மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் 335

 முருகப்பெருமான் துணை

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் 335 சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 29.08.2020, சனிக்கிழமை 1.ஞானசித்தே ஆறுமுக அரங்கா ஞானியர்கள் துணைகொண்ட ஞான தேசிகா தானதர்மத்தைக் கொண்டே உலகை மாற்ற தர்மசாலை கொண்ட ஆறுமுக அரங்கா அரங்கனே உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் 2.அருளுவேன் ஞான அறிவுரை ஆசிதன்னை வரங்கள் தந்து உந்தனுள் யான் வல்லமை கூட்டி வருகின்ற மக்கள் அனைத்து பேருக்கும் 3. அனைவருக்கும் அருளோடு தீட்சைபலம்தந்து

அறம் வளர்த்து அன்னவர்களை ஞானியாக்கும் வரம் தந்து உன்வழி அருளிவர வையகத்தில் உன்னை காணும் மக்களுக்கெல்லாம் 4.மக்களுக்கெல்லாம் ஆறுமுகன் என்னருள் கிட்டி மறுமை மரணம் வெல்லுகின்ற சக்திகூடி தேக்கமின்றி ஞானயுக மாற்றம் தேசிகன் உன்வழி தொண்டர் படையாகக்கூடி 5.கூடியே சடுதி உலகமாற்றம் குறையில்லா இனிதே நடந்தேறக்கூடும் வடிவேலன் யான் பெருந்துணையாக வல்லமையூட்டி உந்தனுக்கு சக்தியாய் இருக்க 6. இருக்கவே அரங்கன் நீ நித்தம் நித்தம் என் நாமஜெபத்தை சொல்லும் பொழுதிலெல்லாம் கருத்தாக உலகமாற்றத்திற்கு உண்டான கால அளவு கனிந்து மிகுதியாகி வருகுதப்பா 7. அப்பப்பா அரங்கனே என்று உன் நாமஜெபத்தை அரங்கன் உன் வழி தீட்சை பெற்ற மக்கள் சொல்ல சொல்ல
வரங்கள் கூடி கலியுகம் சடுதி மாற்றம் வல்லமைபட ஞானயுகமாக மாறக்கூடும் 8. கூடுதலான சக்தியூட்டி அரங்கன் உன் சேவைகளை குருபரன் யான் காத்துவருதலாலே நாடெங்கிலும் இந்த சக்தி பரவபரவ ஞானயுகமாற்றம் சடுதி காணக்கூடும் 9. கூடவே அரங்கனே குமரகிரி எல்லைத்தொட்டு குறிப்பாக கூறிடுவேன் உலகம் எங்கிலும் சரவணச்சுடரின் ஒளி ஆற்றலாக பரவி தூய்மை செய்து
அகிலத்தை ஞானியர்கள் நிறைந்த ஞானபூமியாக்கி 10.ஆக்கியே கலியுகம் சடுதி மாற்றம் அரங்கன் உன் தவத்தால் காணக்கூடும் ஆக்கம் தந்து ஆறுமுகன் உந்தன் வழியே அற்புதத்தை நடத்தி உலகோரை மகிழ்விப்பேன் ஞான அறிவுரை ஆசி முற்றே – சுபம் –


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *