மகான் சுப்பிரமணியர் | அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் | பாகம் – 610

 Facebook: https://www.facebook.com/olaisuvadi
Twitter: https://twitter.com/vaalaidevi
Blogger: http://tamillifedictionary.blogspot.in
Youtube full videos: https://www.youtube.com/arangartv
Ongarakudil Olai chuvadi: https://www.ongarakuidl.in
To read Ongarakudil Books: https://www.ongarakudil.org
Whatsapp: https://wa.me/919444175629

மகான் சுப்பிரமணியர் | அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் | பாகம் – 610
1 முருகப்பெருமான் துணை 
இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் 
இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் 
துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 
மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் 
பாகம் : 610 
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
31.05.2021 , திங்கட்கிழமை 
1. கந்தவேலன் எந்தன் மகாசக்தியாக 
கலியுகத்தின் நல் #அவதாரம் புரிந்தநல் 
சிந்தைப்பட மாதர்மம் செய்துகொண்டு 
சித்திகளை மண்ணுலகோர்க்கு அருளவந்த அரங்கனே 
2. அரங்கனே உந்தனுக்கு #சுப்ரமணியர் யானும் 
அருளுவேன் ஞான அறிவுரை ஆசி 
வரங்கள்தந்து யானே உமக்குள் இருந்து 
வையகத்தை மாற்றும் அற்புதம் நடத்திவர 
3. வருகின்ற என்சக்தி மூலமாகவே 
வையகத்தை நீ தொண்டர்களுக்கும் வரமாகதந்து 
தருகின்ற சக்தியோடு தர்மத்தின் மூலம் 
தரணியில் தன்னார்வதொண்டை விதைத்து 
4. விதைத்து உலகமக்கள் வழி அறுவடைசெய்து 
இணையில்லாத #ஞானயுகம் படைக்க 
ஆதரவாய் ஞானிகள் துணைபட இயங்கும் 
அரங்கனே உன்கொள்கை வெற்றிகொள்ளும் 
5. வெற்றிகொள்ளும் உன்தர்மம் சடுதி இந்தகலியுகத்தில் 
#வேலவன் என்வெளிப்பாடாக உறுதியாகி 
ஆற்றல்பட உலகத்தை #பாதுகாக்கும் 
அழியாமை என்கின்ற மகாசக்தியை மக்களுக்குத்தந்து 
6. தந்துமே உலகோர்க்கு மரணத்தை விரட்டி 
தக்கபடி #மரணமில்லா_பெருவாழ்வு தந்தருளும் 
எந்தன் சக்தியாக உன்னை எண்ணி 
எந்த லோகத்தில் உன்நாமஜெபம் ஜெபிக்கப்படுகின்றதோ 
7. படுகின்ற தேசம்தன்னில் மக்களுக்கு #பாதுகாப்பு 
பாடிடுவேன் அந்தவித தேசம் தன்னில் 
இடரின்றி என் ஆளுமைபட மாற்றங்கண்டு இனிதே 
ஞான ஆட்சிக் காலம் உதயம் ஆகும் 
8 . ஆகவே #அரங்கன் வழிவழி மக்கள்வர 
அறத்தின் வழிவழி மக்கள்வர 
யுகமே சடுதி மாற்றம்பெறும் 
உரைத்திட்ட ஞான #அறிவுரை ஆசிமுற்றே 
-சுபம் 

#ஐயன் வேலவன் அடியினைப் போற்றிட 
#வையகம் போற்ற வாழ்வார் நலமே ! 
பற்றறுத்த வேலவன் பதத்தை பற்றிட 
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன் ! 
ஆட்சிதான் மாற்றமும் அருளுவான் வேலனும் 
#மாட்சிமை மிக்க மக்கள் வாழவே ! 
துறையூர் #ஓங்காரக்குடில் மூலமாக ஆசான் முருகப்பெருமான் ஆசியால் 20 கோடி பேர்களுக்கு மேலாக தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம் . இனிவரும் காலங்களிலும் #முருகப்பெருமான் துணையுடன் மேன்மேலும் சிறப்பாக #அன்னதானம் செய்வோம் . 
– ஆறுமுக அரங்கமகா தேசிகர் .
https://youtu.be/fq3glRjVRsM
mahan subramaniyar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *