04.04.2020 மகான் குலசேகர #ஆழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி மகான் குலசேகர ஆழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 04.04.2020, சனிக்கிழமை யுகம் காக்க வந்த தவசியே உலக மாற்றம் செய்ய வேண்டி #அகத்தியம் ஆறுமுகனார் சக்தியாக #அவதாரம் எடுத்துவந்த வள்ளலே #வள்ளலே வாழும் ஞானியே வல்லமைபட உன் பெருமை கூறி நல்விதமாய் அருள் பிரசன்ன ஆசி நாட்டிடுவேன் விகாரி #சேல் திங்கள் திங்களிலே இருபானீர்திகதி காரி வாரம் (விகாரி வருடம் பங்குனி மாதம் 22ம் நாள், 04.04.2020 சனிக்கிழமை) தேசிகனுக்கு குலசேகர ஆழ்வார் யானும் இங்கனமே உலகநலமுற உரைப்பேன் இயம்பிடுவேன் அரங்க ஞானி கண்டு கண்டுமே ஞான உபதேசமேற்று கருணைபட சக்தியாக #இறங்கி #தொண்டுவழி அரங்கன் சீடர்கள் #தேசமெங்கும் சேவை ஆற்றிட ஆற்றிட கலிவாழ் மக்களே ஆபத்தான #பேரிடர் துன்பம் பற்றி மரண #துன்பம் காணா பாதுகாப்பும் #ஞானபலமும் பெற பெறவே ஆயுள் கீர்த்திக்கு பேரழிவினை #வென்று சிறக்க #துறையூர் வாழ் ஞானி அரங்கன் தூய #சன்மார்க்க வழிகளை ஏற்று ஏற்று வந்தாலே போதும் எல்லா நன்மையும் கிட்டும் மாற்றம் தரும் தரும நெறியும் மக்கள் மறுக்கா ஏற்றுத் தொடர தொடரும் தருமம் துன்பம் போக்கும் தொடரும் தருமம் தேசம் காக்கும் இடரான இந்தச் சூழலில் இனிதே ஆளுமை கொண்ட தலைமைகள் தலைமைகள் தரும சிந்தைபட தயவை நோக்காய் கொண்டு சளைக்கா மக்களை காக்கும் சாமர்த்திய ஆளுமை கொண்டு கொண்டு ஞானவான்களை அனுகி குருவாக வணங்கி தீட்சை ஏற்று தொண்டுபுரிய இறை பலமும் தேச நலமும் மக்களுக்கு காப்பும் காப்பும் கூடி பேரிடர் விலகி கலியுகம் துன்பமில்லா வண்ணம் ஏப்புதல்பட ஞானயுகம் ஆகும் ஓதிவந்த அருள் பிரசன்ன ஆசி முற்றே – சுபம் முருகப்பெருமான் துணை மகான் குலசேகர ஆழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம் : துன்பமிக்க கலியுகத்தை மாற்றி ஞானயுகமாக்கி இவ்வுலக மக்களை காக்க வந்த மகா தவசியே இவ்வுலகினில் #உலகமாற்றம்தனை செய்ய வேண்டியே அகத்தியரின் சக்திகளையும் முருகப்பெருமானார் சக்திகளையும் ஒன்றுகூட்டி மகாசக்தியாக இவ்வுலகினில் அவதாரம் எடுத்து வந்த மகா ஞானியே #அளவிலா தர்மம் செய்த வள்ளலே ஆறுமுக அரங்கமகா தேசிகரே #அற்புதமிக்க உமது புகழினை இவ்வுலகமெலாம் கூறியே உலக நலன்கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 22ம் நாள், 04.04.2020 சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே #அருள்பிரசன்ன ஆசிநூல்தனையே #குலசேகர_ஆழ்வார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் குலசேகர ஆழ்வார். உத்தமமகா ஞானி ஆறுமுக அரங்கமகாதேசிகரை #முழு நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு #திருவடி பணிந்து வணங்கி அண்ணல் அரங்கரிடத்து ஞான #உபதேசம் ஏற்று #கருணை மூலம் ஆற்றலைப் பெற்று தொண்டு வழி அரங்கன் #சீடர்களெல்லாம் இந்த #தேசம் முழுதும் பரவி தொண்டுகளை செய்திட அரங்கன் #புகழ் பரப்பிட தர்மத்தினை நாடெங்கும் பரப்பிட அரங்கனின் #தொண்டர்கள் கூறும் செய்திகளை உலகமக்களும் ஏற்று கடைபிடித்துவர நல்ல மாற்றங்கள் உண்டாகும். கலியுக மக்களே உங்களுக்கு ஆபத்தான #பேரிடர்கள் அதன்வழியாக வரும் #துன்பங்களும் உங்களை அணுகாமல் இருக்கவும் #மரணங்கள் நேராமல் இருக்கவும் உங்களுக்கு அருள் #பாதுகாப்பு உண்டாகவும் ஞானபலம் பெருகவும் நீடிய ஆயுளை பெறவும் #தற்சமயம் உலகையே ஆட்டிப் படைக்கும் நச்சுக்கிருமிகளின் #பேரழிவிலிருந்து பாதுகாப்பு பெறவும் தூயநெறி உலகிற்கு அளித்து உலகை வழிநடத்தும் கலியுகஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் தூய ஞானநெறிக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தாலே போதுமப்பா. உலகமக்களாகிய உங்களுக்கு எல்லா நன்மையும் கிட்டும். மாற்றத்தை #ஏற்படுத்தி மனிதனை #மேம்படுத்தி கடவுளும் ஆக்கும் வல்லமைமிக்க தருமநெறியையும் மக்கள் #ஏற்று கடைபிடித்து வர அவர்கள் செய்த தருமம் துன்பத்தை போக்கும் அவர்கள் செய்த தருமம் அவர்கள் சார்ந்த #நாட்டை காக்கும் ஆதலினாலே துன்பமிக்க இந்த சூழ்நிலையிலே நாட்டை #ஆட்சி செய்பவர்கள் தர்ம சிந்தையுடன் நடந்து மக்களிடத்து தயவுடன் நடந்து #சலிப்படையாமல் தொடர்ந்து மக்களை காப்பதையே #குறிக்கோளாய் கொண்டு ஆட்சி செய்து வரவேண்டும். தர்மத்தின் வழி ஆட்சி செய்ய வேண்டுமாயின் ஆட்சி பொருப்பில் #உள்ளோர் ஞானவான்களை அணுகி அவர்களை குருவாக ஏற்று #தீட்சை உபதேசம் அடைந்து #தொண்டுள்ளதோடு செயல்பட இறைவனை நாள்தோறும் மறவாமல் #தொழுது வரவும் நாட்டின் நலம் பாதுகாப்பு பெறும் நாட்டு மக்களுக்கு தர்மத்தின் பாதுகாப்பு கிடைக்கும். நாட்டை #அண்டிய பேரிடரெல்லாம் விலகி இனி துன்பமில்லாத உலகமாக கலியுகம் மாறி ஞானயுகமாக ஆகிடும் என கூறுகிறார் மகான் குலசேகர ஆழ்வார். – சுபம் 1203-mahan-kulasekara-aazhvaar-aruliya-arul-prasanna-asi-nool-04.04.2020 Blogger: https://dailypalmleaf.blogspot.com/2020/04/04042020.html Facebook: https://www.facebook.com/tamilspiritual/posts/3537312902961759


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *