மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் 626

முருகப்பெருமான் துணை 
இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் 

இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் 

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் 

பாகம் 626 
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , MA , B.Ed. , 
16.06.2021 , புதன்கிழமை 
கருணைபட வந்த அரங்கனே 
கலியுகத்தை மீட்கவந்த தேசிகனே 
ஆறுமுகன்என் அவதாரமாக இந்தபேருலகில் 
அரங்கனாய் வந்துபிறந்த கலியுகத்தின் குருவே 
2 குருவே குருராஜனே அரங்கனே 
குவலயத்தில் உந்தனுக்கு சுப்ரமணியர்யானும் 
திரு அருள்பட ஞான அறிவுரை ஆசிதன்னை 
தெரிவிப்பேன் பிலவ மிதுனதிங்கள் தன்னில் 
தன்னிலே அரங்கன் தர்மம் உலகை மாற்றும் 
தவசி அரங்கன் கொள்கை இந்தஉலகை தேற்றும் 
மண்ணுலகம் அரங்கா எனும் நாமஜெபம் போற்ற 
மகத்துவம்பட மாற்றமும் நல்லபாதுகாப்பும் பெறக்கூடும் 
4. கூடவே அரங்கன் கொள்கையாக ஏற்று 
குவலயத்தார் ஞானிகள் பூஜை செய்துகொண்டு 
நாடெங்கிலும் தர்மம் பரப்பிட 
ஞானவான்கள் துணைக் கூடி 
கூடியே உலகோரில் பலர் ஞானிகளாகி 
குருராஜன் விரும்புகின்ற ஞான ஆட்சிக்காலம் 
ஆறுமுக அரங்கன் தயவாலே 
ஆளுமைகளெல்லாம் நல்ல ஞானநிலைக்கு வந்து 
6. வந்துமே அற்புதங்காணும் 
வல்லமைபட ஞான ஆட்சி மலரும் 
மலருமே அரங்கன் ஞானத்தாலும் 
மகத்துவமான உபதேசத்தாலும் வெற்றிகொண்டு 
7. வெற்றிகொண்டு கலியுகம் ஞானயுகமாக மாற்றம்பெறும் 
விளம்பிட அரங்கனை தொடர்ந்து உலகமக்கள் 
களங்கமற தொண்டாற்றி ஞானவழி 
கடைத்தேறுவோம் எனும்நம்பிக்கையோடு உறுதிபடசெயல்பட 
செயல்பட இந்த அற்புதம் நடக்கும் 
ஜெகமெங்கும் பெரும்மாற்றம் நிகழும் 
தயவுபட அரங்கனைநோக்கி தொடரதொடர 
தரணியே பேர் அற்புதங்காணும் 
ஞான அறிவுரை ஆசி முற்றே 
-சுபம் 
ஐயன் வேலவன் அடியினைப் போற்றிட 
வையகம் போற்ற வாழ்வார் நலமே 
பற்றறுத்த வேலவன் பதத்தை பற்றிட 
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன் ! 

ஆட்சிதான் மாற்றமும் அருளுவான் வேலனும் 
மாட்சிமை மிக்க மக்கள் வாழவே ! 

துறையூர் ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20 கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம் . இனிவரும் காலங்களிலும் முருகப்பெருமான் துணையுடன் மேன்மேலும் சிறப்பாக அன்னதானம் செய்வோம் .

– ஆறுமுக அரங்கமகா தேசிகர் .

துறையூர் ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20 கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *