02.04.2020 மகான் நம்மாழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் நம்மாழ்வார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல் 
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 
02.04.2020 , வியாழக்கிழமை.

கலியுக ஞானியே அரங்கா
கருணை வடிவாக வந்தநல் 
அழியாமை பெற்ற தவசியே
அரங்க ஞானியே உன் பெருமை கூறி

கூறியே அருள் பிரசன்ன ஆசி 
குறையிலா விகாரி சேல் திங்கள்
தெரிவிக்க இருபான் திகதி குருவாரம் 
(விகாரி வருடம் பங்குனி மாதம் 20ம் நாள் 02.04.2020, வியாழக்கிழமை) 
தேசிகனுக்கு நம்மாழ்வார் யானும்

யானும் உலக நலமுற உரைப்பேன்
உயர்வாக மக்களை நோக்கி
ஞானவான்கள் பாதுகாப்பு நடத்த
ஞானவழிகளை உலக மக்கள்

உலக மக்கள் நம்பி வருக
#உயிர்ப்பலி இனி நடக்கா வண்ணம்
உலகமே பாதுகாப்பு பெறும்
உலகை வழிநடத்தி காக்க

காக்க வந்த ஞானி அரங்கன்
#கட்டாய நெறியாக சன்மார்க்க நெறி
ஊக்கமுடன் ஏற்று நன்கு
உலக நலம் தரும் முருகப்பெருமான்

முருகப்பெருமான் வழிபாடுதனை
மனமுவந்து ஏற்று செய்துவர
தருமவழிகளை விடாது ஏற்று
தான தருமமுடன் வாழ்ந்து வர

வருகவே நடப்புகால சிக்கல்
வலுப்பெறா விலகி சடுதி 
பேருலகே பாதுகாப்பு பெறும்
பெருமைபட கலியுகம் மாறும்

#மாறுதலை செய்ய வந்த ஞானி
#மாதவசி எங்கள் அரங்கன்
ஆறுதலை பெறும் மக்கள்
ஆசி தீட்சை பெற்று வாழும் மக்கள்

மக்களெல்லாம் ஞானவான்களாகி
மண்ணுலகில் மரணம் வெல்லும்
ஆக்கமுடன் அழியாமை பெறுவர்
ஆளுமை தந்து காக்கும் ஞானி

ஞானியரின் தொண்டர்களாகி
ஞானயுகம் படைக்கும் படி 
இனிமைபட இணைந்து மக்கள் வர
எல்லாம் ஞானிகள் தயவென வணங்கிவர

வருகவே வையகம் மாறும்
வளம் பெறும் வல்லமை பெறும்
முருகன் அருளால் காக்கப்படும்
மொழிந்திட்ட அருள் பிரசன்ன ஆசி முற்றே.
– சுபம்.

முருகப்பெருமான் துணை 
மகான் #நம்மாழ்வார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

கலியுக மக்களை #மீட்க வந்த கலியுக ஞானியே, கருணையே வடிவமாக வந்துதித்திட்ட #மரணமிலா பெருவாழ்வை அடைந்திட்ட மகாஞான தவசியே, முருகப்பெருமானின் அவதாரமே, ஆறுமுக அரங்கமகா தேசிகரே அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலம் கருதி விகாரி வருடம் பங்குனி மாதம் 20ம் நாள் 02.04.2020 , வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே நம்மாழ்வார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் நம்மாழ்வார் .

உலகமக்களுக்கு ஞானவான்களாகிய ஞானிகள் #பாதுகாப்பை அளித்து வழிநடத்தி வருகின்றனர். ஆதலினாலே உலக மக்கள் ஞானிகள் #மீது நம்பிக்கை கொண்டும், ஞானிகள் வகுத்த #தூய ஞான #வழிகளில் நம்பிக்கை கொண்டும், ஞானவழியில் வந்து நடந்திட உலகினில் இனி உயிர்ப்பலி இல்லாமல் உலகமே பாதுகாப்பை பெறும்.

இந்த உலகினை காத்திடவே அவதாரமாக வந்துதித்திட்ட மகாஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய கட்டாய நெறியாகிய தூய #சைவநெறிக் கொள்கையை சன்மார்க்க நெறியினை உலக மக்கள் ஏற்றுக்கொண்டு உலகினையே அருள்பலத்தால் காக்கின்ற ஞானத்தலைவன் முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிபாடுகளைச் செய்து வருவதுடன், தினம் தினம் தவறாமல் வழிபாடுகளைச் செய்து வருவதுடன், தானதருமங்களை தவறாது செய்து வரவேண்டும். தானதருமங்களைத் #தாராளமாய் செய்து தருமவான்களாக ஆகி வாழ்ந்து வரவர, #நடப்பு காலத்தில் உலகினிலே நடந்து வருகின்ற பேரிடர் சிக்கல்களெல்லாம் வலுப்பெறாமல் நச்சுக்கிருமிகள் #வலுவிழந்து விரைந்து இந்தப் பேருலகமே பாதுகாப்பினை பெறும், பெருமையுடன் இந்தக் கலியுகம் விரைந்து மாற்றம் அடையும். 

#உலகமாற்றம் செய்யவே அவதாரமாக வந்துதித்த அவதார ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனார் மாதவசி எங்கள் அரங்கமகா தேசிகனார் ஆசிகளை ஆறுதலை தீட்சை உபதேசங்களைப் பெற்றிட்ட மக்களெல்லாம் ஞானவான்களாக ஆகியே இவ்வுலகினில் மரணத்தை வெல்லும் ஆக்கமும் ஊக்கமும் பெற்று சிறப்படைவார்கள். #ஆளுமை திறனை அறிந்து வளர்த்து காக்கின்ற மகா ஞானி ஆறுமுக அரங்க மகானின் அருட்தொண்டர்களாக ஆகி அரங்கரின் ஞானயுக படைப்பில் பங்குகொண்டு தொண்டுகளை செய்து அரங்கமகானை பின்தொடர தொடர #நடப்பதெல்லாம் ஞானிகள் தயவு என ஏற்றுக் கொண்டு தினம்தினம் தவறாமல் ஞானிகளை வணங்கி வரவர, இந்த உலகமே #மாற்றம் அடையும், எல்லா வளமும் பெறும் சர்வ #வல்லமை பெறும். முருகப்பெருமானின் அருளினாலே இவ்வுலகம் காக்கப்படும் எனக் கூறுகிறார் மகான் நம்மாழ்வார். 
– சுபம்.1201-mahan-nammaazh-aazhvaar-aruliya-arul-prasanna-asi-nool-02.04.2020

YouTube 
https://youtu.be/SH_5LByfIUM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *