மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 624

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் 

இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் 

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 624

 சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
14.06.2021 , திங்கட்கிழமை 
பிரணவ சக்தியே அரங்கா வாழ்க 
பிரபஞ்சத்தை காக்கவந்த தேசிகா வாழ்க 
சரவணச்சுடரேற்றி இந்த கலியுகத்தில் 
சற்குருவாய் உலகோர்க்கு ஞானம் அருளும் குருராஜா வாழ்க 
வாழ்கஎன வாழ்த்தி சுப்ரமணியர் யானும் 
வழங்குவேன் அரங்கன் உமக்கு ஞான அறிவுரை ஆசி 
ஊழ்வெல்லும் மகா சக்தி படைத்த 
உயர் ஞானியே ஆறுமுக அரங்கனே 
அரங்கனே உன் அவதாரம் இந்த பிறவி இந்த யுகத்தில் 
உயர்வாக வெற்றி காணக்கூடும் 
தயவாக நீ கைக்கொண்டுள்ள தர்மம் 
தரணியையே தர்மலோகம் ஆக்கி பாதுகாப்பு உண்டுபண்ணும் 
உண்டாக்கும் உன் கொள்கையும் தர்மமும் 
உலகோர்க்கு சர்வ ஞானமும் தந்து 
கண்டுரைப்பேன் பேரிடர் துன்பமில்லா 
கலியின் அனைத்து சிக்கல்களும் அகன்றோடி 
அகன்றோடி ஞான லோகமாகும் 
அற்புதங்கள் அரங்கன் உன் அவதாரத்தால் நடந்தேறும் 
ஏற்புகொண்டு உந்தன்வழி உலகோர் வரவர 
இந்த உலகம் பெருமாற்றம் காணக்கூடும்
கூடவே அரங்க ஞானி நீ காட்டக்கூடிய 
குறையில்லாத குருமார்க்கம் உலகமெங்கும் பரவ 
நாடெங்கிலும் ஞானவழி உலகோர் வந்து 
ஞாலமதில் ஞானிகளாகி உலகமக்கள் 
மக்களெல்லாம் அரங்கன் உன் தலைமை ஏற்க 
உயர்வான ஞான ஆட்சி கண்டு 
தேக்கமின்றி கடைத்தேறி அவரவரும் 
தேசிகன் உன் வழி திருவருள் பெற்று சிறப்பர் 
சிறக்கவே அரங்கனுள் யானிருக்க 
சித்திகளும் அரங்கன் தொடர்பில் வந்த அன்பர்கட்கும் 
உத்தமமாய் குருமார்க்கம் தொடரும் உலக மக்கள் அனைவருக்கும் 
உயர் ஞானம் ஈதூழே சித்திக்கும் ஆறுமுகன் என் தயவால் 
ஞான அறிவுரை ஆசி முற்றே 
-சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *