03.05.2020 மகான் இராமானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #இராமானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
03.05.2020, #ஞாயிற்றுக்கிழமை

#ஆறுமுக சக்தியே அரங்கா
#அண்ணலாய் மக்களை காக்க
ஆறுமுகனார் #அவதாரமாக வந்த
அரங்கனே உன் #தவபலம் மெச்சி

மெச்சியே #தவபிரசன்ன ஆசி
மண்ணுலகில் #சார்வரி #தகர்திங்கள்
#அச்சமற இருபான் திகதி #கதிர்வாரம்
(சார்வரி வருடம், #சித்திரை மாதம் 20ம் நாள், 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை)
அருளுவேன் இராமானந்தர் யானும்

யானும் உலகநலம்பெற #உரைப்பேன்
#உயர்வுதரும் நல்ல பாதுகாப்பு தரும்
ஞான தேசிகனார் ஞானவழிகளை
#நம்பகம் கொண்டு மக்கள் வர

வருகவே மக்களிடை உள்ள
#வக்ரகொடூர சிந்தை மாறும்
முருகா எனும் செப்தபம் கூட்ட
முழுமை ஞானம் வந்தடையும்

அடையவே அரங்கன் #காட்டும்
#அன்னதான நெறி முறையை
#தடையின்றி உலக மக்கள் ஏற்று
#தருமம் வளர்க்க காக்கவே

#காக்கவே பேரிடராக வந்தாலும்
#கலித்துன்பம் மிகுதி ஆனாலும்
#தாக்கமின்றி தருமவழியில் வர
#தரணியே பாதுகாப்பாக மாறும்

மாறுதலை செய்யவந்த #ஞானி
#மாதவசி அரங்கன் தரும்பலமும்
ஆறுதலான தவபலமும் #சேர்ந்து
அகிலத்தை #காக்கும் நிலையாக மாறும்

மாறுதலுக்கான உண்மை நெறியாம்
மக்களை காக்கும் #சன்மார்க்க
#ஆறுதல் தரும் தரும நெறியை
அனைவரும் #ஏற்று வந்திட

வந்திட #பிரணவக்குடிலை நோக்கி
#வல்லமை தரும் ஆசானிடம்
சிந்தைபட #தீட்சை ஏற்று
செபதபம் #நித்தம் செய்துவர

வருகவே யாவர்க்கும் #ஞானம்
வடிவேலன் தயவால் #பெருகி
#தரும சிந்தை தெளிவு திடம்
#தனித்துவம் கூடி ஞானிகள் ஆவர்

ஆகவே ஆறுமுகனாரின் பலம்
#அடைய அரங்க ஞானியரின்
யுகமாற்ற #சேவைவழி வாரீர்
உரைத்திட்ட தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் இராமானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

முருகப்பெருமானின் சக்தி வடிவமே அரங்கமகா தேசிகரே #மகாவல்லமை பொருந்திய #அண்ணலாய் ஆறுமுகப்பெருமானின் #அவதாரமாய் மக்களை #காக்கவே #வந்துதித்த அரங்கமகானே உமது அளவிலாத தவ பலத்தை #மெச்சி உமது வல்லமைகளை உலகறியக் கூறி உலக நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 20ம் நாள், 03.05.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே இராமானந்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் இராமானந்தர்.

மக்களை #நிலை உயர்த்துகின்றதும், நல்ல #அருள்பாதுகாப்பை தர வல்லதுமாகிய #உயர்ந்த நெறியாகிய #ஞானதேசிகனார் உபதேசித்த ஞான வழிகளை மக்கள் #முழுநம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு வாழ்வினில் #கடைபிடித்து வர மக்களிடையே உள்ள #வக்ரங்களும், #கொடூர சிந்தைகளும் #அரங்கர் அருளால் மாற்றம் அடையும். #முருகா என மனமுருகி ஜெபதபங்களை செய்துவர அவர்களுக்கு முழுமையான ஞானம் கிட்டும். ஆறுமுக அரங்கர் காட்டும் #அன்னதான நெறிகளை ஏற்று மக்கள் தொடர்ந்து செய்து வர உலகின் #தர்மம் வளர்ந்து தர்மபலம் பெருகி உலகினில் துன்பங்கள் #பேரிடராக வந்தாலும், கலியுகம் தனது வக்ரத்தினால் துன்பத்தை #மிகுதியாக்கினாலும், அந்தவித துன்பங்கள் எல்லாம் #தர்மவழி வருபவர்களுக்கு அத்துன்பங்களே #நன்மைகளாக மாறி தர்மவழிசெல்லும் #மக்களுக்கு பாதுகாப்பாக மாறிடும்.

இவ்வுலகினில் மிகப்பெரும் மாற்றங்களை செய்து உலகமாற்றம் செய்ய வந்த #யுகமாற்ற ஞானி மகா தவசி ஆறுமுக அரங்கரின் தர்மபலமும் #அரங்கர் #பல்லாயிரமாண்டு செய்த தவபலமும் இணைந்து இந்த உலகை காக்கின்ற #மகா சக்தியாக மாறுமப்பா.

உலகினில் நல்ல #மாற்றங்களை உண்டாக்க வல்ல உண்மை நெறியாகிய #சன்மார்க்க நெறியாம் #தர்மநெறியை உலகமக்கள் அனைவரும் ஏற்று கடைப்பிடித்து உலகமாற்றத்திற்காக அமைக்கப்பட்ட #ஞானபீடமாகிய #ஏழாம்படைவீடு #துறையூர் ஓங்காரக்குடிலை நோக்கி மக்கள் பயபக்தியுடன் பணிந்து வருகை தந்து வல்லமைகளை #வரமாக தந்தருளும் கலியுகஞானி

உலகப்பேராசான் ஆறுமுக அரங்கமகா தேசிகரிடத்து தீட்சை #உபதேசங்களை அடைந்து அரங்கரின் உபதேச வழி #நடந்து தினம் #தினம் மறவாமல் ஜெபதபங்களை ஞானிகளின் பேரில் செய்து வர அவர்க்கெல்லாம் முருகப்பெருமானின் தயவால் உண்மை #ஞானம் பெருகி தர்ம #சிந்தை பெருகி #அறிவில் தெளிவும், #திடமும் உண்டாகி #தனித்துவம் மிக்கவர்களாக மாறி #ஞானிகளாக ஆகிடுவர்.

ஆதலினாலே முருகப்பெருமானின் #அருள் பலத்தை பெற்றிட உலகமக்களே யுகமாற்ற ஞானி ஆறுமுக அரங்கரின் யுகமாற்ற சேவைகளிலே பங்குகொண்டு உண்மையுடன் தொண்டாற்றி செயல்படுங்கள் என அறிவுறுத்துகிறார் மகான் இராமானந்தர்.
– சுபம் –

YouTube: https://youtu.be/0eZy5OMDs44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *