02.12.2021 மகான் கழறிற்றறிவார் அருளிய துல்லிய ஆசி நூல் | Rama Rajashekhara Kazhatrarivar | Kazharitrarivar (Cheraman Perumal) Nayanar | thulliya jeeva nadi from ongarakudil

முருகப்பெருமான் துணை 

மகான் கழறிற்றறிவார் அருளிய துல்லிய ஆசி நூல் 

Rama Rajashekhara Kazhatrarivar | Kazharitrarivar (Cheraman Perumal) Nayanar | thulliya jeeva nadi from ongarakudil

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. 
02.12.2021 , வியாழக்கிழமை

1.ஞானத்தலைவன் அருளாசிபெற்ற 
ஞானியே ஆறுமுக அரங்கனே 
தான தரும பலம் கொண்டநல் 
தவராசனே ஞான தேசிகனே 

2. தேசிகனே உன்பெருமை கூறி 
தெரிவிப்பேன் துல்லிய ஆசி 
ஆசிதனை பிலவ தேள்திங்கள் 
அறிவிக்க மூவையோர்திகதி குருவாரம் 
( பிலவ வருடம் கார்த்திகை மாதம் 16 ம் நாள் , 02.12.2021 , வியாழக்கிழமை ) 
 
3. வாரமதில் கழறிற்றறிவார் யானும் 
வழங்குவேன் உலகோர் நலம்பெற 
சோரமிலா மக்கள் படைதனை 
சுத்தநெறி கொண்டு உருவாக்கும் 

4. உருவாக்கும் அரங்கன் தவபலம் 
உயர்வான அவதாரமாக இருக்க 
குருவெயென அரங்கனை நாடி 
குவலயத்தார் பணிந்து வருக 

5. வருகவே கலியுகத் துன்பங்கள் 
வையகம் விட்டு அகல நேரும் 
தருமவான் அரங்கன் காட்டும் 
தரும நெறி பரவி வருக 

6.வருகவே தரும பலத்தின் வழி 
வையகம் வளர்ச்சி காணும் 
முருகா எனும் செபதபங்கள் 
முழுமைபட எங்கும் ஒலிக்கவே 

7.ஒலிக்கவே உலகம் எங்கிலும் 
ஓங்கார நாதமாக காப்பாக 
அழியாமை சக்தி பரவி 
அகிலமே மாற்றம் காணும் 

8.காணவே இந்த அற்புதம் 
கந்தப் பெருமானே நடத்துவதால் 
ஞானம் வேண்டி வருபவர்கள் 
நம்பிக்கை வைத்து அரங்கன் வழி வர 

9. வருகவே எல்லா மாற்றமும் 
வரமாக அரங்கன் வழி வந்து 
முருகப் பெருமான் தலைமை ஏற்கும் 
முழுமை கண்ட ஞானவான்கள் 

10.ஞானவான்கள் இணைந்தபூமியாக 
ஞானிகளுடன் கலந்த பூமியாக 
ஞானதேசிகன் அருட்தயவுடன் 
ஞானசித்தர் ஆட்சிக் காலமும் 

11. காலமும் கனிந்து இனிதே 
கருணை மிக்க ஞான ஆட்சி 
உலகமெங்கும் கண்டு மாற்றம் பெறும் 
உரைத்திட்ட துல்லிய ஆசி முற்றே 
 -சுபம்

Rama Rajashekhara Kazhatrarivar  Kazharitrarivar (Cheraman Perumal) Nayanar  thulliya jeeva nadi from ongarakudil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *