மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 334

முருகப்பெருமான் துணை
துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்
பாகம்: 334 

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
28.08.2020, வெள்ளிக்கிழமை

1. ஞானச்சுடரே ஆறுமுக அரங்கா

ஞானிகள் துணை கொண்ட ஞானதேசிகா 
ஞானபண்டிதன் யானும் உமக்கு ஞான அறிவுரை ஆசி 
நாட்டிடுவேன் சார்வரி வேங்கை திங்கள் தன்னில்

2. தன்னிலே அரங்கனின் அவதார நோக்கம்
தரணியில் என் துணைபட அரங்கேறக்கூடும்
மண்ணுலகில் மீட்டு காக்கின்ற அரங்கன் சேவை
மகத்துவம்பட என்னருளால் வெற்றி பெறக் கூடும்

3. கூடுமே அரங்கனே சிறந்த ஞானி எனும்
குறையில்லா உண்மை சூட்சுமம் குவலயம் எங்கும் 
ஈடேறும் எந்தன் அருள் துணையால் இனிதே
யுகத்தில் அரங்கனை வணங்குகின்ற எல்லா சீடர்கட்கும் 

4.சீடர்கட்கு ஆறுமுகன் என் துணை காப்பாக மாறும் 
சித்திகளும் அவர்களுக்கு ஈதூழில் கைகூடும்
தடையின்றி தர்மத்தை தொடர்ந்து வரும்
தவராஜன் வழிவரும் மக்கள் அனைவருக்கும்

5. அனைவருக்கும் மும்மலக் குற்றங்கள் நீங்கி 
அனைவருக்கும் ஞானிகளாக உண்டான வாய்ப்பும்
இணையில்லா எந்தன் சக்தியால் கைகூடும்
ஈடேரும் அரங்கனை தொடர்ந்து வரும் புண்ணிய பலத்தால்

6. புண்ணியபலத்தால் கலியுகத்தோர் பெரும்பேறு கண்டு
புகழடைவர் அரங்கன் நாமஜெபத்தை சொல்வதாலே 
எண்ணியவண்ணம் சகலகாரியங்களும் வெற்றியடைந்து 
யுகத்தில் அரங்கன் தொண்டர்கள் என்போரெல்லாம் 


7.எல்லோரும் ஞானயுகமாற்ற காலத்தில்
இயம்பிடுவேன் தடையின்றி பங்களிப்பு பெற்று 
வல்லமை பெற்று ஞானவான்களாக சிறந்து 
வையகத்தை ஞானயுகமாக மாற்றி மகிழ்வு பெறுவர்
 ஞான அறிவுரை ஆசி முற்றே

                                                   -சுபம்-

https://youtu.be/hpeEqY2sVyQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *