்பை பெறுவார்கள்.

உலகினில் கிருமிகளால் தாக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் மீட்கவும் பிறருக்கு வாராமல் தடுக்கவும் காவலர்களாக, செவிலியர்களாக, மருத்துவர்களாக, மக்கள் மீது தயவுடைய ஆட்சியாளர்களாக முதுபெரும் #ஞானிகளே அவர்களை சார்ந்து இறங்கி இவ்வுலகை துன்பத்தின் பிடியுள் இருந்து மீட்டு காத்து வருகின்றார்கள் ஆதலினாலே இந்த உலகமே எல்லையில்லாத துன்பத்தை அடைந்தாலும் உண்மை ஞான பூமியான #பாரததேசமும் தமிழகமும் ஞானிகளின் அருளால் பாதுகாப்பை பெறும்.

உலகமக்களை #காத்திடவே ஞானிகளே பல வகையான மனிதர்களை #சார்ந்து இந்த உலகினை காத்து சேவையாற்றி வருகின்றார்கள், இதை கலியுகத்தினில் வாழும் மக்களே கண்டு உணர்ந்து தேறி. #ஒப்புக்கொண்டு தனிமையை நீங்கள் கடை பிடியுங்கள் உயர்வுமிக்க தயவு சிந்தனையை பெற்று காத்திட அவரவரும் ஆறுமுக அரங்கமகா தேசிகனார் #காட்டுகின்ற வல்லமை மிக்க ஜோதி வழிபாடுகளை #பயபக்தியுடன் செய்து வருவதுடன் முருகா #முருகா முருகா என முருகப்பெருமானை #போற்றி வருவதுடன் சுத்தசைவ நெறியினை #கடைபிடித்து வருவதுடன் ஞானிகளை பின்தொடர அவர்களால் இந்த உலகமே முழுமையான பாதுகாப்பை பெற்று இந்த பேரிடர்களில் இருந்து #மீளும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.

#அநுபூதி #அலங்காரம் அருளிய அருணகிரி
திருவடி போற்றியே #சித்தி பெறுவோமே
#அருளாளன் #அருணகிரி அருளிய அலங்காரம்
இருளெல்லாம் விலகி #இன்பம் உண்டாமே
  #புண்ணியன் அருணகிரி புகன்ற அலங்காரம்
எண்ணிய அணைத்தும் எளிதில் சித்தியே
  எந்தை அருணகிரி #இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய #சிவகதி பெறுவாரே
– சுபம் –

YouTube:
https://youtu.be/SVIL5Ytpyv0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *