மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 625

முருகப்பெருமான் துணை

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் துறையூர்
ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 625 
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
15.06.2021 , செவ்வாய்கிழமை 
1 . மகா சூட்சும குருராஜனே மண்ணுலகை 
காக்க வந்த தவராஜனே யுகமாற்றம் 
செய்தே தீருவேன் என உலகோருக்கு 
சன்மார்க்கம் விதைத்து அருளுகின்ற ஞானதேசிகனே 
2. தேசிகனே உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் 
இனிதே தெரிவிப்பேன் ஞான அறிவுரை ஆசி 
ஆசிதந்து உந்தனுள் யானிருக்க ஆற்றல் வேண்டி உன்னை நாடி வரும் மக்களுக்கு வாசியோக வல்லமையோடு சர்வபலமும் வழங்கி வடிவேலன் யானும் அருள்வேன் 3 . அருளவே அரங்கனை குருவாய் கொண்ட மக்களுக்கு அழியாமை சக்தி சடுதி உறுதியாகும் மிகைப்பட அரங்கன் சொல் செயல்கள் வழி மறையாக ஏற்று மண்ணுலகில் தொடரும் மக்களுக்கு 4. மக்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு மக்களுக்கு மறுமை வெல்லக்கூடிய மகாசூட்சும பலமும் ஆக்கமுடன் ஆறுமுகன் யான் தந்து அவர்களெல்லாம் அழியாமை பெற்று சிறக்க அருள்புரிவேன் 5 . அருளவே அரங்கன் படைகள் கலியுகத்தில் ஆறுமுகன் என் படைகளாக சிறந்து இருள் நீக்கி சரவணச்சுடரேற்றி ஏழாம் படைவீடு எனும் சக்தி மூலமாக 6 . ஆகவே உலகமாற்றம் செய்து இந்த கலியில் அரங்கன் வழி ஞான ஆட்சி மலரக்கூடும் வகையான மக்கள் படைகள் வந்து இணைந்து வையகம் வடிவேலன் என் தலைமையில் இயங்க நேரும் 7. நேர்மைகொண்டு அரங்கனை தொடரும் மக்களுக்கே நிலவுலகில் பேரிடர் அனுகாத பாதுகாப்பும் காலனை வெல்லும் சக்தியும் சூட்சும பலமும் கூடி கலியில் அவர்களெல்லாம் ஞானிகளாகி சிறக்க நேரும் ஞான அறிவுரை ஆசி முற்றே -சுபம்
2 ஐயன் வேலவன் அடியினைப் போற்றிட வையகம் போற்ற வாழ்வார் நலமே ! பற்றறுத்த வேலவன் பதத்தை பற்றிட நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன் ! ஆட்சிதான் மாற்றமும் அருளுவான் வேலனும் மாட்சிமை மிக்க மக்கள் வாழவே ! துறையூர் ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20 கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம் . இனிவரும் காலங்களிலும் முருகப்பெருமான் துணையுடன் மேன்மேலும் சிறப்பாக அன்னதானம் செய்வோம் . – ஆறுமுக அரங்கமகா தேசிகர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *