03.04.2020 மகான் மதுரகவி ஆழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் மதுரகவி ஆழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
03.04.2020, வெள்ளிக்கிழமை

ஆறுமுகனார் சூட்சும சக்தியாக
அவதாரமாக வந்த அரங்கனே
மாறுதலை உலகில் செய்திட
மாதவமாக வந்த தேசிகனே

தேசிகனே உன்பெருமை கூறி
தெரிவிக்க அருள் பிரசன்ன ஆசி
ஆசிபட விகாரி சேலின் திங்கள்
அறிவிக்க மூவேழுதிகதி புகர் வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 21ம் நாள், 03.04.2020 வெள்ளிக்கிழமை)

வாரமதில் #மதுரகவி_ஆழ்வார் யானும்
வழங்குவேன் உலகோர் நலம்பெற
கோரமான #நச்சுக்கிருமி வழி
குவலயம் காணும் உயிர்பலி துன்பம்

துன்பம் சடுதி விலகியே
துரிதகதி பாதுகாப்புதுனை பெற
#துன்பம் போக்கும் #அரங்கன்வழி
தூயவழி சன்மார்க்க நெறிக்குவர

வருகவே வையகம் பாதுகாப்புபெறும்
வள்ளல் பூமியான பாரதம்
முருகப் பெருமான் அருளால்
முற்றிலும் துன்பம்விலகி சடுதி

சடுதி இயல்புநிலை காணும்
சன்மார்க்க நெறி கொண்டநல்
இடரில்லா மக்கள் வழிதனில்
இணையிலா சேவை பெருகிட

பெருகிட பாதுகாப்பு பெறும்
பேரிடரென இல்லா அகலும்
கரும வினையாக சூழ்ந்துவந்த
கிருமிவழி மரணத் துன்பங்கள்

துன்பங்கள் அனைத்துமினி
தேசிகனார் ஆசிதனை பெற
இன்பமான தருமத்தில் உதவி
ஏழாம்படைவீட்டில் தொடர்பு கூட்டி

கூட்டியே ஞான பூசை கலந்து
குறையிலா ஞான வழிகளுடன்
தட்டாது அரங்க ஞானியான
தவசியை வணங்கி தீட்சை பெற

தீட்சைபெற மாற்றம் உண்டு
தெய்வ பலமாகி காப்பு உண்டு
மாட்சிமைபட சீடர்கள் ஆகி
மக்களெல்லாம் வணங்கி வர

வருகவே மரணம் விலகும்
வாட்டமான நெருக்கடி அகலும்
தருமபலமாகி தமிழகம் இந்தியா முதல்
தரணியே அழிவிலா காப்புபெறும்
அருள் பிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை

மகான் மதுரகவி ஆழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

முருகப்பெருமான் சூட்சும #சக்திவடிவமாக அவதரித்து உலகமக்களை காக்க வந்திட்ட மகாஞானியே ஆறுமுக அரங்க மகாதேசிகனே இக்கலியுகத்தினின்று மக்களை #மீட்டு உலகப்பெருமாற்றத்தினை செய்திடவே வந்துதித்த மாதவனே மகாதவசியே ஆறுமுக அரங்க மகானே அற்புதம் மிக்க உமது பெருமைகளை உலகமெலாம் கூறியே உலக நலம் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 21ம் நாள் 03.04.2020 வெள்ளிக் கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே மதுரகவி ஆழ்வார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் மதுரகவி ஆழ்வார்.

துன்பம்மிக்க உயிர்பலி செய்யும் நச்சுக்கிருமி மூலமாக இவ்வுலகம் காண்கின்ற #உயிர்பலி துன்பம் நீங்க இவ்வுலக மக்கள் படும் துன்பங்கள் மக்களை விட்டு விரைந்து நீங்கிட ஞானிகளின் அருள் பாதுகாப்பை பெற்றிட உலக மக்கள் அணைவரும் துன்பம் போக்கின்ற ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் தூய்மையான சமரச சுத்த சன்மார்க்க நெறியினை ஏற்றுக்கொண்டு கடைபிடித்து வர வர இந்த உலகம் ஞானிகளால் அருள் பாதுகாப்பை பெறும் வள்ளல் பூமியாக தருமபூமியாக உள்ள பாரததேசத்தினிலே முருகப்பெருமானின் அருளினாலே தற்சமயம் உள்ள துன்பங்கள் எல்லாம் விரைந்து விலகி #இயல்புநிலையை அடைந்திடும். நாட்டினில் சன்மார்க்க வழியில் செல்லும் சன்மார்க்க #வாதிகளின் தொண்டுகள் பெருகிட நாடெங்கும் சன்மார்க்கம் தழைத்து பெருகி இந்த நாடே அருள்பாதுகாப்பை முழுமையாக பெறும் இதுபோன்ற பேரிடர்கள் வராமல் அகலும். நாட்டின் கர்மவினைபயனாக நாட்டினை சூழ்ந்திட்ட கிருமிகளால் உண்டாகும் மரணங்கள் அனைத்தும் இனிமேல் வாராது. முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் அருளாசியினை பெற்றிட மரணத் துன்பத்தில் இருந்து மீள்வார்கள்.

அரங்கமகான் ஆசி பெற்று அரங்கர் ஆற்றும் தானதருமப் பணிகளிலே தாராளமாய் பொருளுதவிகளைச் செய்து வருவதுடன் #ஏழாம்படைவீடு துறையூர் #ஓங்காரக்குடில் தொடர்பினைப் பெருக்கி ஆங்கே நடக்கின்ற ஞான பூஜைகளிலே கலந்து கொண்டு ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் திருக்கரங்களினாலே தீட்சை உபதேசம் அடைந்து அரங்கமகானை பின் தொடர்ந்து வரவர அவர்களது வாழ்வினிலே பல அற்புதமான மாற்றங்கள் உருவாகும் தெய்வீக பலம் பெருகி அருள் பாதுகாப்பை பெறுவார்கள்.

அவர்கள் எல்லாம் அரங்கமகா தேசிகனாருக்கு பெருமைமிக்க சீடர்களாக ஆகியே மக்கள் எல்லாம் அரங்கமகானை வணங்கி வரவர அவர்களை அண்டிய #மரண கண்டமெல்லாம் விலகி ஓடும். துன்பம் மிக்க #நெருக்கடிகள் எல்லாம் நாட்டை விட்டே அகன்று ஓடும். நாட்டின் தருமபலம் பெருகி தமிழகம்முதலாக தொடங்கி இந்திய தேசம் காப்பு பெற்று பின் உலகமெலாம் அழிவிலாத அற்புத பாதுகாப்பை பெறும் எனக்கூறுகிறார் மகான் மதுரகவி ஆழ்வார்.
– சுபம் –

https://youtu.be/bxvnO-KOwmM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *