02.05.2020 மகான் இராமதேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #இராமதேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
02.05.2020, #சனிக்கிழமை

வேலவனின் #சூட்சும சக்தியே
#வினைவெல்ல வந்த தவசியே
#காலனை வென்று காத்திட
#கலியுக மக்களை தேற்ற வந்த ஞானியே

ஞானியே ஆறுமுக #அரங்கனே
ஞாலமதில் #உன் தவபலம் மெச்சி
இனிமைபட #சார்வரி தகர் திங்கள்
இயம்பிடுவேன் மூவாறோர் திகதி #காரிவாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 19ம் நாள், 02.05.2020 சனிக்கிழமை)

வாரமதில் இராமதேவர் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
#போரென மக்களை #தாக்கிய
பேரிடர் #நச்சுக்கிருமி அல்லல்

அல்லல் #உயிர்பலி மிகுந்து
#அஞ்சி அகிலமே நடுக்கமுற
அல்லலான #இந்தவித துன்பநிலை
#அகன்று உலகமே அமைதிபெற

#அமைதிபெற பாதுகாப்பு பெற
#அனுகி பெருகும் உயிர்பலி அகல
#அமைதி தரும் அரங்கமகா #ஞானி
அறநெறியாம் #சன்மார்க்க நெறியை

நெறியை பின்பற்றி மக்கள் வர
#நிலைமைகள் பாதுகாப்பாய் மாறும்
#வறுமையை போக்கும் தருமமதை
வையத்துள் வளரும்படி செய்து

செய்துமே #பேராசை வழிகளை விட்டு
#சேவைவழி உலகோர் திரும்ப
அய்யமுற #உயிர்கொலை விட்டு
அனைவரும் தருமப்படி நடக்க

நடக்கவே உலகம் #சமத்துவமாக
#ஞானபண்டிதன் வழிபாட்டை செய்ய
#இடர்கள் அனைத்தும் விலகும்
இருந்துவரும் பேரிடர் #உயிர்பலி விலகி

விலகியே மக்களுக்கு #பாதுகாப்பு
வினவிட #திருவருள் துணைபட நடக்கும்
காலமதில் #ஆளுமை மக்களும்
கருணைபட நடந்து மக்களை நோக்கி

நோக்கி #நிவாரண உதவிகளாக
நிலைமைகள் #சீர் செய்யும்படி
தக்கதொரு #வாழ்வாதார தேவைக்கு
 தகுந்த சட்டங்கள் இயற்றி

இயற்றி #தருமப்படி நடக்கவே
எதிலும் ஆறுமுகன் வழிபாட்டுடன்
தயவுபட நடக்க #நிலைகள் மாறி
தரணியே அழிவிலா பாதுகாப்பு பெறும்
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் இராமதேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

முருகப்பெருமானின் #சூட்சும சக்தியை உலகமக்களின் #வினைகளை வென்று மக்களை காக்க வந்த மகாதவசியே #காலனாகிய மரணத்தை வென்று மக்களை காத்திட வந்துதித்த #மகா ஞானியே கலியுக மக்களை தேற்ற வந்த ஞானியே ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது தவபலத்தினை #மெச்சி உமது பெருமையை #உலகமெலாம் கூறி உலக நலம் கருதி சார்வரி வருடம் #சித்திரை மாதம் 19ம் நாள், 02.05.2020 சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல்தனையே இராமதேவர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் இராமதேவர்.

உலகமக்கள் மீது #போர் தொடுப்பது போல் நச்சுக்கிருமிகள் தாக்கி பேரிடரை உண்டாக்கி உலக மக்களை #துன்புறுத்தியும் உயிர்பலி #செய்தும் பேரிடராக மாறியுள்ளது ஆதலால் உலகினில் உயிர்பலி மிகுந்து உலகமே #அஞ்சி நடுக்கமுற்றுள்ளது. இப்படிப்பட்ட துன்பமயமான #நிலைகளெல்லாம் உலகினின்று விலகி உலகமே அமைதியடைய #அருள் பாதுகாப்பை பெற உலகத்தில் பெருகிக்கொண்டிருக்கும் உயிர்பலி நீங்கிட #வேண்டுமாயின் அமைதி தரும் வல்லமைமிக்க அரங்கமகா தேசிகரின் #அறநெறியாம் சன்மார்க்க நெறியினை உலகமக்கள் #பின்பற்றி வர உலகின் நிலைமைகள் எல்லாம் மாறி அருள் பாதுகாப்பை பெறும். வறுமையை போக்கும் தர்மத்தினை உலகெங்கும் பெருகிட செய்து மக்கள் தங்களிடம் உள்ள #பேராசைகளை விட்டு #விட்டு உலகமக்களுக்கு #தொண்டு செய்கின்ற தொண்டு வழி உலகோர் திரும்ப வேண்டும்.

உலகமக்களெல்லாம் #சந்தேகமின்றி உறுதியாக உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு #தர்மநெறிப்படி நடந்து வருவதுடன், முழுமுதல் தெய்வமாகிய #முருகப்பெருமான் வழிபாட்டினை தவறாமல் செய்து வரவர உலகினை பற்றிய துன்பங்களெல்லாம் விலகும். நச்சுக்கிருமியினால் உண்டாகும் பேரிடர்கள், #உயிர்பலிகள் எல்லாம் விலகி மக்களுக்கு பாதுகாப்பு #தெய்வத்தின் அருள் #துணையுடன் நடந்தேறும். இந்த வித துன்பமயமான காலத்திலே #ஆட்சி செய்கின்ற #ஆட்சியாளர்கள் மக்களிடத்து #கருணையுடன் நடந்துகொள்வதுடன் மக்களுக்கு தேவையான #நிவாரண உதவிகளையும் தாராளமாய் செய்து, மக்களுக்கு வாழ்வாதார தேவைகளுக்கு உகந்த சட்டங்களை ஏற்றி துன்பமான நிலைமைகளை சீர்செய்து தர்மத்தின் வழி நடந்து மக்களை காத்திட வேண்டி எந்த ஒரு செயலாகினும் ஞானத்தலைவன் முருகப்பெருமன் வழிபாட்டினை செய்து மக்களிடத்து தயவுடன் நடந்து வரவர நிலைமைகள் எல்லாம் விரைந்து #மாறி இவ்வுலகமே அழிவிலிருந்து மீண்டு பாதுகாப்பு பெறும் எனக் கூறுகிறார் மகான் இராமதேவர்.
– சுபம் –
YouTube: https://youtu.be/02GJX3kEpcc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *