04.05.2020 மகான் உமாபதி சிவாச்சாரியார் தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #உமாபதி சிவாச்சாரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
04.05.2020, #திங்கட்கிழமை

தவராசனே ஞானச் #சுடரே
தவசியாக மக்களிடை #அவதரித்து
#புவனம் காத்திடும் வகையில்
#புண்ணியம் வளர்த்திடும் அரங்கனே

அரங்கனே உன் #தவபலம் மெச்சி
அருளுவேன் தவபிரசன்ன ஆசி
#வரங்களென சார்வரி தகரின் திங்கள்
#வல்லமைபட மூவேழு திகதி #சோமவாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 21ம் நாள், 04.05.2020 #திங்கட்கிழமை)

வாரமதில் உமாபதி #சிவாச்சாரியார் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
அறமெனும் #ஞானம் அருளி
#அகிலத்தை காக்க வந்த ஞானி

ஞானியரின் #உபதேசங்கள் தன்னை
ஞானமாக #மக்கள் ஏற்றுவர
#தானமெனும் அன்னதானமதின்
தருமநெறியை மக்கள் #ஏற்றுவர

வருகவே மக்களுக்கு #குருவருள்
வரமாக வல்லமையாக மாறி
#பெரும்பேறு வந்தடையக் கூடும்
பேதமிலா #சமத்துவ நெறிபட

நெறிபட உலகமக்கள் #வாழ
நீதிமான்களாக #சத்திய நெறி கடைபிடிக்க
#வறுமை வெல்லும் வல்லமையும்
வளமும் #அடைந்து சிறப்பர்

சிறப்புதரும் #ஓங்கார ஞானி
#சிவராஜ யோகி அரங்கமகான் தருமம்
#மறுப்பின்றி மக்களெல்லாம் ஏற்று
மண்ணுலகில் #பரப்பி வருக

வருகின்ற தருமபலத்தின் வழி
வையகமே மாற்றம் காணும்
முருகப்பெருமான் அருளும் தயவும்
முழுமைபட கீர்த்தியும் கண்டு உலகோர்

உலகோர் #ஞானவான்களாவர்
#உண்மைநிலை தெளிவும் கண்டு
#கலகமிடர் இல்லா காப்பும்
கட்டுப்பாடு #கண்ணியம் மிக்கவர்கள் ஆக

ஆகவே #மாறுதல் கண்டு
அரங்கஞானி #ஞானவழி வருபவர்
மிகைபட #அழியாமை எனும்
மேலான #சக்தி பெற்று உயர்வர்

உயர்வுதரும் அரங்கா வாழ்க
#உலகமாற்றம் உன்னால் இனிதே
தயவால் கண்டடையும் சடுதி
தாமுரைத்த தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
#மகான் உமாபதி சிவாச்சாரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

எல்லையில்லா #தவங்கள் செய்த தவராசனே அருள் #ஞானச்சுடரே மகாதவசியாக மக்களோடு #மக்களாய் அவதரித்த #மகா ஞானியே மனிதராய் #தோன்றி, மக்களிடையே #வளர்ந்து இவ்வுலக மக்களை #காக்கும் வகையிலே உலகெங்கும் #புண்ணியங்களை வளர்க்கின்ற வகையிலே #தர்மங்களை அளவிலாது செய்து, உலகின் தர்ம #வளத்தை பெருக்குகின்ற #தவராசனே உமது தவ பலத்தை மெச்சியே தவபிரசன்ன ஆசிநூல் தனையே சார்வரி வருடம் சித்திரை மாதம் 21ம் நாள், 04.05.2020 திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே உமாபதி சிவாச்சாரியார் யானும் #உலகநலம் கருதி உரைக்கின்றேன் என்கிறார் மகான் உமாபதி சிவாச்சாரியார்.

#அறம் என்கின்ற ஞானத்தினை அருளி அறத்தின் மூலம் #இவ்வுலகை காக்க வந்த தர்மத்தின் தலைவன், மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகரின் உபதேசங்களை மக்கள் முருகப்பெருமானின் உபதேசங்களாக ஞான உபதேசங்களாக ஏற்றுக்கொண்டு #அன்னதானங்களை தவறாமல் செய்து வர தர்மத்தின் நெறியில் தவறாமல் நடந்துவர மக்களுக்கு குருவருளானது #வரமாக, வல்லமையாக கிடைத்து அவர்களுக்கு #பெரும்பேறு வந்தடையும். மக்களிடையே #சாதி, மத, இன, மொழி #பேதங்கள் இல்லாமல் சமத்துவத்துடன் நடந்து உலகமக்கள் #சகோதர மனப்பாங்குடன் நடந்து வர #நீதிமான்களாக ஆகி சத்திய நெறியை கடைப்பிடித்து வர அவர்கள் வறுமையை #வெல்லும் வல்லமையையும் வளத்தினையும் பெற்று சிறப்படைவார்கள்.

எல்லாவிதமான சிறப்புகளையும் தந்தருளும் ஓங்கார ஞானியே சிவராஜயோகியே ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #தர்மங்களை உலகமக்களெல்லாம் ஏற்று தாங்கள் செய்வதுடன் இவ்வுலகினில் #மற்றவர்களையும் செய்யச்சொல்லி இவ்வுலகெங்கும் தர்மங்களை #பரப்பிவர உலகெங்கும் தர்மம் பெருகி தர்மபலத்தின் மூலமாக இவ்வுலகமே #மாற்றமடையும் அவர்களுக்கு முருகப்பெருமானின் அருளும், தயவும் கிடைத்து பெருமைமிக்க வாழ்வை வாழ்ந்து ஞானவான்களாகி சிறப்படைவார்கள். அவர்களெல்லாம் உண்மை நிலைமையை உணர்ந்து, அறிவில் தெளிந்து, #சிறப்பறிவு பெற்று களகமில்லாத பாதுகாப்பு மிக்கவர்களாக #கட்டுப்பாடும்
கண்ணியமும் மிக்கவர்களாக ஆகி மாறுதலடைந்து அரங்க மகா தேசிகரை #பின்தொடர்ந்து ஞானவழியில் சென்று பெறுதற்கரிய #அழிவிலாமை எனும் #மகா சக்தியை பெற்று உயர்வடைவார்கள்.

உலகமக்களுக்கு எல்லா #முன்னேற்றங்களையும் தந்தருளும் அரங்கமகானே வாழ்க வாழ்க. #அரங்கா உம்மால், உமது தயவால் #உலகமாற்றம் விரைந்து உண்டாகிடும் எனக் கூறுகிறார் மகான் உமாபதி சிவாச்சாரியார்.
– சுபம் –

YouTube: https://youtu.be/1laQDpbno-g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *