01.05.2020 மகான் இராமலிங்கசுவாமிகள் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான் #இராமலிங்கசுவாமிகள் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
01.05.2020, #வெள்ளிக்கிழமை

#உழைப்பவர் தமை காக்கும் குருவே
உண்மை ஞானம் தந்த #குருவே
#பிழையில்லா உன் நெறியை
#பின்பற்றி வரும் மக்களுக்கு

மக்களுக்கு மரணமிலா #பெருவாழ்வு
மண்ணுலகில் அருளும் #ஞானகுருவே
ஊக்கமுடன் #உன்தவபலம் மெச்சி
உரைத்திடுவேன் #தவபிரசன்ன ஆசி

ஆசியை சார்வரி தகரின் திங்கள்
அருளுவேன் மூவாறுதிகதி #புகர் வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 18ம் நாள் 01.05.2020 வெள்ளிக்கிழமை)
#ஆசிதனை இராமலிங்கசுவாமிகள் யானும்
#அகிலமே சிறப்புற உரைப்பேன்

உரைக்கவே கலியின் #துன்பம்
உயர்ந்து பேரழிவாக #பரவிவர
#வைரசு நச்சுக்கிருமி வழி
வையகமே பேரிடரை கண்டுவர

வருகின்ற இந்த கலித்துன்பம்
வளரா #கட்டுப்பட வேண்டுமாயின்
#தருகின்ற தாராள குணமுடன்
தருமசிந்தை கொண்டு மாறுங்கள்

மாறுதலான #மன பக்குவமும்
மக்களிடை எவ்வித #பேதம் கொள்ளா

#ஆறுதல் தரும் சமத்துவ குணமும்
அருள்தயவுமிக்க #ஜீவகாருண்யமும் கொண்ட

கொண்ட #நிலைக்கு வாருங்கள்
குறிப்பாக #உயிர்கொலை தவிர்த்து
தொண்டுபட சைவ #நெறி ஏற்று
தேசிகன் #ஞானவழிக்கு வந்து

வந்துமே #ஞானதீட்சை பெற்று
வணங்கி #முருகா எனும் செபம்
சிந்தை முழுக்க செய்து கொண்டு
#சொல்லால் செயலால் பிறர்க்கு #இன்னல் தரா

தரா #தருமநெறிபடி வாழ
தவறியும் #ஊழல் வழி செல்லா
தாராளமாக ஆளுமை மக்களும்
#தன்னலம் கருதா சேவை ஆற்ற

ஆற்றலே அறமெனும் #சக்தி
அகிலமெங்கிலும் #பரவிநன்கு
ஆற்றல்பட ஆறுமுகனாரின்
அருள் தயவும் பரவி சடுதி

சடுதி கலித்துன்பமான பேரிடர்
#சர்வநாசமாக நசிந்து விலகி
இடரிலா பேருலகே #பாதுகாப்பு பெறும்
இயம்பிய தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் #சாரம் :

உழைக்கும் வர்கமாகிய #உழைப்பாளிகளை காக்கின்ற #மகாகுருவே உலகிற்கு #உண்மை ஞானத்தினை அருளி வழிநடத்தும் மகாஞானகுருவே குற்றமற்ற உன் நெறியை #ஏற்று கடைபிடித்து வருகின்ற மக்களுக்கு மரணமில்லா பெருவாழ்வினை அருளுகின்ற ஞானகுருவே அற்புதமான உன் தவபலத்தினை மெச்சியே உலகமெலாம் உமது #பெருமை கூறி உலகநலன் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 18ம் நாள், 01.05.2020 வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசிநூல் தனையே இராமலிங்க சுவாமிகள் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மாகன் இராமலிங்க சுவாமிகள்.

இக்காலத்திலே கலியுகத்தின் #கோரதாண்டவம் உலகெங்கும் பேரழிவாக #பரவி #நச்சுக்கிருமி corona virus வாயிலாக பெரும் துன்பத்தை தருவதோடு உயிர்பலியையும் உண்டாக்கி மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. இப்படிப்பட்ட கலியுகத்துன்பம் மேலும் வளராமல் கட்டுப்பட வேண்டுமாயின் உலகமக்களே நீங்கள் எல்லாம் பிறருக்கு #கொடுத்து மகிழும் தாராளகுணத்துடன் நடந்து தாராளமாய் தர்மங்களை செய்து வாருங்கள். நீங்கள் தர்மசிந்தைக்கு மாறி மனப்பக்குவத்துடன் நடந்து கொண்டு மக்களிடையே எந்தவித #பேதாபேதமும் இல்லாமல் சமத்துவ குணத்துடன் நடந்து அருள் தயவுமிக்க ஜீவகாருண்யம் மிக்க நிலைக்கு வாருங்கள். குறிப்பாக உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து, சைவ உணவை கடைப்பிடித்து உலக உயிர்களுக்கு #தொண்டுகள் செய்து தேசிகனார் கூறும் ஞானவழியினை ஏற்று கடைப்பிடித்து வருவதுடன் #ஞானகுரு அரங்கரிடத்து ஞான #தீட்சை பெற்று அரங்கர் கூறும் உபதேசப்படி நடந்து #முருகா எனும் ஜெபதபங்களை தினம்தினம் தவறாமல் செய்து வருவதுடன் சொல்லாலும் #செயலாலும் பிறர் வருந்தாதவாறு நடந்து தர்மநெறிப்படி வாழ வேண்டும். #நாட்டை ஆள்பவர்கள் தவறுதலாகக் கூட ஊழல் வழியில் செல்லாமல் தாராளமாக நடந்துக்கொண்டு தன்னலம் கருதாமல் மக்களுக்கு #சேவை நோக்குடன் செயல்பட உலகினில் #அறம் என்கிற சக்தியானது உலகமெங்கும் #பரவி நன்கு ஆற்றல் பெருகி முருகப்பெருமானின் அருள் தயவும் பெருகி விரைந்து இவ்வுலகை பற்றியுள்ள கலியுகத்துன்பமாகிய #பேரிடர் சர்வமும் அழிந்து முற்றிலும் உலகை விட்டு விலகி இந்த உலகமே பாதுகாப்பு பெறும் எனக் கூறுகிறார் மகான் இராமலிங்க சுவாமிகள்.
– சுபம் –

YouTube: https://youtu.be/rlKJHTUsA3E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *